கருணாநிதி மூலம் கேம்... வென்றதா எடப்பாடியார் சாணக்கியத்தனம்?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 09 Aug, 2018 03:54 am
did-cm-edappadi-s-plan-refusing-marina-memorial-for-karunanidhi-workout

தமிழகத்தின் மூத்த தலைவரும் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்று அறிவித்ததின் மூலம் எடப்பாடி பழனிசாமி சாணக்கியம் வென்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் புழங்காகிதம் அடைந்து வருகின்றனர். கருணாநிதிக்கு மெரினா கிடைத்தவிட்டது... ஆனால், எடப்பாடியாரின் சாணக்கியத்தனம் வென்றதா என்பது மிகப்பொிய கேள்விக்குறிதான்.

தி.மு.க தலைவரை அடக்கம் செய்ய மொினா கடற்கரையில், அண்ணா சமாதிக்கு அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அந்த இடத்துக்கு அருகில்தான் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் துரைசாமி, பா.ம.க பாலு, டிராஃபிக் ராமசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கு காரணமாக ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் சிக்கல் இருந்த வந்தது. கருணாநிதிக்கு இடம் இல்லை என்றதன் மூலம், தி.மு.க தரப்பு பதறி அடித்துக்கொண்டு தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றது. மற்றவர்களும் வாபஸ் பெற்றனர். இதனால், இனி ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதில் சிக்கல் இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கருதினார்

.

கருணாநிதிக்கு கேட்ட இடம் என்பது கூவம் ஆற்றங்கரையில் வரக்கூடிய பகுதி. ஆனால், ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியும் சரி, நினைவு மண்டபம் கட்டப்படும் இடமும் சரி கடற்கரை மண்டலப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கும், கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடைசியில், ஐந்து பேரும் வழக்கை வாபஸ் பெற்றனர். ஆனாலும் கூட இடம் அளிக்க முடியாது என்று முரண்டு பிடித்தது தமிழக அரசு.

அதற்காக சட்ட ரீதியான விளக்கத்தை அளிப்பதற்கு பதில், சோஷியல் மீடியாவில் பரவிய அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை வாதங்களாக வைத்தனர். தமிழக அரசின் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உடனுக்கு உடன் சூடான பதிலை அளித்தனர். காமராஜருக்கு அவர் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இடம் கேட்கவில்லை என்பதும் ஜானகி ராமச்சந்திரன் தரப்பில் இருந்து கடற்கரையில் இடம் கேட்கப்படவே இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கடைசியில், இடத்தை ஒதுக்கி, தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்மூலம் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஈஸியாக மண்டபம் கட்டிவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க தரப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால், டிராஃபிக் ராமசாமி கருணாநிதியின் உடல் அடக்கத்துக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறவில்லை என்றும் உறுதியாக கூறிவிட்டார். இதனால், அந்த வழக்கு முடியும் வரை ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடியாது என்பதே தற்போதை நிதர்சனமான உண்மை.

மேலும், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கருணாநிதிக்கு ஏன் நிலம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. அதற்கான சட்ட ரீதியான ஆதாரத்தை அளிக்கவில்லை. இதுவே தற்போது சிக்கலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சி ஆவணங்கள்படி கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட இடம் வரை இறுதிச் சடங்கு செய்ய ஒதுக்கப்பட்ட இடம் என்றும் கூவம் ஆற்றின் கரைப் பகுதி என்றுமே உள்ளது. ஆனால் தமிழக அரசோ, அது கடற்கரை ஒழுங்கு மண்டலத்தில் உள்ள இடம் என்று தெரிவித்திருந்தது. கடற்கரை ஒழுங்கு மண்டலம் என்று அரசே ஒப்புக்கொண்டது... எனவே, அங்கு புதிதாக கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று புதிதாய யாரும் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.

டிராஃபிக் ராமசாமியே கூட தமிழக அரசின் கருத்தை தன்னுடைய ஆதாரமாக காட்டலாம். இதனால், ஜெயலலிதா நினைவிடம் கட்டுவது கனவாகவே மாறிவிட வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். கடைசி நேரத்தில் இடம் தர முடியாது என்று கூறியதன் மூலம் தமிழ் மக்களின் சாபத்தை ஒட்டுமொத்தமாக சம்பாதித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவின் நினைவிடம் என்பதற்காக அவர் அடித்த ஸ்டன்ட் என்றாலும், பார்க்கலாம்... கருணாநிதி ஜெயித்தாரா? எடப்பாடி பழனிசாமியின் சாணக்கியத்தனம் ஜெயித்ததா என்று...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close