மேகங்கள் ஆட்சி புரியும் மேகமலை ....!

  இளங்கோ   | Last Modified : 24 Dec, 2018 09:46 pm
megamalai-special-story

தமிழகத்தில் தேனி மாவட்டம் சின்னமனூர் மலைப்பாதையை அடுத்து உள்ளது மேகமலை.  மேகமலை பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ளது.   

தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகை உள்ளடகியது தான் மேகமலை. நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இவை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. 

மேகமலை சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி செல்லகூடிய பகுதியாக உள்ளதால் இதனை தென்னகத்து தொட்டபெட்டா என்று அழைக்கப்படுகிறது.  மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சைப்பசேல் என எங்கு பார்த்தாலும் பசுமை போர்வை உடுத்தியது போல் பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு தான் இந்த மேகமலை. பசுமையான நிலப்பரப்புடன் வானுயுர்ந்த மரங்களுடன் மிக அடர்த்தியாக காணப்படுகிறது இந்த வனப்பகுதி. மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களை  காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். 

உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என என பல இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும் மேகமலையில் தேயிலைகளை பக்குவப்படுத்தும் ஒரு தொழிற்சாலையும் உள்ளது. இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. மேகமலைப்பகுதியில் விலங்கினங்கள், ஊர்வன மற்றும் வண்ணமயமான பட்டாம்பூச்சிகள் ஆகியவை  இங்கு படையெடுத்து சுற்றுகின்றன.

இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, பறக்கும் அணில்,  நத்தைக் கரடி, குரைக்கும் மான், மென்மையான தோலுடைய நீர்நாய், சிங்கவால் மக்காவ் குரங்குகள், சாம்பார் வகை மான்கள், லாங்கூர் குரங்குகள்,  போன்னட் மக்காவ் குரங்குகள், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் மற்றும் பல வகை விலங்குகளை காண முடியும். 

தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களும் நிரம்பிய இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்னமும் யாராலும் சேதப்படுத்தபடாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன. வேகமான காற்று வீசும் மலைகள் என்றும் அழைக்கப்படும் மேகமலை தான் மேகமலை நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. சுற்றுலா வரும் பயணிகள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளன. இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் உள்ள ஒரே இடம் மேகமலை என்று சொல்லலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close