பராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...!

  இளங்கோ   | Last Modified : 16 Dec, 2018 12:25 am
fort-st-david-special-story

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றங்கரையோரம் கடலோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது புனித டேவிட் கோட்டை. இக்கோட்டை வரலாற்றுப் பொக்கிஷமாக, கலாசார அடையாளமாகத் திகழும். ஐரோப்பியர்கள் கி.பி.17ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் காலடி வைத்தபோது அவர்கள்  தங்கள் வணிகத்துக்கும், அரசியலுக்கும் கடற்கரை நகரங்களையே முக்கியத் தளமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியிலும், ஆங்கிலேயர்கள் கடலூரிலும் தங்கள் வணிகக் குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டனர். கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையில் தான்  ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டி ஆண்டனர். இங்கு ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அடிக்கல் நாட்டிய ராபர்ட் கிளைவ் கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை முக்கிய ராணுவ, வியாபார மையமாகப் பயன்படுத்தினார். 

ஏலிகு ஏல் என்ற ஆங்கிலேயர் 1653ஆம் ஆண்டு ராமராஜாவிடமிருந்து இடத்தை விலைக்கு வாங்கி கெடிலம் ஆறு கடலோடு கூடுமிடத்துக்கு வடக்குக் கரையில் புனித டேவிட் கோட்டையைக் கட்டினார்.  கோட்டையில்  இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கி குண்டு  சுடப்பட்டு  அந்த பீரங்கி குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்கு சொந்தமான பகுதியாக வரையறுக்கப்பட்டது. இன்றும் அங்கு உள்ள கிராமங்கள் பீரங்கி குண்டு கிராமங்கள் என்றே அழைக்கபடுகின்றன. 1725 ஆம் ஆண்டிற்கு  பிறகு  இந்த கோட்டை பெருமளவு  வலுப்படுத்தபட்டது. இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1745 முதல் 1758 வரை தங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் முதல் தலைநகரமாக பயன்படுத்தினர்.   

அதே ஆண்டில் பிரெஞ்சு ஆளுநர் டுப்ளேயின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.  பின்னர் ராபர்ட் கிளைவ் ஆங்கிலேய ஆட்சியாளராக பொறுப்பேற்றார்.  பிரெஞ்சுகாரர்கள் இக்கோட்டையை 1758ஆம்  ஆண்டு கைப்பற்றினர். 1782ஆம் ஆண்டு பிரெஞ்சுகரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்ட இந்த கோட்டை 1783 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் தாக்குதல் ஆரம்பித்து தொடந்து நடைபெற்று வந்த  போரில்  வெற்றிகரமாக பாதுக்கக்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1785 ஆம் ஆண்டு இறுதியாக ஆங்கிலேயர்களால் கைபற்றப்பட்டது.  இப்போது புனித டேவிட் கோட்டை பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. 

இதே போன்று கடலூரில் உள்ள சில்வர் பீச் அருகில் 17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அதிகாரிகளின் குடியிருப்புகளாக இருந்த கட்டடங்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகின்றன. இதன் அருகில் உள்ள துறைமுக அதிகாரி குடியிருப்பு, மாவட்ட மருத்துவ அலுவலர் குடியிருப்பு ஆகியவை ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்டவை. அதுவும்  பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகின்றன. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது. இப்படி பாரம்பரியமான கட்டிடங்களை பராமரிக்க அதிக செலவு ஆகுவதால் பாரம்பரிய கட்டிடங்களை பராமரிக்க அரசு கவனம் செலுத்துவதில்லை. பாரம்பரியத்தின் அடையாளங்களாக உள்ள இந்தக் கட்டடங்களைப் பாதுகாக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிப்பார்ப்பு.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close