ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...!

  பாரதி பித்தன்   | Last Modified : 11 Dec, 2018 01:26 am
sex-website-special-story

சினிமா பாட்டு புத்தகங்கள் வீதி ஓரத்தில் விற்பனை செய்த காலத்தில், பெரிய எழுத்து கொக்கோ யோகம் பிரபலமான காமத்தை கற்றுத் தரும் புத்தகம். நடிகை சரோஜாதேவி திரை உலகில் பிரபலமாக இருந்த காலத்தில் அவர் எழுதியதாக பல மஞ்சள் பத்திரிக்கைகளின் விற்பனை கொடிகட்டி பறந்தன. பருவகாலம், விருந்து என்று பருவ இதழ்களில் ஆபாசம் இலைமறை காய்மறையாக ஊடுறுவி இருந்தது. இதில் சரோஜாதேவி புத்தகங்கள் தடை செய்யப்பட்டவை. அவை மறைவான இடத்தில் தான் கிடைக்கும். இரண்டாம் தர புத்தக விற்பனை நிலையங்களின் நம்பிக்கை்கு உரிய வாடிக்கையாளரருக்கு மட்டும் தான்  இந்த புத்தகங்கள் கூட அங்கு கிடைக்கும்.

இதே போலதான் சூதாட்டமும். சீட்டு விளையாட்டும் தடை செய்யப்பட்டது. இதனால் விட்டதை பிடிக்கிறேன், விட்டதை பிடிக்கிறேன் என விட்டத்தை பிடித்தவர்களும் உள்ளனர்.

இவை ஆப் லைனில் இன்று வரை சட்டவிரோதம். ஆனால் ஆன்லைனில் அவ்வாறு இல்லை என்பதுடன் விட்டில் பூச்சிகளை விழுங்க துடிக்கும் விளக்குகள் போல விதவிதமாக உருவாகாகி வலம் வருகின்றன. இதனால் ஆபாச தளத்திற்கு செல்ல விரும்பாதவர்களுக்கு கூட இது போன்ற இணையதளங்களின் விளம்பரங்கள் அடிக்கடி வந்து ஆசையை துாண்டும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாட்டிங் தளங்கள் தான் இருந்தன. இதில் சஜகமாக நுழையும் நபர் கடைசியாக ஆபாச உரையாடல்களில் தான் விழுவார். உண்மையான கலவி கூட அரை முதல் ஒரு மணிக்குள் முடிந்து விடும். ஆனால் சாட்டிங் தளத்திலேயே விடிய விடிய இருந்தாலும் காம நினைவுகள் கடந்து போகாது.

 வெப் காம் அறிமுகம் செய்யப்பட்டதும், அதன் மூலம் வெளிநாட்டில் உறவினர்களிடம் தொடர்பு கொண்டவர்களை விட அறிமுகம் இல்லாதவர்களிடம் அந்தரங்க உறுப்புகளை காட்டி ஆபாச உரையாடல்கள் மூலம் ஆசையை தீர்த்துக் கொள்பவர்கள் தான் அதிகம்.

இந்நிலையில் வாட்ஸ், அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களின் வருகை ஆபாச இணையதளத்தில் வலம் வரும் வழக்கத்தை கனிசமாக குறைத்தது. ஆனால் இதற்குள்ளும் ஆபாசக்குழுக்கள் இருப்பதையும் மறைப்பதற்கு இல்லை. 

ஆனால் இதற்கும் ஆப்பு வந்து விட்டது. தற்போது டின்னர் சாட் என்ற டேட்டிங் செயலி வேகமாக பரவி வருகிறது. டில்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் உலாவந்த இந்த செயலி தற்போது இரண்டாம் நகரங்களிலும் பரவி வருகிறது.

18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், பேஸ்புக் சமூக தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும். ஆகிய 2 நிபந்தனைகள் தான். அவற்றை ஏற்று இதில் கணக்கு தொடங்கி போட்டோவை அப்லோட் செய்தால் போதும், சுற்றுவட்டார ஆண், பெண் படங்கள் வந்து குவியும் (பாலின அடிப்படையில் எதிர்பாலினம்). அதில் தேர்வு செய்து பிடித்துவிட்டால் நேரம் காலம் தெரியாமல் நேருக்கு நேர் பேசுவது போல கொக்கோ யோகம், காமசூத்ரா போன்ற புராண கதைகள் பேசி மகிழ முடியும். இந்த வக்கிரத்தின் உச்சம் யார் என்றே தெரியாமல் சமீபத்தில் அக்கா, தம்பியே காமஜோடிகளாக மாறி ஆன்லைனில் குடும்பம் நடத்தியதையும், சகோதரியிடம் ஆபாச தொடர்பு கொண்டு பணம் பறித்ததையும் கூறிப்பிடலாம்.

