ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நாளை தொடக்கம் !

  டேவிட்   | Last Modified : 06 Dec, 2018 07:27 pm
trichy-srirangam-vaikunda-yegathesi-festival

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் நாளை காலை தொடங்குகிறது. 

10 8வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நாளை காலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 

21 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழா நாளை திருநெடுந்தாண்டகம் எனவும் அடுத்த 10நாட்கள் பகல்பத்து எனவும், இந்த நாட்களில் அர்ச்சுனமண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி காட்சியளிப்பார். அடுத்த 10நாட்கள் இராப்பத்து எனவும் கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பகல்பத்தின் கடைசிநாளான டிசம்பர் 17ம்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார். 

ராப்பத்தின் முதல்நாளான 18ம்தேதி அதிகாலை 5.30மணிக்கு பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அப்போது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து ரத்தினஅங்கியுடன் விருச்சிக லக்கினத்தில் புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக திருக்கொட்டகை பிரவேசம் நடைபெறும். இதில் சொர்க்கவாசல் திறப்பன்று அதிகாலை 4லட்சம் பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து குடிநீர் வசதி, தங்கும்வசதி, மேற்கூரை அமைத்தல், சுகாதாரம், பக்தர்கள் நெருக்கடியின்றி வரிசையாகச் சென்று நம்பெருமாளை தரிசனம் செய்ய ஆலய வளாகத்தினுள் தடுப்பு அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close