அழகு ஆபத்தானது !

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Nov, 2018 05:45 pm

deepavali-sweets

இந்துகளின் விழாக்களில் முக்கியமானது தீபாவளி. இதில் அன்பு கொண்டவர்கள் அள்ளிக் கொண்டு வரும் இனிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருக்கும் . சிலரின் அம்மணிகள் கோபப்பார்வை, அசர வைக்கும் கைபக்குவம் போன்ற காரணங்களால் பலர் ஸ்வீட் ஸ்டால் பக்கம் ஒதுங்க வேண்டி உள்ளது.

கடைகளில் கிப்ட் பாக்ஸ், விஐபி கிப்ட் பாக்ஸ் என்று விதமான பெயர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. திறந்து பார்த்தால் கண்களை வரும் பல வித வண்ணங்களில் ஸ்வீட்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றன. கண்களைக் கவரும் அவை  வயிற்றுக்கு நல்லதாக என்றால் இல்லை.

ஸ்வீட் வகைகளில் கலர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலவிதமான ரசாயான வர்ணங்கள் கலக்கப்படுகிறன. தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கும்போது எவ்விதமான விதிமுறையும் கடைபிடிக்காமல், அனுமதிக்பட்ட அளவை விட 2 அல்லது 3 மடங்கு கலக்கப்படுகிறது. உதாரணமாக 0.0001 சதவீதம் தான் உணவு பொருட்களில் அங்கீகரிப்பட்ட வர்ணங்கள் கலக்க வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் கலப்பதில்லை. இதற்கு வாடிக்கையாளர்களும் முக்கியகாரணமாக இருக்கின்றனர். அவர்கள் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதா என்று மட்டுமே யோசிக்கிறார்கள்.

முறுக்கு, அதிரசம், ஜிலேபி, அல்வா, ரவா உருண்டை, கடலை மிட்டாய், அரிசி முறுக்கு, எள்ளு உருண்டை, சோமாசி, பால் இனிப்புகள், தேங்காய் பர்ப்பி, மைசூர் பாகு போன்றவை ஆரோக்கியமானவை.

அதே நேரத்தில் வண்ண வண்ண உருண்டைகள் கொண்ட மிக்சர், ஆந்திரா முறுக்கு, ஜிலேபி போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட வர்ணங்கள் கலப்பு அதிகம் இருக்கும்.

பொதுவாக ஸ்வீட் வாங்கும் போது அதில் என்ன என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் காலாவதி தேதி என்ன, அதை பாதுகாப்பது எப்படி போன்ற விபரங்களை படித்து அறிந்து கொள்வது நல்லது.

அங்கீகரிக்கப்படாத கெமிக்கல் கலந்த ஸ்வீட் மூலம் நரம்பு தளர்ச்சி, வயிறு உபாதைகள் போன்றவை ஏற்படும் அபாயங்கள் நிறைந்து உள்ளன. இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி உண்டு நம் வீட்டிற்கு நண்பர்கள் வாங்கி வரும் இனிப்புகளை சிறிது நேரம் கழித்து வேறு நண்பர் வீட்டிற்கு சென்று நாம் கொடுத்துவிடலாம். அவர் அடுத்தவருக்கு கொடுத்துவிடுவார். இப்படி அந்த ஸ்வீட் அனைவரையும் வலம் வந்து கண்களை கவர்ந்து இருக்கும், ஆனால் யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள்.  அழகு ரசிக்கமட்டும் தானே.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.