ஆடு நனைகிறேதே....

  பாரதி பித்தன்   | Last Modified : 21 Nov, 2018 02:24 pm
story-about-gaja-it-s-actions

கஜா புயல் பற்றிய அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டதும், ஊடகங்கள் மீண்டும் மீண்டும் அதுப்பற்றிய செய்திகளை வெளியிட்டது. இயற்கையோ கோடை வெயிலுக்கு இணையாக விளையாட்டு காட்டியது. இதனால் சமூக ஊடகங்களின் அறிவு ஜீவிகள் புயலையும், சென்னை வானிலை மையத் அறிவிப்பபையும் கிண்டல் அடித்து மீம்ஸ் மழை பொழிந்தனர்.

கடந்த 15ம் தேதி இரவு பல மாவட்டங்களில் நிம்மதியாக துாங்கியவேளையில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட மக்கள் ஒட்டு மொத்த தூக்கத்தைத் தொலைத்தனர். கஜா புயல் இந்த மாவட்டங்களை புரட்டிப் போட்டுவிட்டு கரையை கடந்தது.

‘‘என்னோட 25 ஆண்டுகால உழைப்பு வீணாகிவிட்டது’’, “உயிர் மட்டும்தான் சார் இருக்கு வேறு எதையும் காணவில்லை” என்று பாதிக்கப்படவர்கள் கதறினர் .செல்லப்பிராணிகள், கால்நடைகள் எல்லாம் ஆங்காங்கே பிணங்களாக, இயற்கை இடற்பாடு என்றால் என்ன பொருள் என்பதை காட்டிவிட்டு சென்று விட்டது.

இதை மீட்டெடுக்க வேண்டிய முழு பொறுப்பும் தற்போது வரை தமிழக அரசின் தலையில். இதை நீங்கள் படிக்கும் போது வரை மத்திய அரசு ஆலோசனைகளை மட்டும் வழங்கி வருகிறது.

புயல்பாதித்த மாவட்டங்களில் 514 பாதுகாப்பு மையம் ஏற்படுத்தி 2 லட்சத்து 51 ஆயிரத்து 674 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவற்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படுகின்றன. மீனவகுடும்பங்களுக்கும், மீன்பிடி கலன்களை இழந்தவர்களுக்கும் கூட உடனடி நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்கி உள்ளது. புயலால் பாதிப்பால் உயிர் இழப்பை ஈடு .செய்ய ரூ. 10 லட்சம் நிதி என்று வகை வகையாக இழப்பீடுகளை அறிவித்துள்ளது.

இந்த புயல் 50 லட்சம் தென்னை மரங்களை வேரோடு சாய்த்துவிட்டது. சுமார் 1.10 லட்சம் ஏக்கர் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது. இதையெல்லாம் விட 86,702 மின்கம்பங்கள்,841 மின்மாற்றிகள், 201 துணை மின்நிலையங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் முற்றிலும் மின்தடை நிலவி வருகிறது.

இப்படி கஜாவின் சேதம் கரும்பு தோடத்தில் புகுந்த யானை போல இருக்கிறது. அரசின் மீட்பு பணிகளும் போர்கால அடிப்படையில் தான் இருக்கிறது. மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 21 ஆயிரத்து 461 பேர் ஈடுபட்டுள்ளனர்.வெளிமாவட்டங்களில் இருந்து குடும்பத்தை பிரிந்து வந்து, உயிரை துச்சம் என நினைத்துதான் அவர்களும் தங்கள் கடமையை செய்து வருகின்றனர். வயல் பகுதியில் ஒரு மின்கம்பம் நட 16 பணியாளர்கள் தேவை என்கிறார் முதல்வர் பழனிசாமி. இந்த கணக்கு படி குறைந்தது 10 ஆயிரம் மின்கம்பங்களையாவது நட வேண்டும் என்ற சூழ்நிலை தேவையின் முழு பரிமாணத்தை உணர்த்தும்.

இந்த சூழ்ந்நிலை அரசின் மீட்பு பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் ஆங்காங்கே சாலை மறியல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. எங்களை பார்க்க அதிகாரிகள் யாரும் வரவில்லை என்ற கூக்குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் அதிகாரிகளின் 4 வாகனங்கள் தீவைத்துகொளுத்தப்படுகிறது. டிஎஸ்பியின் மண்டை உடைகிறது. இது போனற போராட்டங்கள் உண்மையில் நிவாரணம் கோரித்தானா, என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுகிறது.

