நலன் தரும் பனை மரம் ...!

  இளங்கோ   | Last Modified : 05 Jan, 2019 05:33 pm
palm-tree-special-story

பனை மரம்... இது தமிழரின் அடையாளம்... தமிழர் வளர்ந்த இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது. பனை புல்லினத்தை சார்ந்த ஒரு பேரினமாகும். தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டது பனைமரம். உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு என்று ஒரு சில தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். 

அமெரிக்கா, பிரிட்டன், போன்ற நாடுகளுக்கு பனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யபடுகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு அதிக அந்நியச் செலாவணி கிடைக்கிறது.  தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் இருக்கும். இவை இயற்கையான அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்கிறது. கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் இன்றும் உள்ளது. பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடி என்று சிறப்பித்து கூறப்படுவது பனையை தான். 

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. சங்க காலத்தில் செய்தி பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் கட்டி முடித்தனர். தோல்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள்,  பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருட்கள் எளிதில் கெட்டுப் போகாது என்பதால் இன்றும் கூட கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் வைக்கின்றனர்.  

பனைமரம் அதிகம் பயன் தரக்கூடிய பொருள்களை தருகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியவை பனையிலிருந்து பெறப்படும் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

பனையில் நுங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் ஆகியவற்றை சிறுவர்கள் விளையாட்டு பொருட்களாக வைத்துள்ளனர்.  பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது.  வெயில் காலங்களில் இயற்கை நமக்கு அளித்த கொடை பனை நுங்கு. தித்திக்கும் நுங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு அருமருந்தாகும். இதுமட்டும் மல்லாமல்  தாதுக்கள், வைட்டமின்கள்,  நீர்ச் சத்துக்களைக் கொண்ட ஆரோக்கிய உணவு.  பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீர் ஒரு சிறந்த குளிர்ச்சி தரும் பானமாகும். பனையில் கிடைக்கும் பனைவெல்லம் மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்.

பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனைகளை அடையாளம் கண்டறியமுடியும்.

பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். இவை ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும் பனையேறும் தொழில் நடக்கிறது. இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு தமிழகத்தில் நடந்திருகிறது. பனை மரத்திற்கு  போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தை சார்ந்து பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்கள் இத்தொழிலை கைவிடும் நிலைக்கு மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது. ஆகையால் இன்றைய இளைய சமுதாயம் நம் முன்னோர்கள் விட்டு சென்றுள்ள பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close