ஆன் லைனில் இது போன்ற தளங்கள் வலம் வருவது சட்ட விரோதம் கிடையாது. மேலும் இவற்றிக்கு ஆட்களை இழுத்து வரும் வகையில் அனைத்து வகையான  இணைய தளங்களில் சம்பந்தப்பட்ட இணையதளத்தை பார்க்கவே முடியாத வகையில் விளம்பரங்களை வெளியிடுவதும் சட்டத்திற்குட்பட்டது. இதனால் ஆன்லைனி்ல் நுழைவோர் அனைவருமே ஆபாசத்தை கடந்து தான் வந்து இருப்பார்கள். மருத்துவ முறையில் விழிப்புணர்வு பெறும் வகையில் காமத்தை கற்றுக் கொடுத்தால் கூட பரவாயில்லை;  சமூகம் அங்கீகரிக்காத காம உறவுகளை கூட ஏதோ நாம் தான் அதில் ஈடுபடுவதில்லை போல, ஊர் உலகமே அப்படித்தான் இருக்கிறார்கள். இது சர்வசாதாரண விஷயம் தான் என்ற நினைப்பை ஏற்படுத்தும் வகையில் தான் உள்ளது. தேடுபொறியில்  எந்த உறவு முறையை எந்த மொழியில் தேடினாலும் டன்டன்னாக டாண் என்று ஆபாச கதைகள் வந்து விழுகின்றன. அதில் லாஜிக் கொஞ்சமும் இடிக்காமல் உண்மை போலவே எழுதுகின்றனர். இதை படிக்கும் வாசகர் வீட்டிலோ, வீதியிலோ அது போன்ற சம்பவம் நடக்கும் போது இந்த கதைகள் தான் மனதில் பளிச்சிடும். அவர் ஆபாச கதையை அறங்கேற்றுவார். அப்புறம் என்ன வாசகருக்கு தர்ம அடிதான்.

இதன் அடுத்த அபாயம் பலர் கொஞ்ச நாள் டூயட் பாடிவிட்டு; பின்னர் அழுவாச்சி காவியம் பாடி பாக்கெட்டை கறந்து விடுவார்கள். இது போன்ற அபாயங்கள் ஆண்களுக்கு என்றால், பெண்களின் அபாயம் அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும்.

சகமாணவியை பிடிக்காவிட்டால் பள்ளி சுவரில் அவரை பற்றி எழுதியவர்கள் சற்று வளர்ந்ததும் அதை பொது கழிப்பறைகளுக்கு இடம் மாற்றினர். அங்கு பெயர் மட்டுமே (பெரும்பாலும் ) இருப்பதால் சம்பந்தப்பட்ட பெண் அந்த தெருவில் வசிப்பவராக இருந்தால் கூட, டக் என அறிவில் எட்டாது. செல்போன் வந்ததும் அந்த எண்ணை ரயிலில் உள்ள கழிப்பறையில் எழுதி பழிவாங்கினார்கள்.

தற்போதுள்ள ஆன்லைன் உலகில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசி பேசியே மனதை கறைத்து அவரையே ஆபாசபடம், ஆபாச வீடியோ போன்றவற்றை எடுத்து அப்லோட, செய்து விடுகிறர்கள். அதற்கு ஏற்ற வகையில் மிக உயரிய தரத்தில் செல்போன் கேமராக்களும் சந்தையில் கிடைக்கிறது.

ஒரு கட்டத்தில் அவர் எடுத்து முகம் தெரியாத நண்பருக்கு அப்லோட் செய்யப்பட்டவை  மிரட்டலாக திருப்பி தாக்குகிறது. அந்த சூழ்நிலையில் கற்பு, பணம், எதிர்காலம் ஆகியவற்றை அந்த பெண் இழக்கிறார்.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. ஆனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து எஸ்எம்எஸ் மூலம் ஆபாச டேட்டிங்கிற்கு அழைப்பு விடுக்கிறது. ஆசைப்பட்டு அந்த எண்ணை தொடர்பு கொண்டால்; ஆபாசம் சொட்ட சொட்ட ஒரு பெண் அல்லது ஆண் பேசுவார். நிமிடத்திற்கு ரூ. 5 காலி. கற்பே பறிபோகாமல் காசு மட்டும் காணாமல் போகும்.

 இந்த போக்கு தொடர்ந்தால் ஒரு காலக்கட்டத்தில் மாப்பிள்ளை கண்ணாடி போட்டிருக்கார் அதனால் வேண்டாம் என்று ஓரம் கட்டிய சமூகம், தற்போது அதைப்பற்றி கவலைப்படாதது போல, திருமணத்திற்கு பின்னர் தான் உடலுறவு என்பதையும் கவலைப்படாத சமூகம் தான் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை உணர்வது அவசியம்.

இதைத்தவிர ஆன்லைன் ரம்மி வேறு. வீதி ஓரத்தில் சீட்டு விளையாடினால் மாமமூலாக போலீஸ் பிடிக்கும். ஆனால் ஆன்லைனில் சீட்டு விளையாண்டால் கேட்பதற்கு ஆள் இல்லை.

இப்படி நாடே, கண்ட கண்ட பைரவர்கள் நுழையும் வகையில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டை கைப்பற்ற போர் நடத்த வேண்டாம், அதற்கு பதிலாக அதில் ஆபாச கருத்துக்களை பரவிடுவது என்பது ஒரு நிலைப்பாடு. இந்தியாவில் அது தான் நடக்கிறது.  தடுப்பதற்கு தான் ஆட்களே இல்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close