நோய் தீர்க்கும் பத்தமடை பாய்...!

  இளங்கோ   | Last Modified : 05 Dec, 2018 07:10 pm

pathamadai-mat-special-story

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் தான் பத்தமடை. தமிழ்நாட்டில் பரவலாக பாய்கள் பின்னப்பட்டு வந்தாலும் பத்தமடை எனும் ஊரில் ஓடும் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் கோரைப்புற்களால் நெய்யப்படும் பாய்களுக்கு சந்தையில் தனி இடம் உண்டு. 

பிற இடங்களைக் காட்டிலும், இங்கு வளரும் கோரைப் புற்கள் தரமானவையாக இருக்கின்றன. பொதுவாகவே தாமிரபரணி தண்ணீருக்கு சில மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் இந்தத் தண்ணீர் பாயும் கோரையில் செய்யப்படும் பாய்களில் படுத்தால் நோய் தீருவதாக சொல்கிறார்கள். இதனால்தான் அந்தக் காலத்தில் பத்தமடையில் செய்யும் பாய்கள் பிரபலமானதாகச் கூறப்படுகிறது. அதுமட்டும் மல்லாமல் அந்த காலத்தில் புதிய தம்பதிகளுக்கு சீர்வருசையோடு பத்தமடை பாய் தருவது வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் அந்த பழக்கங்கள் மறைந்து போயின. பத்தமடை பாயில் படுத்தால் எந்த நோயும் வராது என்று சொல்லப்பட்ட காலம் மறைந்துவிட்டாலும் இன்றும் நம் ஊர்களில் பாய்களை பயன்படுத்துகின்ரனர்.

பொதுவாக நம் வீடுகளில் இருக்கும் பாய்கள் தடிமனாக இருக்கும். ஆனால் பத்தமடை தயாரிப்பாளர்கள் இந்தக் கோரைகளை எவ்வளவு மெல்லியதாக பிரித்து எடுக்கிறார்களோ அதைப் பொறுத்தே விலை  நிர்ணயம் செய்யப்படுகிறது. கோரைப் புல்லினால் நெய்யப்படும் பாய்கள் குறுக்கு இழை பருத்தி மற்றும் பட்டினால் ஆன இழைகளால் நெய்யப்படுன்றன. பிற புற்களால் செய்யப்படும் பாய்களை விட, இவை மெல்லியதாகவும், மிருதுவாகவும் உள்ளன. பச்சையாக அறுத்த புல்லை எப்போதும் ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்தப்பட்ட புல் மஞ்சள் கலந்த பசுமை நிறத்தை அடையும்.பின்னர் பனை நீரில் கொதிக்க வைத்து மீண்டும் உலர்த்தப்படும். உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீரில் மூன்று முதல் ஏழு நாள்கள் வரை மூழ்கச் செய்த பிறகு  மெல்லிய கோரையானது பருமனாகக் காட்சியளிக்கும். 

பின்னர் மீண்டும் உலர்த்தப்பட்டு நெசவுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு கோரைபுல் மீண்டும்  உலர்த்தி பின்னர் மெருகூட்டி நெசவு செய்யப்படும். பத்தமடையில் செய்யப்படும் பாய்கள் முரட்டு நெசவு பாய், நடுத்தர நெசவு பாய், நுண் நெசவு பாய் என மூன்று வகையாக கூறப்படுகிறது. மனதை கவரும் வகையில் பல வண்ணங்களில் பத்தமடை பாய் தயாரிக்கப்படுகிறது. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான கோரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கலைநயத்துடனும் மிக நுட்பமான வடிவமைப்புகளுடனும் நெய்யப்படும் பாய்கள் பத்தமடைக்கே உள்ள தனிச் சிறப்பாகும். 

நவீன உலகத்திற்கு ஏற்றார் போல இயந்திரங்களில் தயாரிக்கப்படும் (பிளாஸ்டிக்) பாய்கள் வந்தாலும் பத்தமடை பாய்க்கு ஈடாக முடியாது. இன்றும் பத்தமடை பாய்கள்  தமிழர்களின் கை வண்ணத்தை பறைசாற்றும் பாரம்பரிய பொருட்கள் வரிசையில் இடம்பிடிப்பதில் தவறவில்லை. இந்த பாய்கள் புவிசார் குறியீட்டு பதிவேட்டில் இடம் பிடித்துள்ளது. அழகுணர்ச்சியுடன் கலை ரசனையுடன் தயாரிக்கப்படும் பத்தமடை பாயின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது என்றால் அது மிகையாகாது.  

இங்கிலாந்து ராணியாக எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட போது அவருக்கு இங்கிருந்து பத்தமடை பாய்கள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டன. ரஷ்ய அதிபர் மிகைல் கார்பசேவ் இந்தியா வந்த போது அவருக்கு பத்தமடை பாய் பரிசாக வழங்கப்பட்டது. இப்படி பல சிறப்புகளையும் உடளுக்கு ஆரோக்கியத்தை தரும்  பத்தமடை பாயை வரும் தலைமுறையினர் அழியாத வண்ணம் பேணிக் காக்க வேண்டும் என்பதே பத்தமடை பாய் தயாரிப்பளர்கள் மற்றும் நம் முன்னோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.