ஏழைகளின் ஊட்டி... வேலூரில் !

  இளங்கோ   | Last Modified : 26 Nov, 2018 03:16 pm
special-story-yelagiri-mount-at-vellore

ஜில்லுன்னு இருக்க நீலகிரிக்குப் போக முடியலயா? வாங்க நம்ம ஏலகிரிக்குப் போகலாம். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது ஏலகிரி மலை.  சின்ன ஊட்டி என்றும் ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படுகிறது. 

பனிக் காலத்தில் குளிர் வாட்டியெடுக்கும்.. கோடைகாலத்தில் வெயில் வறுத்தெடுக்கும். அப்படிப்பட்ட நகரம் தான் வேலூர். கோடை வெப்பத்தை தணித்துக் கொள்ளும் வகையில் ஜில்ஜில் சுற்றுலா தலங்கள் இங்கு நிறைய அமைந்துள்ளன. அந்த வரிசையில் அமைந்துள்ளது தமிழ்நாட்டின் சுற்றுலா கோடை வாசஸ்தலங்களில் ஒன்று ஏலகிரி.  ஏலகிரி மலையில் ஆண்டு முழுவதும் மிதமான குளிர்ச்சியுடன் கூடிய தட்பவெப்பநிலை நிலவுகிறது.   மலை மேல் அமைந்துள்ள இந்தப்பகுதி, தரைமட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது. இந்தப் பகுதி  துளியும் மாசு இல்லாமல், முற்றிலும் யூகலிப்டஸ் மரங்கள், பழத்தோட்டம், மலர்த்தோட்டம், புள்வெளிகள் என மனதை கவரும் வகையில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. 

ஏலகிரி நகரில்  சாகச விளையாட்டு:

தமிழகத்திலேயே இங்குதான் “பாரா கிளைடிங்’ எனப்படும் பாரசூட்டில் பறக்கும் பயிற்சி வழங்குகின்றனர். துணிச்சலான சாகச நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஏலகிரி சாகச முகாம் உள்ளது. சாகச விளையாட்டுப் பிரியர்களிடையே ஏலகிரி பிரபலமானதாக விளங்குகிறது.  மகராஷ்டிர மாநிலத்தின் பாஞ்ச்கனிக்கு  அடுத்தபடியாக இந்தியாவில் விளையாட்டுக்கான இரண்டாவது சிறந்த இயற்கைத் தலமாகவும்  தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

மலையேறும் பயிற்சி பெறுபவர்கள்,மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஏலகிரி மலை அருமையான இடம். அதற்கான வசதிகள் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சாகச பயணங்களுக்கும் மலையேற்றத்திற்கும் ஏற்ற இடம் இது. மலையேற்றம், பாரா கிளைடிங், ராக் கிளைம்பிங் பொன்ற விளையாட்டுகள் விளையாட இங்கே அனுமதி உண்டு. இவை ஏலகிரியை இளையவர்களையும்  முதியவர்களையும்  ஒருசேர  ஈர்க்கும் சுற்றுலா தலமாக ஆக்குகிறது.  மலைகளால் சூழப்பட்ட இந்த இடத்தின் இயற்கை அழகை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

 
ஏலகிரியில் கோடைத் திருவிழா கோலாகாலமாகக் கொண்டாடப்படும். அப்போது இங்கு சென்றால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் அரசு அதிகாரிகள் இங்கு வந்திருந்து இந்த இயற்கை அழகை ரசித்துச் செல்வர். மலையின் மீது விரிந்து கிடக்கும் பசுமை நிறைந்த சமவெளிகளை இங்கு காண முடியும். இந்த  மலையின் மீது  சிவன் கோவில், முருகன் கொவில், மற்றும் சுவாமிமலை குன்று முதலான மலை வாசஸ்தலங்களும் உள்ளது. இந்த ஏலகிரி மலையில் சுற்றுலா தான் பிரதானம். 

