நவக்கிரக திருக்கோயிலுக்கு ஒரு முறை சென்றால் போதும்....!

  இளங்கோ   | Last Modified : 27 Dec, 2018 03:53 pm
rameswaram-navagraha-thiru-kovil-special-story

இராமேஸ்வரம் வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அங்கு கடலின் உள்ளே தேவி பட்டிணம் நவபாஷான ஒன்பது  நவக்கிரகங்கள் அமைந்துள்ள இடத்திற்கு சென்று வருகிறார்கள். இங்கு ஒன்பது நவக்கிரங்களே நவபாசனமாக கடலின் நடுவே மிகவும் அழகுற காட்சி தருகிறது.  

இந்த இடம் சுமார் 2000 வருடங்கள் பழமையானது என்று புராணங்கள் கூறுகிறது. இவ்வூரை முன் காலத்தில் தேவிப்பூர் என்று அழைத்தனர்.  அது தற்போது தேவிபட்டிணமாக மாறி உள்ளது. இங்குள்ள தீர்த்தம் கேது தீர்த்தம் அதாவது அக்னி தீர்த்தம் மற்றும் ராமர் தீர்த்தம் என்று இந்த தீர்தத்தை அழைக்கிறார்கள். 

இராமயணத்தில் ஸ்ரீராமர் இத்தலத்திற்கு வந்து  கடலின் நடுவே இறங்கி தமது கையால் மணலால் செய்யப் பெற்ற 9 நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்த போது கடல் அலைகளால் நவபாஷான சிலைகள் கரைந்து போனது. உடனே இராமர் பெருமாளை வேண்டியதால் கடல் அலைகளை பெருமாள் தடுத்து நிறுத்தியதாக புராணங்கள் கூறுகிறது. அதனால் இங்குள்ள பெருமாளை ”கடல் அடைத்த பெருமாள்”  என்று அழைக்கிறார்கள். இங்கு வந்த பின் தான் இராமர் சேதுக்கரை சென்று அங்கிர்ந்து பாலம் அமைத்து இலங்கை சென்று இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டு  திரும்பி வரும் வழியில் இராமேஸ்வரம் சென்று, பின் தேவிபட்டிணம் திரும்பி 9 நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து, தமது தோஷங்களை போக்கி கொண்டதாகவும், இங்கு நவக்கிரகங்களை பூஜை செய்த பிறகே, ஸ்ரீ ராமர் தனக்கேற்பட்ட சனி தோஷத்தை போக்கி கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது. 

இத்தலத்தில் நீராடி நவக்கிரகங்களை முனிவர்களும் , யோகிகளும் வழிபட்டு தங்களுடைய தோஷங்களை போக்கி கொண்டார்களாம் . இந்திய திருநாட்டில் நவகிரஹ வழிபாடு என்பது ஆதி சங்கரர் காலத்திற்கு பிற்பட்டே நடைபெறுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  கலியுகம் தோன்றுவதற்கு முன்பே  ஸ்ரீராமர் நவக்கிரகங்களை இங்கு கடலின் நடுவே அமைத்து வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நவக்கிரகங்களை பிரதானமாக வழிபடுகின்ற ஒரே தலம் இதுவே ஆகும். 9 நவகிரஹ ஷேத்திரங்களுக்கு சென்று வழிபடும் பலன், இங்கு ஒரு இடத்தில் வந்து வழிபட்டாலே கிடைத்து விடும் என்பது ஐதீகம். 

சிறப்பு பெற்ற நவக்கிரகங்களை அதுவும் பகவான் ராமபிரானால் வழிபட்ட இத்தலத்து கடவுளை இங்கு வரும் பக்தர்கள், வட நாட்டில் அமையப்பெறவுள்ள ஆலய மரபு வழக்கப்படி தங்களது கைகளால் தொட்டு பூஜை செய்து வழிபடடுவது இதற்கு உண்டான சிறப்பாகும் . தமிழ்நாட்டில் வேறு எத்தலத்திலும் இவ்வழக்கம் கிடையாது என்பது உண்மையாகும். இங்கு வரும் பக்தர்கள் முக்கியமாக தங்களது முன்னோர்களால் ஏற்பட்ட பித்ரு தோஷம், முன்ஜென்ம பாவங்கள், செய்வினைகள் தீர்வதற்கும் அமாவசை நாட்களில் தர்ப்பணம், ஸ்ரார்த்தம்  முதலியனவற்றை செய்து தோஷம் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று நவக்கிரகங்களின் நல் ஆசிகளுடன் வாழ்வில் வளம் பெறலாம். 

குறிப்பாக பித்ரு தோஷம் நீங்கிட தங்களது முன்னோர்கள் ஆசி பெற அமாவாசை , முன்னோர்கள் நினைவு நாட்களில் காலை வேலைகளில் இங்கு வந்து சமுத்திர ஸ்நானம் செய்து வழிபாடு செய்தாலே அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வில் உயர்வு பெற்று ஷேமமாக வாழலாம். இங்கு அமாவாசை , பெளர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். மேலும் சனிப் பெயர்ச்சிக்கு , குரு பெயர்ச்சிக்கு அந்தந்த ஹேத்திரங்களுக்கு செல்ல இயலாதவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து சனிப்பிரிதி, குருப்பிரிதி  அர்ச்சனை செய்து வழிபட்டாலே தங்களது அனைத்து தோஷங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெற்று நவக்கிரகங்களின் நல் ஆசிகளுடன் வாழ்வில் உயர்வு பெறலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும். 

திருக்கோயில் அருகே பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற தனியறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அலுவலக நேரங்களில் பணியாளர்கள் மூலமாக தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற்று கொள்ளலாம். மேலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். பக்தர்கள் ஒரு முறை இத்தலத்திற்கு சென்று வந்தாலே வாழ்வில் எல்லா செல்வமும் பெற்று வளமாக வாழலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close