ஜெயலலிதா நேசித்த 5 முக்கியமான பெண்கள் யார் தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 05 Dec, 2018 11:27 am

jayalalitha-death-anniversary-special

அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல், ஆணாதிக்கம் கொண்ட இந்த அரசியல் களத்தில் தன்னிச்சையான ஒரு பெண்ணாக வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. திரையுலகில் தனது திறமையை காட்டியது போல், அரசியலை கற்றுக்கொண்டு, அதிலும் தனது தனி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா. ஒரு பெண்ணாக அவர் பல்வேறு தடைகளை தாண்டி தான் இப்படி ஒரு பெயரை பெற்றுள்ளார் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது நிறைய பெண்களின் ரோல் மாடலாக அவர் திகழ்ந்து வருகிறார். 

நகரம் முதல் கிராமம் வரை பட்டி தொட்டியெங்கும் அனைத்து பெண்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அவர் கொண்டுவந்துள்ளார். பெண்களும் அனைத்திலும் சாதனை படைக்க வேண்டும் என்று அவர் ஊக்குவிப்பவர். அவருக்கே ஒரு தனி பெண்கள் ரசிகர் பட்டாளம் இருக்கையில் அவருக்கு பிடித்த 5 பெண்கள் யாரெல்லாம் தெரியுமா? 

சந்தியா: ஜெயலலிதாவின் அம்மா சந்தியா. இவர் ஜெயலலிதாவின் அம்மா என்பதையும் தாண்டி ஒரு தோழியாக, சிறந்த வழிகாட்டியாக ஜெயலலிதாவுக்கு இவர் இருந்துள்ளார். ஜெயலலிதாவின் சிறு வயதில் இருவரும் பிரிந்து இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் தீராத அன்பு கொண்டிருந்தனர். 

கேத்ரின் சைமன் : ஜெயலலிதா தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது அவ்வளவு அழகாக இருக்கும். அவரது ஆங்கில மொழி திறமையை பலரும் பாராட்டியுளளனர். இதற்கெல்லாம் காரணம் சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் ஜெயலலிதா படித்த போது அவரது ஆசிரியராக இருந்த கேத்ரின் சைமன் தான். இவரது தனிக்கவனிப்புதான் பின் நாளில் ஜெயலலிதாவின் ஆங்கில புலமைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இந்திரா காந்தி: 1984ஆம் ஆண்டு ராஜ்ய சபாவில் ஜெயலலிதாவின் பேச்சால் கவரப்பட்ட இந்திரா காந்தி , பின்னர் அவருடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பின்நாளில் இந்திரா காந்தியை அம்மா என்று அழைக்கும் அளவிற்கு அவர் மீது ஜெயலலிதா அன்பு கொண்டிருந்தாராம். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என உலகம் அறிந்ததே.

ஆச்சி மனோரமா : திரைப்படங்களில் நடிக்கும் போதே ஆச்சி மனோரமாவும், ஜெயலலிதாவும் நெருங்கிய தோழிகள். தனி வாழ்வில் துன்பம் வரும் போதெல்லாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளனர். இருவருமே திரையுலகில் சாதனை படைத்த ஜாம்பவான்கள்.

சசிகலா: ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாக கருதப்படுபவர் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக தொடரும் அளவிற்கு நம்பிக்கையை பெற்றவர். ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததில் இருந்தே அவரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். ஜெயலலிதாவின் இறுதி நேரத்திலும் இவரே உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.