சபரிமலைக்கு புனிதப் பயணம்  மேற்கொள்ளும் இலங்கை ஹிந்துக்கள்

  விசேஷா   | Last Modified : 04 Jan, 2019 07:56 pm
srilankan-hindus-coming-to-sabarimala

‛கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்’ என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இருவர், சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது குறித்து, இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி., யோகேஷ்வரன் கூறியதாவது:
இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது; அதற்கான உரிமையும், அதிகாரமும் எனக்கு கிடையாது. எனினும், ஒவ்வொரு வழிபாட்டு தளங்களுக்கும் ஒர் ஐதீகம் உள்ளது; வெவ்வேறு வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
எனவே, சபரிமலை விவகாரத்தில் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தொடர வேண்டும் என்பதே  ஓர் ஹிந்துவாக என் தனிப்பட்ட கருத்து. வழிபாட்டு நடைமுறைகளை மீறி, பெண்கள் இருவர், சுவாமி தரிசனம் செய்தது வேதனை அளிக்கிறது. கேரளாவில் வசிக்கும் ஏராளமான ஹிந்துக்கள், ஐயப்பன் வழிபாட்டை பின்பற்றி வருகின்றனர். அங்கிருக்கும் பலரும், சபரிமலைக்கு செல்வதை புனிதப் பயணமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் விரதங்கள் மேற்கொண்டு, பக்தி பரவசத்துடன் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். சபரிமலை செல்ல, இலங்கையில் செயல்படும் இந்திய துாதரகம், அங்குள்ளவர்களுக்கு இலவச விசா வழங்கி வரும் நடைமுறை அமலில் உள்ளது. மேலும், இஸ்லாமியர்கள், ஹஜ் யாத்திரை செல்ல, மானியம் வழங்கப்படுவது போல், சபரிமலை யாத்திரைக்கும் மானியம் வழங்கும் படி, இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, எங்கள் அரசு உறுதி அளித்துள்ளது. சபரிமலை செல்ல விரும்பும் பக்தர்களை, கப்பல் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, எங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதையும் பரிசீலிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வசிக்கும் ஹிந்துக்கள், சபரிமலை பயணத்தை மிகவும் புனிதமான பார்க்கும் நிலையில், கேரளாவில் தற்போது நடக்கும் சம்பவங்கள்,  எங்கள் தேசத்தில் உள்ள ஹிந்துக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close