நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது !

  பாரதி பித்தன்   | Last Modified : 19 Nov, 2018 07:57 pm
paddy-jayaraman

ராஜா சின்ன ரோஜா படத்தில் பிரபலமான பாடல் ‘‘ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம்’’ என்பது   அதில் நன்மை ஒன்று செய்தீர்கள், நன்மை விளைந்தது என்று ஒரு வரி வரும். அதற்கு சமீபத்திய உதாரணமாக மாறிவிட்டவர் விவசாயிகள் நெல் ஜெயராமன் என்று அன்போடு அழைக்கும் திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்.

விவசாயிகள் மனதில் நாராயணசாமி நாயுடுவுக்கு நீக்க முடியாத இடம் உண்டு. அதற்கு சற்று குறைவாக இடத்தில் இருப்பவர்கள் தமிழ்நாடு கள் இயக்க நல்லசாமி,­­ மரம் தங்கசாமி, டாக்டர் நம்மாழ்வார் போன்றவர்களுக்கும் இடம் உள்ளது.

இவர்கள் ஒவ்வொருவரும் விவசாயத்தின் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதற்காகவே தனிநபர்களாக போராடி வருகின்றனர். இவர்களில் நம்மாழ்வாருடன் இணைந்து பணியாற்றியவர் நெல் ஜெயராமன்.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் நம் விவசாயத்தின் பாரம்பரியத்தை அழித்துவிட்ட காலத்தில் பாரம்பரிய நெல்விதைகளை மீட்டெக்கும் முயற்சியில் களம் இறங்கியவர் நெல் ஜெயராமன். இவர் தன் சொந்த கிராமத்தில் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி வந்தனர். அதில் பாரம்பரிய நெல்விதைகளை அறிமுகம் செய்து அவற்றை கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ  இலவசமாக வழங்கி, அடுத்த ஆண்டில் அவர்கள் கலந்து கொள்ளும் போது சம்பந்தப்பட்ட விவசாயிடம் 4 கிலோவாக பெற்று, அதனை 4 பேருக்கு விநியோகம் செய்தவர். இவ்வாறு அவர் 18 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து தற்போது 169 வகையான நெல் விதைகளை மீட்டு தமிழக விவசாயிகளுக்கு கொடுத்தவர் நெல் ஜெயராமன்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல் ஜெயராமனை புற்றுநோய் தாக்கியது. அப்போது பல நல்ல உள்ளங்கள் உதவியால் மீண்டும் வந்த நெல் ஜெயராமன், கடந்த அக்டோபர் மாதம் 19ம்தேதி மறுபடியும் கிட்னி புற்றுநோய் பாதிப்பு அதிகரித்ததால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த தகவல் நெருங்கிய வட்டாரங்களில் பரவியதும், நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன் மருத்துவ செலவு முழுவதும் ஏற்றார். அதே நேரத்தில் டிஜிபி ராஜேந்திரன், நடிகர்கள் சத்தியராஜ், சூரி, சீமான், தமாக தலைவர் வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன், டிஜிபி ராஜேந்திரன் என்று பலர் பார்த்து விட்டு சென்று இருக்கிறார்கள். தமிழக உணவுத்துறை காமராஜ், சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி ஆகியோர்   நேரில் பார்த்துவிட்டு ஜெயராமன் உடலை் நிலை பற்றி தமிழக அரசுக்கு எடுத்து சொல்லி உள்ளார். தமிழக அரசும் தன் பங்கிற்கு  நெல் ஜெயராமனுக்கு   ரூ. 5 லட்சம் உதவி வழங்கி உள்ளது.

ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்காமல் வாழ்விழந்த நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என ஒற்றை மனிதனாக நெல் ஜெயராமன் போராடியதால் இன்று அவர் கேட்காமலே வந்து பலர் உதவி செய்கிறார்கள்.

ஆரோக்கியமான அரிசி உண்ணும் நாமும் கூட அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தால் நாம் நோய் இல்லாமல் தப்பிக்க முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close