ஸ்ரீவில்லிப்புத்தூர் ”பால் கோவா”ன்னாலே தனிச்சுவை தான்...!

  இளங்கோ   | Last Modified : 06 Dec, 2018 08:09 am

srivilliputhur-paalgova-special-story

பால்கோவா என்று கூறியதுமே நம் நினைவுக்கு வருவது தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் தாங்க. இது பால்கோவாவிற்கு மாத்திரம் அல்ல கோவிலுக்கும் பெயர்பெற்ற நகரமாக திகழ்கின்றது. தனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரம். இந்தியா முழுவதிலும் இங்கு உள்ள கோவில்கள் புகழ்பெற்றனவாக இருக்கின்றன, ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பதினோரு கலசங்கள் கொண்ட கோபுரமே இவ்விடத்தின் அடையாள சின்னம். 

இப்படி கோவில்களை மட்டும் மல்லாமல் ஸ்ரீ வில்லிபுத்தூர்  பால்கோவா உலக அளவில் புகழ் பெறுகிறது.  இது பாலுடன் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பண்டம் ஆகும். தமிழகத்தின் பல ஊர்களில் பால்கோவா தயாரிக்கப்பட்டு வந்தாலும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும்தான் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இங்குள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகளின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை அறிய முடிகிறது. 

அதாவது, ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பாலில்,வெல்லம் சேர்த்து ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். பால்கோவா தயாரிக்கப்படும் முறையும் இதைபோன்றது என்பதால் இந்த வழிபாட்டு மரபில்  இருந்து  பால்கோவாவின் வரலாறு மிகத் தொன்மையானது என்பதை அறிந்து கொள்ளலாம். இருப்பினும் உலக அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பிரபலம் ஆனது என்னவோ 20ம் நூற்றாண்டில் தான். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பசுமை வாய்ந்த இடமாய் இருக்கும் இந்த ஊரில் ஏகப்பட்ட பசுக்கள் இருப்பதால் பால் அதிகம் கிடைக்கிறது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணைகள் அதிகம் என்பதால் இங்கு பால் கோவா அதிக அளவில் தயாரிக்கப்பதோடு, பாலும் நல்ல சுவையுடன் இருப்பதால் தான் இங்கு பால்கோவா பிரசித்தி பெற்று இருக்கிறது. கிட்டதட்ட 60 ஆண்டு காலமாக இங்கு பால்கோவா தொழில் நடைபெற்று வருகிறதாம்.  இது  நிறைய பேருக்கு குடிசைத் தொழிலாகவும் இருக்கிறது.

10 லிட்டர் பாலுக்கு ஒன்றே கால் கிலோ சர்க்கரை கணக்கிட்டு, ஒன்றாக விறகு அடுப்பில் வைத்து பால்கோவா காய்ச்சப்படுகிறது. 10 லிட்டர் பாலில் இருந்து 3 கிலோ பால்கோவா  கிடைக்கும். பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பால் வரும் நேரத்தை கணக்கில் கொண்டு காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையும் பால்கோவாக்கள் சுடச்சுட தயாராகின்றன. பால்கோவா அனைத்தும் தயாராகும் அன்றே விற்று தீர்ந்து விடுவது அவற்றின் சுவைக்கும் தரத்துக்கும் சான்றாக உள்ளது.   

பால்கோவாவில் முந்திரி போட்டதும் அதன் சுவை மென்மேலும் சுவையூட்டுகிறது.  அதே வேளையில் மற்ற இடங்களில் அண்டிப் பருப்பு எனப்படும் முந்திரி ஓட்டை, விறகாக பயன்படுத்துகிறார்கள். இந்த ஓடுகள் நின்று நிதானமாக எரியும் என்பதால் கேரளாவில் இருந்து வரவழைத்து உபயோகிக்கிறார்கள். இதனால் பால் அடிப்பிடிக்காமல் லேசான மஞ்சள் நிறத்துடன் அற்புதமான சுவையுடன் வருகிறது. சுவையான பால்கோவாவை நாமே நமது வீட்டில் செய்து விடலாம். மிக எளிமையான செய்முறை உள்ள இனிப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை விரும்பி சாபிட கூடிய ஒன்று தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.