நாகதோஷம் போக்கும் அர்த்தநாரீஸவர் கோவில்....!

  இளங்கோ   | Last Modified : 17 Dec, 2018 11:47 pm
arthanareeswarar-kovil-special-story

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள மிக்கவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

கொடிமாடச் செங்குன்றத்தூர் என்னும் பெயருடைய திருச்செங்கோடு கொங்குநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளதாக வரலாறு கூறுகின்றன.

இந்த திருச்செங்கோடு திருமலை சோணகிரி, சேடமலை, மேருமலை என பல்வேறு பெயர்களைக் கொண்டு விளங்குகிறது. திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும், இந்த மலையை அமாவாசைதோறும் கிரிவலம் வருகின்றனர் பக்தர்கள். இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலுக்குச் செல்ல சுமார் 1250 படிக்கட்டுக்கள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலமாகவும் மலை உச்சிக்கு செல்லலாம். மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சியில் வடதிசையை நோக்கி 5 நிலை ராஜ கோபுரம் உள்ளது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது.  வடக்கு கோபுர வாயில் வழியாக வெளிப் பிரகாரத்தை அடையலாம். 

திருச்செங்கொடு மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது இத்தலத்தின் சிறப்பாகும். தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோயில் போற்றி பாடப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலை அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் உள்ளன. ஒரே திருக்கோயிலாய் அமையப் பெற்ற திருத்தலம் ஒற்றுமையின் சின்னமாய் திகழ்கிறது. இந்த திருச்செங்கோடு மலைக் கோயிலை மலைத்தம்பிரான் என்றும் அழைக்கின்றனர்.

இம்மலையின் மேல்புறத்தில் நந்தி கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி பகவானுக்கு பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி மக்கள் வழிபடுகின்றனர். நந்தி கோயிலில் இருந்து சற்றே கீழிறங்கினால் நந்தி மலைக்கும், நாக மலைக்கும் இடையே ஒரு பள்ளம் அமைந்துள்ளது. அதுவே நாகர் பள்ளம் என அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் உள்ள நாக உடல் மீது பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் தடவுகின்றனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக இங்கு வரும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இங்கு நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உள்ளது. பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயிலில், நடராஜருக்கு அருகே இலுப்பை மரம் அமைந்துள்ளது, மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அமைப்பாகும். இந்த இலுப்பை மரத்தை சுற்றி வந்தால் வாழ்வு நலம் பெறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close