நவீனம் ஏற்படுத்திய சேதங்கள் !

  பாரதி பித்தன்   | Last Modified : 19 Nov, 2018 11:30 pm
developed-techniques-made-damages

சுனாமி பாதித்த சில மாதங்கள் கடந்த பின்னர், மீனவரிடம் பேசிய போது, இது எங்களை பாதித்ததால் உடனே மீண்டும் எழுந்து விட்டோம், சுனாமி ஊருக்குள் புகுந்திருந்தால் மீண்டும் எழுவதற்கு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கூறினார்.

அவரது கூற்றை கஜாபுயல் உண்மை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. வறண்ட பய மாவட்டம் என்று செல்லமாக அழைக்கப்படும் புதுக்கோட்டையை கஜாபுயல் புரட்டிப் போட்டிருக்கிறது. 18ம் தேதி டூவீலரில் திருச்சியில் இருந்து கீரனுார் வரை சென்ற போது கஜாவின் கோரத் தாண்டவன் புரிந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே மின்கம்பங்கள் போர்களத்தில் வெட்டி சாய்த்த படை வீரர்கள் போல வீழ்ந்து கிடந்தது. திருச்சி– புதுக்கோட்டை சாலையில் லெட்சுமணன்பட்டியில் உள்ள சுங்கசாவடியின் மேற்கூரை துாகி வீசப்பட்டு கல்லறையின் நடுக்கற்கள் போல மாற்றிவிட்டிருந்தது.

இவ்வளவு சேதத்தை கூலிக்கு ஆள் வைத்து செய்தால் கூட சுமார் ஓராண்டிற்கு மேலாகும். ஆனால் ஒரே நாளில் கஜா புயல் அனைத்தையும் புரட்டி போட்டு வேடிக்கை  காட்டியது. இத்தனைக்கு எந்த விதமான இயந்திரங்கள் உதவியும்இல்லை.

வெளிநாட்டில் 25 ஆண்டு காலம் உழைத்து சேர்த்த அனைத்தையும் ஒரே நாளில் இழந்து விட்டேன். இனி இவற்றையெல்லாம் எப்படி சேர்க்கப் போகிறேன் என்று வெளிநாட்டில் வேலை செய்யும் தஞ்சை மாவட்டக்காரர் கண்ணீரோடு சொல்வது இழப்பின் சோகத்தை எளிதில் புரிய வைக்கும்.

இழப்பு அதிகம் என்றாலும் அதில் இருந்து மீள்வதில் ஏன் இவ்வளவு பிரச்னை. போகும் இடங்களில் எல்லாம் மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை என்று கூக்குரல், சில இடங்களில் போராட்டம். இந்த அளவிற்கு ஆவேசம் காட்ட யார் காரணம்? நிதானமாக யோசித்தால் ஒவ்வொருவரும் தற்சாற்பு என்ற சிந்தனை இழந்து மின்சாரத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை மாற்றிக் கொண்டது தான் இதற்கு காரணம் என்பது புரியும்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலையில் எப்போதும் மின்சாரம் கிடையாது. சூரியன் இருக்கும் வ.ரைதான் வாழ்க்கை. இன்று நாடு முழுவதும் பரவி உள்ள சாலைவாசிகளின் குரு பீடத்தில் தான் இந்த நிலை சுமார் 63 ஜாதிக்காரர்கள் மின்சாரமே இல்லாமல் வாழ்கின்றனர்.

ஆனால் நாமோ மின்சாரம் இல்லாவிட்டால் அவ்வளவு தான். இதற்கு காரணம் நாம் பழமையை மறந்துவிட்டது தான். அரிகேன் லேப் என்ற விளக்கு ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கிறது. மின்சாரம் தடைப்பட்டால் கூட இப்போ எமர்ஜென்சி லேப், யுபிஎஸ் என்று அனைத்துமே  மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இப்போது இருக்கிறது. ஆட்டுரல், அம்மி, குழவி எல்லாம் கொலுவில் கூட பார்க்க முடியவில்லை. மின்சாரமே தேவைப்படாத எந்த பொருளும் வீட்டில் இல்லை.

குடிநீருக்கும் இதே நிலைதான். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புதுக்கோட்டையில் பல நீர்நிலைகளில் மாயமாகிவிட்டது. மாவட்டத்திலும் இதே நிலைதான். வயல்கிணற்றை பார்க்கவே முடியவில்லை. எல்லா இடங்களிலும் ஆழ்குழாய் கிணறுதான். தெருக்களி்ல் அடிபைப் இருந்த இருந்த இடங்களில் எல்லாம் இப்போது சிறுவிசை நீர்த் தேக்க தொட்டிகள். இதனால் மின்சாரம் இருந்தால் தான் குடிநீர் கிடைக்கும். ஊரில் சிலர் கஜாபுயலுக்கு முன்பு குளித்தது. நீர் நிலைகள் இருந்த ஊரி்ல் மட்டும் அங்கு திருவிழா கூட்டம் தான்.

வீட்டு வாசலில் மரம் முறிந்து கிடந்தால் கூட அதை அகற்ற உள்ளாட்சி ஊழியர்கள் தான் வர வேண்டும். வெட்டி அகற்ற மனம் இருந்தால் கூட அரிவாள் இல்லை. இப்போதெல்லாம் ரவுடிகளிடம் தான் அரிவாள் இருக்கிறது.  இப்படி அனைத்து விஷயங்களையும் இழந்து விட்டது தான் புயல் ஏற்படுத்திய சேதத்தை இரண்டு மடங்காக மாற்றியது.

இனியாவது ஒவ்வொரு வீடுகளும் தன்னிறைவு பெற்ற இல்லங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் இயற்கை இடர்பாடுகளில் இருந்து சிறிதாவது தப்பிக்க இயலும். இதை யார் செய்ய தொடங்குவது என்பது தான் கேள்வி

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close