மலைவாழ் மக்கள்:

இந்த மலையில் மட்டுமே 15 குக் கிராமங்கள் உள்ளன. குக் கிராமங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை விவசாயத்தை நம்பித்தான் இருக்கின்றனர்.  இங்கு தேன் எடுப்பது, தோட்ட வேலை, மலையிலுள்ள மூலிகைகளால் மருந்து தயாரிப்பது என இயற்கையை நம்பித்தான் வாழ்கிறார்கள்.  இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஏலகிரி அருகே அமைந்துள்ள திருவண்ணாமலை மலையில் உள்ள மக்களும் இவர்களும் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த மலையை அவர்கள்  குலதெய்வமாக கருதுகின்றனர். இயற்கையை நம்பித்தான் அவர்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர். அதனால் அவர்கள் செருப்பு கூட அணிவதில்லையாம். ஏனென்றால் நாங்கள் தெய்வமாக போற்றுகின்றோம் என்கின்றனர்.  இதில் ஆச்சரியம் என்னவெனில், திருமணம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் பிடித்தால்  போதும், சாதிப்பிரிவும் கட்டுப்பாடும் அவர்களிடம் கிடையாதாம். பண்டமாற்று முறையாக ஒரு பொருளை பெற இன்னொரு பொருளைத் தரும் முறை இன்னமும் இங்கு வழக்கத்தில் உள்ளது.  மலையில் வசிக்கும்  அவர்கள், அவர்களை போன்று மலையில் வசிக்கும் மக்களைத்தான் மணம் முடிப்பார்கள்.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்தான் திருமணம் நடக்குமாம். அங்கே  இருக்கும் கனியையும், மலையையும் தான்  தெய்வமாக நினைத்து தாலிக்கட்டிக் கொள்கின்றனர். எங்கள் குழந்தைகளை படிக்க வைக்கச் சொல்லி அரசாங்கம் வலியுறுத்துவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் எனவும், வருங்காலத்தில் இவர்களால் மாற்றம் வந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். சமுதாயம் எவ்வளவோ மாறிவிட்டாலும், இவர்களும் பழமை இன்னும் மாறாமல் தங்களது வாழ்க்கையை அப்படியே நகர்த்த வேண்டும் என நினைகின்றனர்.

பூங்கானூர் ஏரி:

ஏலகிரியில் உள்ள பூங்கனூர் ஏரியின் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.  இங்கு செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள  ஏரிதான் பூங்கானூர் ஏரி. வருடத்தின் அனைத்து மாதங்களிலும் தண்ணீர் நிரம்பியிருக்கும். அருகிலேயே பெரியதொரு சிறுவர் பூங்கா உள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது. அரசுத்தோட்டம், மூலிகைப் பண்ணை, தொலைநோக்கி இல்லம், நடைப்பயண பாதை, பரண் இல்லம் என்று பார்வையாளர்களை கவரும் பல அம்சங்கள் இருக்கின்றது. பூங்கானூர் ஏரியில் படகு சவாரியும் உள்ளது. துடுப்பு படகு, கால்மிதி படகு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மூலம் ஆனந்தம் அடைகின்றனர். கடோத்கஜன் சிலை ஒரு பாறையின் மேல் நிறுவியுள்ளனர். இங்கு இருந்து பார்த்தால் மொத்த ஏலகிரியையும் பார்த்து மகிழலாம்.

அழகை ரசிக்க,டெலஸ்கோப்:

மலைப்பாதையில் நுழையும்போதே, ஏலகிரி மலையின் அழகை ரசிக்க,டெலஸ்கோப் வசதி உள்ளது. இதை,பரன் டெலஸ்கோப் என்கின்றனர்.  ஏலகிரி மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் ஏலகிரியின் முழு அழகையும் கண்களால் பருகலாம். நீலகிரியில் உள்ள ஏற்காடு செல்ல முடியாதவர்கள் வேலூரில் உள்ள ஏலகிரிக்கு செல்லலாமே...!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close