குழந்தை பாக்யம் தரும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் !

  இளங்கோ   | Last Modified : 16 Dec, 2018 12:10 am
rathnagiri-balamurugan-kovil-special-story

வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்னகிரி பாலமுருகன் கோயில்.  இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும்.   இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ரத்னகிரி பாலமுருகன் கோயில்  மலை உச்சியில் அமைந்துள்ளது. எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 14வது நூற்றாண்டு புலவர் அருணகிரிநாதர் இந்த கோவிலில் 'ரத்தினிகரி வாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே' என்று பாடியுள்ளார்.  

பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஒரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை, விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார்.  இச்சம்பவம் நிகழ்ந்த  சில  தினங்களிலேயே  அப்பெண்  கருவுற்றார்.  அதன் பின்னரே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் என அறிந்து கொண்டார் அந்த பெண். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம் இதுவாகும். 

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மகா சண்டியாஜ பூஜை மிக விமர்சியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசன செய்கின்றனர். இரவில் அர்த்த ஜாம பூஜையில் அவருக்கு பாலை நிவேதனமாக படைகின்றனர். கோவிலின் அடிவாரத்தில் துர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. கீழ் இருந்து படிகட்டுகள் வழியாக சென்றால் மலைமேல் உள்ள முருகன் கோவிலை அடைந்துவிடலாம்.

இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் காட்சி தருகிறார்.  இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். குழந்தை பாக்யம் தரும் மிக புன்ணியமான தலதமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் இன்று கருதப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close