வசதியா? வசூலா?

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Nov, 2018 08:58 pm

facilities-or-collection

சென்னைவாசிகளில் பாதிபேர் வெளியூர்காரர்கள். அதிலும் தென்மாவட்ட மக்கள் அதிகம். இவர்களுக்கு விழா நாட்கள் சொந்த ஊரில் தான் இருக்க வேண்டும். இதனால் சென்னையே சிலநாட்கள் காலி செய்தது போல இருக்கும். தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்து இருப்பார்கள்.

இவர்கள் வசதிக்காக தமிழக போக்குவரத்து துறை பல வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, கோவை, திருவண்ணாமலை, திருச்சி உட்பட முக்கிய ஊர்களில் சிறப்பு பஸ்நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாக இது வசதியை போல தோன்றினாலும், போக்குவரத்து துறை மறைமுக வசூல் வெளியே தெரிவதில்லை. உதாரணமாக சென்னை– மதுரை கட்டணம் ரூ.415 என்றால் இரு ஊர்களின் பொது பஸ் ஸ்டாண்டு இடையில் தான். ஆனால் இப்போது இரு ஊர்களின் சிறப்பு பஸ்நிலையங்கள் வரையில் தான் செல்லும்; அங்கிருந்து பொது பஸ் ஸ்டாண்டு செல்ல வேறு பஸ்சில் குறைந்தது 5 முதல் 19 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
பயணிகள் வசதிக்காத் தான் பஸ் நிலையங்கள் பிரிப்பு என்றால், ஒரே டிக்கெட்டை காட்டிவிட்டு செல்லாமே, அதை விடுத்து வேறு பஸ்சில் கட்டணம் செலுத்திதான் பயணம் என்பது வசூல் தானே சராசரியாக பத்து லட்சம் பேர் பயணம் செய்தால் போக்குவரத்து கழகத்திற்கு கூடுதாலாக ஒரு கோடி ரூபாய் வசூல்.

சரி பாதுகாப்பு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. பொதுவாக அரசு பஸ்களில் டிரைவர், கண்டக்டர் எண்ணிக்கை தனியாரை விட அதிகம். இந்த காலகட்டத்தில் ஓய்வு எடுக்க செல்ல வேண்டியவர்களும் பஸ் ஓட்ட வருகின்றனர். பஸ்நிலையத்தில் இருக்கும் நேரகாப்பாளர் தான் அடுத்து எங்கே செல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதனால் டிரைவர் ஓய்வே இல்லாமல் பஸ் இயக்க வேண்டிய கட்டாயம். இதனால் விபத்துகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

எவ்விதமான போக்குவரத்து சிக்கல் இல்லாத நிலையில் விமானங்களே விபத்தில் சிக்கும் இந்த காலத்தில் நம் சாலைகளின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம். எனவே டிரைவர்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும் வகையில் தற்காலி டிரைவர்களை நியமனம் செய்யாலாம். அதே போல கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் மாற்றுபஸ்களாகவும், சிறிய சிறிய பழுதுகளின் அடிப்படையில் டெப்போவில் நின்றவை. அவற்றை குறைந்தளவு பராமரிப்பு செய்து கன்னியாகுமரி-சென்னை வரை ஓடக் கூட வந்துவிடும். நாமும் இடம் கிடைத்தால் போதும் என்று ஏறி அமர்து கொள்வோம். விபத்துக்கு பி்ன்னர் தான், பிரேக் பிடிக்காத பஸ் என்பது தெரியவரும்.

பல ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டு தான் தீபாவளியை யொட்டி மழை பெய்கிறது. இதை எதிர்பார்த்து நம் போக்குவத்துறை பஸ்களை சத்தியமாக பராமரிப்பு செய்து இருக்காது. பஸ்களில் குடைபிடித்த படிதான் பயணம் செய்ய வேண்டும்.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியது போக்குவரத்து கழகத்தின் கடமை. இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. டூவீலரில் ஊருக்கு போகலாம் என்று கிளம்புகிறவர்கள் பாதுகாப்பாக ஹெமெல்ட் அணிந்து புறப்படுவது நல்லது. இரவு நேரத்தில் வாகனம் ஒட்ட தொடங்காமல், அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டால் பகலில் ஊருக்கு சென்று சேர முடியும்.

அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள் !

- பாரதி பித்தன்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.