தமிழன் என்றொரு இனமுண்டு....!

  பாரதி பித்தன்   | Last Modified : 29 Nov, 2018 03:04 pm
about-iravatham-death-special-story

வீடு வரை உறவு, வீதிவரை மனைவி காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ என்பது கண்ணதாசனின் வைரவரிகள். அவர் பாடியதைப் போலவே தற்காலத்தில் கடைசிவரை பிள்ளை மட்டும் தான் என்பது மிகச்சரியாக பொருந்துகிறது. துக்க வீடுகளில் அவ்வளவு தான் உறவினர்கள், நண்பர்கள் வருகை இருக்கிறது.

மகாகவி பாரதியார் 1921ம் ஆண்டு செப்டம்பர் 12 ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு இறந்தார். அப்போது அவரது இறுதியாதிரைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அவர் உடலில் இருந்த ஈக்களின் எண்ணிக்கையை விட குறைவாகத்தான் இருந்ததாம். வெறும் 14 பேர் தான் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து தன் கவிராஜன் கதையில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
...
தமிழர்களின் மனங்களில் சுந்திர கனல் மூட்டிய பாரதியாருக்கு இந்த நிலை. வாழ்ந்த காலத்தில் அவருடன் .தைரியமாக தொடர்பு கொண்டிருந்தனர் என்பது 14 பேர் மட்டுமே கலந்து கொண்ட இறுதியாத்திரை  தெரியப்படுத்தும். அடிமைகள் நாட்டில் சுந்திர போராட்ட வீரரின் மறைவுக்கு செல்வது கூட குற்றம் என்று நினைக்கும் காலம் அது.

ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மறைந்த  ஐராவதம் மகாதேவன் இறுதி சடங்களில் வெறும் 40 பேர் கலந்து கொண்டதும், அவர்களில் 30 பேர் அவரின் உறவினர் என்ற தகவல் நெஞ்சில் நெருப்பைத்தான் அள்ளிக் கொட்டுகிறது.

பாரதியார் இறுதி சடங்கை விட அதிகம் பேர் கலந்து கொண்டார்கள் என்ற எண்ணத்தை விட என்னத்தை சொல்ல? கடந்த சில நாட்களாக திரும்பும் பக்கம் எல்லாம் தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பற்றிய தகவல்கள், செய்திகள், வரலாறு தமிழர்களை ஆக்கிரமித்து. இந்து தமிழ் நாளிதழ் தன் நடுப்பக்கத்தை அவரின் நினைவு மலராகவே .வெளியிட்டது .

இந்திய ஆட்சி பணி அதிகாரி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தினமணி ஆசிரியர் என்று பன்முகத் தன்மையுடன் வெற்றியாளராக திகழ்ந்த அவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் .வெகு சொற்பம் என்பது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைதான் எடுத்துக்காட்டுகிறது.

நாள்தோறும் முகநுால் பக்கத்தில் முகம் தெரியாத பலரின் பிறப்பு, இறப்பு பற்றிய தகவல்கள் அள்ளி குவிக்கிறது. விதி திரைப்படம் போல கண்களை மூடிக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள், RIP என்று தட்டச்சு செய்து அதை பரவவிட்டால் போதும் சம்பந்தப்பட்டவரின் சந்தோஷத்தில் துக்கத்தில் பங்கேற்றவராக மாறிவிடுகிறோம். Rest In Peace என்று தட்டச்சு செய்வதற்கு கூட நேரம் இல்லாத வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருகிறோம். ஐராவதம் மகாதேவனுக்கு பேஸ்புக்கில் துக்கம் அனுஷ்டித்தவர்களில் பத்து சதவீதம் பேர் சென்று இருந்தால் கூட அவர் வீடு இருந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இருக்கும். இதைவிட எழுத்தாளர் குமுதம் செல்லப்பா இறந்து பல ஆண்டுகள் கடந்தும் கூட முகநுால் அவர் பிறந்தநாளை காட்டும். அவருக்கும் இந்த கும்பல் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறி பார்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் டெல்லி கணேஷ், புதுக்கோட்டையில் இறுதியாத்திரைக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ‘‘மற்றவர்கள் போல நான் இல்லை; மிகுந்த மனித நேயத்துடன் நடந்து கொள்வேன். எங்க அப்பார்ட்மெண்ட்டில் யார் வீட்டிலாவது இறந்து விட்டால், அனைத்து வீடுகளையும் பூட்டிவிடுவார்கள். ஆனால் நானோ கதவை திறந்து வைத்து நாற்காலிகளை வெளியே போட்டு, அவர்கள் வீட்டிற்கு வருபர்கள் பை எங்கள் வீட்டின் உள்ளே வைக்க சொல்லிவிடுவேன், என்று அடுக்கிகொண்டே போனார். மனித நேயம் இந்தளவில் சுருங்கிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே அச்சம் ஏற்படுத்தும்.

ஒரு காலகட்டத்தில் இறப்பு பற்றிய தகவல் தெரிந்ததும் ,ஓடோடி வந்து எந்த பலனும் எதிர்பார்க்காமல் சடலம் சமாதிக்கு செல்லும் வரை உடனிருந்து தேவையான நடவடிக்கைகளை செய்தனர். இது போன்றவர்களுக்கு தகவல் தாமதமாக சொன்னால் வரும் பாருங்கள் கோபம், அதை சமாளிக்க முடியாமல் முதல் தகவல் அவருக்கு சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்வார்கள். அதையும் பார்த்து இதையும் பார்த்தால் தமிழன் எண்றொரு இனம் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close