சக்திவாய்ந்த கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம்...!

  இளங்கோ   | Last Modified : 26 Dec, 2018 07:02 pm
kallukuzhi-anjaneyar-kovil-special-story

தமிழகத்தில் ஆஞ்சநேயர் கோவில்களை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் என்றாலே தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. மிகவும் புகழ்பெற்ற இந்த கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம் திருச்சியில் உள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த கோவில் ஆகும்.  இந்த ஆலயத்தில், உலக நன்மைக்காகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், வேதவிற்பன்னர்களை கொண்டு வேள்வி நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால், வாழ்வில் நோயின்றி மிகச்சிறப்பாக வளமுடன் வாழலாம் என்பது ஐதீகம். இதனால், இந்த ஹோமத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.  

புரட்டாசி மாதம் என்றாலே ஆஞ்சநேயருக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது, கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ளுர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். 
மேலும், கிரகதோஷம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால்  சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார் என்பது மக்களின் நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமைகளில் கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தின் நடை திறக்கப்படும்.

முதலில் ராமர்சன்னதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதியில் விஷேச அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். இங்கே ஸ்ரீராம நவமி, பத்து நாள் விழாவாக வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல், புரட்டாசி நவராத்திரி ஒன்பது நாள் விழாவும் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீஅனுமன் ஜயந்தி நாளில், 10,008 வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலையும் சாத்தி சிறப்பு பூஜைகள், திருவீதியுலா, விசேஷ அபிஷேகம் என விழா கோலம் பூண்டிருக்கும் கல்லூகுழி ஆஞ்சநேயர் கோவில்.

மார்கழி மாதம் அம்மாவாசையன்று மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த தனமான புதன் கிழமை அனுமன் ஜெயந்தி விழா நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் ஸ்ரீராமநவமி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் ஆஞ்சநேயர் சர்வ அலங்காரத்துடன் முன்மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வருசையில் நின்று ராமபக்தர்கள்  அனுமனை தரிசித்து வருகின்றனர். நல்ல வேலை,  கல்வியில் மேன்மை, ஞாபக சக்தி, தொழில் முன்னேற்றம் என எதுவாக இருந்தாலும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து அனுமனை வழிபட, அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே,  இந்த தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வந்து, அனுமனைத் தரிசித்துச் செல்கின்றனர்.
 

இக்கோவில் 1988ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது. இங்கு உள்ள தியான மண்டபத்தில் மாணவர்களுக்காக சிறப்பு தியானம் மற்றும் மூச்சு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தியான மண்டபத்தில் காட்சி தரும் ஸ்ரீ தியான நிலை அனுமனுக்கு ஸ்ரீராமஜெயம் என்று சீட்டு எழுதி மாலை சார்த்தி தியானம் செய்தால் மனதில் நிம்மதியையும், ஞாபகசக்தியையும், கல்வி செல்வத்தையும் ஏற்படுத்துவார் என நம்புகின்றனர் மாணவர்கள்.  திருச்சியின் பல பகுதிகளில் இருந்தும் சனிக்கிழமைகளில் ஏராளமான மாணவர்களும் இங்கு வந்து அனுமனை வணங்கிச் செல்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close