தியாகத் திருநாளின் வெரைட்டியான கொண்டாட்டங்கள்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Aug, 2018 08:18 pm
bakrid-2018-verity-of-celebrations

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தோடு தொழுகையில் ஈடுபட்டு ஏழை எளியோருக்கு உணவு அளிப்பதே ஈத் திருநாளின் முக்கிய கொள்கையாக இஸ்லாமியர்கள் கொண்டுள்ளனர். 

ஈத் திருநாள் அன்று முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் சிறப்புத்தொழுகை மற்றும் குர்பானி கொடுத்தல் ஆகும். அதாவது தொழுகைக்கு பின்புதான் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளில் அவரவர் வசதிக்கேற்ப பலியிட்டு அதை ஏழை மக்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பர். இதுவே குர்பானி எனப்படும். இந்த பக்ரீத் பண்டிகை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுக்க இருக்கும் நாடுகளில் ஈத் பெருநாளின் மரபுகளும் சடங்குகளும் வேறுபட்டாலும் கூட கடவுள் வழிபாடு ஒன்றாகவே உள்ளது. 

இந்தியா 

வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், பெண்கள் கை, கால்களில் மருதாணி வைத்து தொழுகை நடத்தியபின் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பணமாகவோ, இனிப்புகளாகவோ, பரிசுப் பொருட்களாகவோ, பிரியாணி போன்றவற்றை வழங்கி சந்தோஷமாக கொண்டாடிவருகின்றனர். 

தென் கிழக்கு ஆசியா

புருனே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஈத் பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுவது உண்டு. கறி உணவும், பாலாடை இனிப்புகளும், லெமாங் என அழைக்கப்படும் மூங்கிலில் சமைக்கப்பட்ட உணவும் விருந்தில் ஒரு பகுதியாக இருக்கும்.      

எகிப்து
 
எகிப்து நாட்டில் ஈத் பெருநாள் நான்கு நாள் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எகிப்து நாட்டு ஈத் விருந்தில் மீன் வகை உணவுகளே பெரும்பாலும் இருக்கும்.

ஈராக்

ஈராக்கில் ரமலான் மாதத்தில், பேரீச்சம்பழம் மிக அதிக முக்கியத்துவத்தை கொண்டிருக்கும். முந்திரி பருப்பு, பேரீச்சம்பழங்களை கொண்டு செய்யப்படும் பிஸ்கட்களை மட்டும்வைத்து அசைவம் படைக்காமல் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. 


ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஈத் பெருநாள் அன்று முட்டை சண்டைகள் நடக்குமாம். அதாவது ஆண்கள் ஒருவருக்கொருவர் முட்டையை தூக்கி எறிந்து விளையாடுவது போன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

பர்மா

பர்மாவில் ரவையால் ஆன இனிப்பு பண்டங்கள், முந்திரி பருப்பும், சுவையான கறியும் நிரம்பிய பிரியாணியுடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

சவூதி அரேபியா

எல்லா நாடுகளைக் காட்டிலும் சவூதி அரேபியாவில் தான் ஈத் பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர்களை அழைத்து விருந்து வைத்து அன்றைய நாளை திருவிழா போல் கொண்டாடுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close