ஸ்டாலின்! காயலாங்கடை வியாபாரம் செய்வதை விட்டு விடுங்கள் !

  பாரதி பித்தன்   | Last Modified : 25 Dec, 2018 11:18 pm
stalin-leave-it-to-do-business

நம்ம சாதிக்காரங்க பசங்க எல்லாம் அவன் அவன்  கிடைக்கிற வேலையை செய்தகிட்டு இருந்த போது, அக்ரஹாரத்து பசங்க மட்டும் குடுமியை எடுத்து விட்டு காலேஜ் போனார்கள். அந்த  காலத்தில நம்மை மீட்டு எடுக்க பகுத்தறிவு தேவையா இருந்தது உண்மைதான்  ஸ்டாலின்.  அதனால தான் பெரியார் வெற்றி பெற்றார். அதைவிட தாக்கி பேச எதிர்ப்பு இல்லாத, பொது எதிரி தேவை என்ற நிலையில் தான் பிராமணர் எதிர்ப்பு, பகுத்தறிவு போன்றவற்றை கையில் எடுத்தார் பெரியார்.

மோடி மஸ்தான் கீரியை பாம்புடன் சண்டைக்கு விட உள்ளதாக அழைத்து பின்னர் தாயத்தது விற்பனை செய்வது போல, பிராமணிய எதிர்ப்பு, பகுத்தறிவு என்று கூட்டத்தை கூட்டி சமூதாய மாற்றத்திற்கு வித்திட்டவர் பெரியார். அதனால் தான் இன்று என்ன ஜாதி என்று தெரியாமல் அனைத்து ஜாதிக்காரர்களும் எல்லா இடத்திலும் நிறைந்து நிற்க முடிந்துள்ளது. பெரியாரின் மற்ற கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு  இப்போ பகுத்தறிவு, பிராமணர் எதிர்ப்பு என பேசுவது  காலாவதியான பொருட்களை கஷ்டப்பட்டு விற்கும் நிலை போல் உள்ளது.

 பெரியார் கொள்கையிலே கருணாநிதி வாழ்ந்துவிட்டதால் கடவுள் மறுப்பு, இந்து மத விமர்சனங்களை அவர்  செய்த போது கூட நம்மால் அவரது சூழலை புரிந்து கொள்ள முடிந்தது. புலனாய்வு வார இதழ்கள், தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பாக உங்கள் குடும்பத்தின் நிலை யாருக்கும் தெரியாத போது, கருணாநிதி பேசிய பகுத்தறிவை உண்மை என்று நம்பினோம்.  

தன் மனைவி, மருமகள் ஆகியோர் நிலவையே நெற்றிக்கு கொண்டு வந்ததுபோல பொட்டு இட்டுக் கொண்டிருந்ததையும், அவர்கள் கோயில் கோயிலாக சுற்றி வந்த போதும்  வெளியான தகவல்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. இந்த நம்பிக்கைதான் கருணாநிதி தொண்டர் நெற்றியில் ரத்தம் வடியுதா என்று அவர் கூச்சம் இல்லாமல் கேட்ட போது கூட நாங்கள் மவுனியாக, அதை சகித்துக் கொண்டு இருந்தோம். காலி பெருங்காய டப்பா அவ்வளவு எளிதில் வாசம் போகாது என்று புரிந்து கொண்டு அவர் பகுத்தறிவு கருத்துகளை அனைவரும் கடந்து சென்றோம்.

இப்போ அவர் தான் காலமாகிவிட்டாரே ஸ்டாலின். அவரை மெரினாவில் அடக்கம் செய்த போதே போலி பகுத்தறிவையும் சேர்த்து  அடக்கம் செய்துவிட்டதாகவே நினைத்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் கருணாநிதி சமாதியில் கவிஞர் வைரமுத்து  பால் ஊற்றினார். தொண்டர்களும் பழங்கள், பூக்கள், புத்தங்கள் என்று வைத்து தங்கள் பாசத்தலைவனுக்கு அஞ்சலி செலுத்தியது,  நாள்தோறும் தலைவர் பிரசவித்த முரசொலியை அவர் சமாதியில் வைப்பது போன்றவையும் நடைபெற்றன. நாங்களும்  போலி பகுத்தறிவை எழமுடியாத ஆழத்திற்குள் புதைத்து வைத்து விட்டோம். இனி கவலையில்லை. தேவையில்லாமல் நடிக்க வேண்டியது இல்லை என்று நிம்மதியாக இருந்தோம்.

இனி நிம்மதியாக கோயிலுக்கு போகலாம், திருமணங்களில், மணமக்கள் இனி மணமாலைக்குள் மறைத்துக்கொள்ளாமல் தாலி அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தோம் ஸ்டாலின். ஆனால் அதற்கு ஏன் ஆப்புவைப்பது போல  இன்னமும் காலாவதியாகிப் போன போலி பகுத்தறிவு வியாபாரத்தை தொடர்ந்து விற்பனை செய்யும் காயலாங்கடை உரிமையாளராக மாறிவிட்டீர்களே நீங்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் ஆராத்தி எடுத்து பொட்டு வைத்த போதும், அதை நீங்கள் அழித்த போதும் ஏற்பட்ட அதிர்ச்சி,  பசும்பொன்னில் வைத்த பொட்டு கலையாமல் வெளியில் வந்த போது நீங்க மாறிட்டீங்க என்று மகிழ்ச்சியாக மாறியதே. அதனால் தான் உங்கள் குடும்பம் கோயில் கோயிலாக சுற்றி வேண்டுதல் செய்த போது நாங்களும் வேண்டுதல் செய்தோம்.

ஆனால் ஸ்டாலின் நம்ம நாடகத்தை எல்லாம் சிறுபான்மைமக்கள் நம்பி நமக்கே ஓட்டு போடுறாங்க என்று நம்புறீங்க பாருங்க அதுதான் தப்பு. அவங்க நம்ம தொண்டன் போல அவ்வளவு ஏமாளிகள் கிடையாது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேகலயா போன்ற மாநிலங்களில் கூட பாஜக சீட்டு பிடிக்குது. அவ்ளவு ஏன் நம்ம ஊர்லயே பொன்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முடிந்தது. நாங்களும் பகுத்தறிவு பார்த்து ஓட்டு போடுவதில்லை. திமுகவிற்கு ஓட்டு போடுவதை தவிர்த்து வேற வழியில்லை. அதனால் காலாவதியான போலி பகுத்தறிவை ஏறக் கட்டிவிட்டி விட்டு திமுக கடையை புதிது படுத்துங்க அதை காலாவதி பொருட்கள் விற்பனை செய்யும் கடையாக மாற்றிவிடாதீர்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close