மறக்க முடியவில்லையே மோனா லிசா !

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Dec, 2018 04:03 pm

could-not-forget-monalisa

மோனா லிசா இன்று இருந்திருந்தால் இத்தனை கூத்துக்கள் நடந்திருக்காது. அவர் புன்னகை போலவே மரணமும் மர்மம் நிறைந்ததாகவே மாறிவிட்டது.

லண்டனில் மெட்ரோவில் நடந்த  மினிபஸ் தொடக்கவிழாதான் மோனோலிசா கலந்து கொண்ட நிகழ்ச்சி. அவர் அசைக்கும் முன்பே கொடி ஆடிவிட மினிபஸ் புறப்பட்டதும் தான் புன்னகையரசி இயல்பாக இல்லை என்று தெரியவந்தது.

மறுநாள் மோனாலிசா மருத்துவனைக்குள் சென்றதும். அவர் உடல்நிலை பற்றிய மர்மங்களும் உள்ளேயே முடங்கி விட்டது.

மருத்துவமனைக்குள் சென்றதும் மோனாலிசாவின் உடல் நிலை ஆரோக்கியமானதாகவே அடையாளம் காட்டப்பட்டார். சாதாரண காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டவர்;  மக்களும் கூட அவர் எழுந்துவந்துவிடுவார் என்றே நினைத்தனர்.ஆனால் அவர்களை ஏமாற்றியதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி, ஆட்சியாளர்கள் என்று எந்த வேறுபாடும் இல்லை. மக்களை அவர்கள் மரியாதைக்குரிய தலைவர்  உடல்நிலை குறித்து  திட்டமிட்டு ஏமாற்றியது அதிர்ச்சியை தந்தது.

அவர் இறப்பதற்கு முன்பு ஒற்றுமையாக ஆரோக்கியமாக இருப்பதாக கூறியவர்கள்; இறப்புக்கு பின்னர் விதிவிதமாக விஷயங்களை வெளியிடும் போது தான் அனைவரும் திட்டமிட்ட ரீதியில் கொலை செய்தார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பெரும்பாலானவர்கள் அவரை பார்க்கவே இல்லை என்பதும், அரசு டாக்டர் உட்பட. சிகிச்சை அளிக்கவே இல்லை என்பதும் எப்படிப்பட்ட நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது என்று வெளிப்படுத்துகிறது.

அவருடன் உள்ளே இருந்தவர் உள்ளே இருக்கும் நிலையில், உண்மையும் கூட உள்ளே புதைந்துதான் இருக்கிறது. அரசின் பிரதிநிதிகூட அவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட போது விரைவில் நலம் பெற கடிதம் அனுப்பினேன், பதில் கடிதம் அனுப்பினார் என்றும், பின்னர் ஒரு முறை பார்த்த போது மயக்க நிலையில் இருந்தார் என்றும் தெரிவித்தது, அவர் உடல்நிலை மோசம் அடைந்த பின்னர் ஏன் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்புகிறது.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காலத்தில், குறைந்தபட்சம் 62 சதவீதம் இதயம் இயங்கியே வந்திருக்கிறது என்ற நிலையில் அவரை காப்பாற்ற முடியாது என்று முடிவு செய்யும் அதிகாரத்தை யார் யாருக்கு தந்தார் என்ற கேள்வி இருக்கிறது.

தற்போது உண்மை என்று வாய்க்கு வந்ததையெல்லாம் அள்ளிவிட்டு வருபவர்கள்; தங்களை முதல் குற்றவாளியாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் வாய்க்குவந்ததை அள்ளிவிடுகிறார்களே தவிர்த்து உண்மையை வெளிப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஜோதிடரை விசாரிக்க வேண்டும் என்று கூட கோரிக்கை எழுந்துள்ளது. அவர் தான் நாள் நட்சத்திரம் பார்த்து தான் மருந்து கொடுத்தார் என்கிறார்கள்.

இந்த மரணத்தில் ஒரு டீம் அவர் தோழியை சிக்க வைக்கவும் இன்னொரு டீம் நடந்ததெல்லாம் இயற்கை என்பது போலவும் ரூம் போட்டு யோசித்து வேலை செய்கிறது.

அவருக்கு சிறைவாசம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் நடக்ககூட முடியவில்லை. சிகிச்சையளிக்கப்பட்ட பின், ஓரளவுக்கு தேறினார். உடனே தேர்தல் சுற்றுப்பயணம் உடல் நிலையை மிகவும் பாதித்தது. சைனஸ், கைகால் வீக்கம், கழுத்துவலி, உடல் பருமன், கையில் நீர்கோர்த்துக் கொள்ளுதல் என்று பல பிரச்னைகள். இதற்கு தொடர்ந்து சிகிச்சைபெற்றதால் தான் பெரும்பாலும் அவர் வீட்டில் இருந்து வெளியே வரவே இல்லை. ஆனால்  பொதுமக்களுக்கு போக்குரவத்துக்கு இடையூறு என்று காரணம் கூறப்பட்டது.

எது எப்படியோ ஒரு விரும்பத்தகாத மரணம் நடந்து விட்டது. அவர் இருந்தால் யாருக்கு லாபமே அவரே கொலை செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அவரைத்தான் வெளியே அனுப்பிவிட்டாரே, அப்போது தன் இடத்தை பிடிக்கிறார் என்பது தானே குற்றச்சாட்டே. அப்படி இருக்கும் போது ஏன் இந்த முடிவுக்கு அவர் வந்திருக்க மாட்டார் என்ற கேள்வி எழுப்புகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது ஒரு பொன் முட்டையிடும் வாத்து ஒரே நாளில் அறுத்து பார்த்தால் கூட ஒரு முட்டைதான் இருக்கும். அது தான் கதி. எதிரிகள் ஆளும் போது எடுக்கும் நடவடிக்கையை எப்படி சமாளிக்க முடியும். இந்த மில்லியன் டாலர் கேள்வி மட்டுமே அவரகளுக்கு ஆதரவாக உள்ளது.

 அவர் ஒன்றும் குழந்தை இல்லை, வாழ்க்கை முழுவதும் கோமாவிலும் இல்லை.இந்த சூழ்நிலையில் பல வியாதிகள் தன் உடலில் குடி கொண்டிருப்பது தெரிந்தும், அதற்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால் அதுவும் கூட தற்கொலைக்கு சமமான விஷயம் தான். சிறையில் இருந்து வெளியே வந்ததும், முறையாக சிகிச்சை பெற்றால் மரணத்தை தள்ளி போட்டிருக்க முடியும். அதை செய்யாததால் தான் இது போன்ற நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் சிகிச்சைக்கு ஏதேனும் தடை வந்தால் சம்பந்தப்பட்டவரைக் தூக்கி எறிந்து இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாது. தானே வாழ்க்கை வெறுத்து வடக்கு இருந்தாரோ என்ற எண்ணத்தை தான் ஏற்படுத்துகிறது. அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இது மோனோலிசா பற்றிய கட்டுரைதான். ஜெயலலிதாவை குறிப்பதாக நீங்கள் கருதினால், அதற்கு உங்கள் சிந்தனை தீவிரம், நினைவு ஆற்றல் ஆகியவை தான் பொறுப்பு.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.