நளினமாக நெய்யப்படும் நெகமம் சேலைகள்...!

  இளங்கோ   | Last Modified : 04 Dec, 2018 02:40 am

negamam-sarees-from-coimbatore-special-story

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளது நெகமம். நவீன காலத்தில் எத்தனை வகையான மாடல்களில் சுடிதார், ஜீன்ஸ் வந்தாலும் சேலைக்கு இருக்கும் மவுசு தமிழகம் உட்பட பல மாநிலங்களில்  இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தில் தினந்தோறும் உடுத்தி மகிழ, பெண்களுக்கு எத்தனை ரக ஆடைகள் நாள்தோறும் அறிமுகமானாலும், பெண்களை அழகாக காட்டும் அம்சம் நெகமம் சேலைக்கு உண்டு என்பதே பெண்கள் மறுக்க மாட்டார்கள். 

கிராமங்களில் நடக்கும் விழாக்களில் பெண்களுக்கு தனி மரியாதையை ஏற்படுத்தி கொடுப்பது நெகமம் சேலை தான்.  நெகமம் காட்டன் சேலை, தமிழகத்தில் உற்பத்தியாகும் கைத்தறி சேலைகளில்,  பல தலைமுறைகள் கடந்து இன்றளவும் பேசப்படும் உலகத்தரமிக்க தயாரிப்பாக உள்ளது. தமிழ் திரைப்படங்களில் சேலைக்கான பாடல் பெண்ணோடு வர்நித்து பாடியிருப்பார்கள். (சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்று ஒரு திரைபடப்பாடல் கூட உண்டு).  

100 ஆண்டுகளுக்கு  முன்பு நெகமத்தை சுற்றியுள்ள   பல கிராமங்களில் கைத்தறி நெசவுத்தொழில் அதிகமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நுால் சேலைகளுக்கு ஏக கிராக்கி  இருந்தது. அப்போது ஆறு கெஜம், எட்டு கெஜம் சேலைகளை பெண்கள் அதிகளவில் விரும்பி உடுத்தினர்.  ஆறுகெஜம், எட்டு கெஜம் நூல் சேலை என்றாலே தமிழகத்தில் நெகமம், சின்னாளப்பட்டி ஊர்கள் தான் நினைவுக்கு வரும். மற்ற ஊர்களில் நூல் சேலை நெசவு நின்று விட்டாலும் நெகமத்தில் இன்னும் பல நெசவாளர் குடும்பங்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர். நெகமம் நூல் சேலை உற்பத்தி பல ஆண்டுகளை தாண்டி விட்டாலும், இன்றைக்கும் பழமையில் புதுமை காணும் வகையில் பாரம்பரியமிக்க உற்பத்தியாளர்கள் கைத்தறி நெசவை காப்பாற்றும் வகையிலும், நெசவாளர்கள் சேலைகளை இன்றைய காலத்திற்கேற்ப வடிவமைக்கின்றனர். 

நெகமம், வீதம்பட்டி, சின்னநெகமம், குள்ளக்காபாளையம், சேரிபாளையம், எம்.மே.கவுண்டன்பாளையம், காட்டம்பட்டி, குரும்பபாளையம், உள்ளிட்ட 20 கிராமங்களில் கைத்தறி சேலை நெசவுத்தொழில் உள்ளது. இதில் மற்ற இடங்களை விட நெகமத்தில் நெய்யப்படும்  சேலை இன்றும் நீடித்து உள்ளது.  பல இடங்களில் நாகரீக வாழ்க்கைக்கு ஏற்ப ஆங்காங்கே பூ வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறன.  

இளம் பெண்கள், கல்லூரி, மாணவிகள், ஆசிரியைகள், பணக்கார வீட்டு பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் இப்போதும் விரும்புவது கோவை நெகமம் சேலைகளைத் தான். நெகமம் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த காட்டன் நூல் சேலைகள் தான் சவுத்காட்டன்,  பட்டு, பேன்சி, காட்டன், ஜர்தோசி சேலைகள் என எத்தனை ரகங்கள் இருந்தாலும் சின்னசின்ன இழைகளை கொண்டு நளினமாக நெய்யப்படும் நெகமம் சேலைகள் என்றால் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. 

கோவையில் தயாரிக்கப்படும் சேலை ரகங்கள் சென்னை, மதுரை, பெங்களூரு, ஐதராபாத், கோழிக்கோடு, மைசூர், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட நகரங்கள் மட்டுமின்றி கனடா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காட்டன் சேலைகளில் எம்ப்ராய்டரிங் மற்றும் போச்சம்பள்ளி ரகங்களுக்கு இன்றைய இளம் பெண்களிடம் கூடுதல் மவுசு இருக்கதான் செய்கிறது. 

நெகமம் காட்டன் சேலைகளை பெரும்பாலும் இரண்டு நாட்களில் நெசவு செய்யப்பட்டு விடுகின்றன.  நூல்களுக்கு நிறமேற்றுதல் உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் நெகமம் சுற்று வட்டார பகுதிகளிலேயே மேற்கொள்ளப்படுகிறது.  நாகரீக காட்டன் ரக சேலைகள் நெகமத்தில் தயாரித்தாலும் கோவை காட்டன் சேலைகள் என்றே அழைக்கப்படுகிறது.  கோவை, மதுரை, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள் மட்டுமன்றி, சிங்கப்பூர், கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நெகமம் காட்டன் சேலைகளுக்கு கிராக்கி என்பதால் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

நெகமம்  பகுதியில் மட்டும்  10 க்கும் மேற்பட்ட மொத்த காட்டன் சேலை ரக தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே நெகமத்திலேயே  நேரடி விற்பனை மையங்களை அமைத்துள்ளனர். இப்படி பல சிறப்புகளை உடைய பொள்ளாச்சியை அடுத்த நெகமம் சேலைகளை பெண்கள் உடுத்தினால்  ரசிக்காத ஆண்களே இருக்க மாட்டார்கள். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.