இதற்கு ஆதாரமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் அரசு டாக்டர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறலாம். இப்பகுதியில் அரசு மேம்படுத்த சமுதாய மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவர்களை சிலர்(?) தடுத்து நிறுத்தி முகாம் நடத்தினால் தாக்குதல், நடத்தி வாகனங்களை சேதப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உயிருக்கு போராடும் மக்களை பாதுகாக்க இந்த உத்தமர்களின் போராட்டம் எப்படி இருக்கிறது தெரிகிறது. இதே போலதான் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் அரங்ககேற்றப்படுகிறது. அமைச்சர்களை உசுப்பேற்றி அதை வீடியோ எடுத்து சமூக ஊடங்களில் பரவவிட்டு அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் முயற்சியில் திட்டமிட்ட ரீதியில் ஒரு கும்பல் செயல்படுத்தி வருகிறது.

வழக்கமாக இடைத்தேர்தலில் தான் அமைச்சர்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். இந்த முறை கஜாபுயல் பாதித்த மாவட்டங்களில் களம் இறங்கி செயல்படுகிறார்கள். அதிலும் பலர் முதல் தலைமுறை அமைச்சர் என்பதால் நிஜமாகவே தன்னால் செய்ய முடிந்தவற்றை தாங்களே செய்கிறார்கள். நடிக்க தெரியாதவர்களாக இருப்பதால், களப்பணியாற்றுபவர்களும் உற்சாகமாக உயிரை வெறுத்துதான் பணியாற்றுகிறன்றனர்.

நேற்று கூட புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் உள்ள தனியார் கல்லுாரி வாசலில் 2 மின் ஊழியர்கள் குமாரமங்கலத்தை சேர்ந்த முருகேசன், தேவனாங்குறிச்சியை சேர்ந்த மோகன் ஆகியோர்  பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எதிர்பாராமல் அவர்களை மின்சாரம் தாக்கியது. அப்போது அவ்வழியாக சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவ்வழியே கடந்து சென்றார். வழியில் கும்பல் நிற்பதை பார்த்துவிட்டு விபரம் அறிந்த அவர் இயல்பான பதட்டத்துடன் காரில் இருந்து இறங்கி தேவையான முதலுதவிகளை அளித்து (விஜயபாஸ்கர் ஒரு எம்பிபிஎஸ் படித்த டாக்டர்) பின்னர் திருச்சி மருத்துவமனையிலும் அவர் கூட இருந்து சிகிச்சையளித்தார். 

அவர் வேண்டுமானால் அருகில் உள்ள மருத்துவமனக்கு தகவல் சொல்லி விட்டு சென்று இருக்கலாம். அல்லது தன் உடன் வந்தவர்களில் சிலரை இறக்கிவிட்டு விட்டு உதவி செய் என்று உத்தரவிட்டு விட்டு பறந்து இருக்கலாம். ஆனால் அது போல செய்யவி்ல்லை என்பது தான் யதார்த்தம்.

இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் சிலர் மக்களை துாண்டி விடுகின்றனர். அவர்கள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிரான மக்களை திசை திருப்புகின்றனர். மக்களுக்கு நம்பிக்கை விதைகளை விதைக்க வேண்டியவர்கள் தங்களின் நலனுக்காக அவநம்பிக்கையை விதைக்கிறார்கள். இந்த கும்பலில் பிரபலமான அரசியல் தலைவர்களும் இடபெறுவது தான் வேதனையான விஷயம்.

இந்த அமைச்சர் தொகுதிக்குள் நுழைய முடியுமா என்று ஒருவர் சவால்விடுகிறார். அதற்கு ஏற்ப அமைச்சர் செல்லும் வழியில் கலவரம் வெடிக்கிறது. செய்வது யாரோ என்றால் கூட பழி என்னவோ பாதிக்கப்பட்ட மக்கள் மீது தான்.

மீட்புப் பணியில் தொய்வு என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுவதை ஏற்கலாம். அந்த சூழ்நிலையில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் தேவைப்படும் பாதிப்புகளை நீக்கத் தேவையான நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். தற்போது விஏஓ என்ற ஒன்றை நபரைச் சுற்றித்தான் அனைத்து பணிகளும் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது.

இதைத் தவிர அரசு தன்னால் முயன்ற அளவு சிறப்பாகவே செயல்படுகிறார்கள். ஆனால் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களும் கிருஷ்ணர் அல்ல கையை நீட்டி கம்பத்தை நட, அவர்களும் மனிதர்கள் தான், நமக்காக இன்று போராட்டம் நடத்துபவர்கள் ஆடுநனைகிறதே என அழும் ஓணாய்கள் தான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close