தமிழகத்தின் மிக உயரமான சிகரம்... தொட்டபெட்டா...!

  இளங்கோ   | Last Modified : 03 Jan, 2019 11:32 pm
thottapettah-special-story

நீலகிரி மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது தொட்ட பெட்டா சிகரம். தொட்டபெட்டா என்ற பெயர் கன்னட மொழியில்தான் வைக்கப்பட்டுள்ளது. அதாவது தொட்ட என்றால் பெரிய என்றும் பெட்டா என்றால் மலை என்றும் கன்னடத்தில் பொருள் கூறுவர். அதன் அடிப்படையிலேயே தொட்டபெட்டா என்ற பெயர் வந்துள்ளது. ஆனால் இந்த மலை சங்க காலத்தில் தோட்டி மலை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 

கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைச் சிகரம் உதகையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், கோத்தகிரி சாலையில் உள்ளது. தமிழகத்தின் மிக உயரமான சிகரம் என்றும் தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது தொட்ட பெட்டா. இது தமிழக அரசின் சுற்றுலா துறையின் கட்டுபாட்டில் உள்ளது. 

இங்கிருந்து சாமுண்டி மலையையும் குல்குடி, கடல்தடு மற்றும் ஹெகுபா சிகரங்களையும் காண முடியும். இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. குளிர்காலங்களில் உதகையை விட அதிகமாகவே இங்கு குளிர் நிலவுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நாளொன்றுக்கு சுமார் 3500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

தொட்டப்பெட்டா சிகரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும் போது இயற்க்கையை நம் கண்முன் வந்து நிறுத்துகிறது. தொலைநோக்கிகள் மூலம் சுற்றுலா பயணிகள் மலைத் தொடர்களையும், பள்ளத்தாக்குகளையும் காண முடியும். மேலும் உதகை நகரம், குன்னூர், மைசூர் மற்றும் முதுமலை வனப்பகுதி உட்பட பல்வேறு இடங்களையும் இங்கிருந்து கண்டு களிக்கலாம். 

சிகரத்தின் உச்சியில் அழகான பூங்காவும் சுற்றுலாத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நடக்கும் பாதையில் சில கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன. பச்சைக் காய்கறி முதல் சூடான பஜ்ஜி வரை அங்கு கிடைக்கின்றன. இங்கு பல வகையான பூக்களை நம்மால் காணமுடிகிறது. நம்மை சுற்றி  முழுக்க முழுக்க பச்சை பசேல் என காட்சி தருகிறது தொட்ட பெட்டா. தொட்ட பெட்டா மலையில் இருந்து பார்த்தால் கீழ் உள்ள ஊர்களை பார்க்கலாம். அந்த அளவிற்க்கு இயற்க்கையோடு ஒட்டி மிக உயரத்தில் உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்களின் பார்வைக்காக திறந்து இருக்கிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா சிகரத்திற்கு, நுழைவு கட்டணமாக 5 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் 7 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

கேமராவுக்கு 50 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 60 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை சுற்றுலா செல்ல உகந்த காலமாக உள்ளது  தொட்ட பெட்டா.  இங்கு எவ்வளவு குளிர் இருந்தாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்க்கையை ரசிக்க கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.முதுமலை வனப்பகுதி உட்பட பல்வேறு இடங்களைக் காணலாம். இவற்றை பார்ப்பதற்கு தொட்டபெட்டா மலை பகுதியில் தொலைநோக்கு கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உதகையின் இயற்கை அழகை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close