தினகரனுக்கு தெரியுமா? உட்கட்சிக் குழப்பங்களுக்கான காரணம்...

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 03:07 pm
is-dinakaran-knows-about-what-s-happening-in-our-party

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து தற்போது வெளியில் அனுப்பப்பட்டுள்ள சிவசங்கரி போன்ற நிகழ்வு அக்கட்சியில் முதன்முதலாக அரங்கேறியுள்ள ஒன்று அல்ல. நம்பிக்கைக்குரிய நபராக கருதப்பட்டவர்கள் தொடர்ந்து ஒருவர் பின்  ஒருவராக வெளியேற்றப்படுவதும் அல்லது அவர்கள் தாமாகவே வெளியேறுவதும் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில் அக்கட்சியில் அடிக்கடி நடைபெறும் தொடர்கதையாக உள்ளது என அக்கட்சியின் உள்விவகாரங்கள் தெரிந்த நபர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு மட்டுமல்லாமல் ஒருவர் வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது  என்பதற்கு பின்னனியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற பின்னரே வெளியேற்றம் என்பது சாத்தியமாகிறது. அந்த பின்னணிக் கதைகள் தினகரனின் கவனத்திற்கு செல்லாமல் உள்ளதோ என்பது கட்சியில் மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. 

ஏனெனில் ஒருவரைத் தொடர்ந்து அவமதித்தோ, காத்திருக்க வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் அவமானப்படுத்துவது என்பது தினகரனின் உதவியாளர்கள் என்று அறியப்படுபவர்களின் தொடர்பணியாக உள்ளது. அவர்களே தினகரனின் உள்வட்டமாக செயல்பட்டு பலரை அவர் அருகில் செல்லவிடாமல் அரணாக நின்று தடுத்து வருகின்றனர்

. அதுமட்டுமல்ல ஒருவர் குறித்த உண்மையான தகவலை உதவியாளர்கள் அவரிடம்  திரித்துக் கூறி வருகின்றனர் என்பதே தினகரனுக்கு தெரியாது என்பதும் அக்கட்சியின் பெருந்தலைகளின் கருத்தாக உள்ளது. 

தினகரன் கட்சி தொடங்குவதற்கு முன்னரே, ஒவ்வொருவரும் அவர் சார்ந்த வரையில் அரசியல் ரீதியாக ஏதோ ஒரு இலக்கை அடைந்து விட்டனர். அதன் காரணமாகவே தினகரனும் அவர் கட்சியில் பலருக்கு பதவிகள் வழங்கியுள்ளார். இந்தப் பின்னணியில் வெளியேற்றங்கள் குறித்த முழுத்தகவல்களையும் அறிந்து உள்ள அமமுக நபர் நம்மிடம் கூறியதாவது:

கட்சி தொடங்கியவுடனே அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர் நடிகர் குண்டு கல்யாணம். மிக நீண்ட காலமாக அதிமுகவின் பிரசாரக் குழுவில் பணியாற்றி வந்த அவர், தினகரன் கட்சி தொடங்கிய உடனேயே அமமுகவில் இணைந்தார். சேர்ந்த வேகத்திலேயே குண்டு கல்யாணம் கட்சித் தலைமையால் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக, அமமுகவின் தெற்கு மாவட்டங்களில் நட்சத்திரமாக உருவாக உள்ள நபர் என்று கருதப்பட்ட தேனி. கண்ணன். அவர் தானாகவே கட்சியை  விட்டு வெளியேறினார். பின்னர் கட்சிக்குள் அவரது உதவியாளர்களால் ஏற்படுத்தப்படும் குழப்பங்கள் எதுவுமே தினகரனின் கவனத்திற்கு செல்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது என தெரிவித்தார். 

மேலும், கட்சித் தலைவர்கள் தொடர்ந்து உதவியாளர்களால் அவமானத்தப்பட்டு வருவதும் தினகரனுக்கு தெரிந்து நடக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். அடுத்ததாக நாஞ்சில் சம்பத், இவர் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை என்னதான் கிண்டல் செய்தாலும் அவரின் அரசியல் பயணம் மற்றும் அனுபவம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது. அவரும் தினகரனின் உதவியாளர்கள் தொடர்ந்து தன்னை அவமதிரியாதையாக நடத்தியதே தான் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்றும் ஊடகத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். 

தற்போது கட்சிப் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத பெண்மணியான இஷிகாவை தகவல்தொழில்நுட்ப அணியின் தலைவராக நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சிவசங்கரி. அதுமட்டுமின்றி இஷிகாவின் ஒரே தகுதி அவர் ஜனார்தனனின் மனைவி என்பது மட்டுமே. அவருக்கும் கட்சிக்கும் இந்த பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்னர் எந்த தொடர்பும் கிடையாது. மேலும்  இந்த ஜனார்தனன், ஜெயா டிவியில் தினகரனின் மனைவி அனுராதாவுக்கு உதவியாளராக பணியாற்றி, பின்னர் தினகரன் சிறை சென்றபோது அவருடன் சிறையிலடைக்கப்பட்டவர் என்பதை கூடுதல் தகவலாகக் கூறினார்  அமமுக நபர்.

தற்போது ஜனார்தனுக்கும் கட்சிக்குமே எந்தத் தொடர்பும் கிடையாது அவர் தினகரனுக்கும் அவர் மனைவி அனுராதாவுக்கும் உதவியாளர் மட்டுமே. இவ்வாறு அமமுக கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வரும் நபர்கள் புறக்கணிக்கப்பட்டுவதன் பின்னனிகள் எதுவும் தினகரனின் கவனத்திற்கு செல்வதில்லை என்றும், இனியாவது தினகரன் சுதாரித்துக் கொண்டால் கட்சி நிலைக்கும் எனவும் கூறுகின்றனர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close