மண் பானை  இல்லாமல் பொங்கலா...?

  இளங்கோ   | Last Modified : 08 Jan, 2019 12:06 am

mud-pot-special-story

தமிழகத்தில்  பானை என்றால் நம் நினைவுக்கு வருவது பொங்கல் பானை தான். இவை மண்ணினா் செய்யப்படுவதால் மண்பாண்டம் என்றும் கூறப்படுகிறது. மிகப் பழங்காலத்தில் இருந்து மட்பாண்டங்கள் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணால் பாத்திரங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். 

அகழ்வாராட்சி துறையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பல வகையான மண்பானைகள், களிமண் ஜாடிகள் சாட்சியம். மண்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது. இத்தொழில் தமிழில் குயத்தொழில் என்று கூறப்பட்டது. காலப்போக்கில் மட்பாண்டம் செய்பவர்களை  குயவர் என்று அழைக்கப்படுகின்றனர். ஆமாம் தமிழகத்தில் செய்யும் மண்பாண்டங்கள் எப்படி இவ்வளவு தத்தூரபமாக அழகிய கலை வண்ணத்தில் செய்கின்றனர் என்று நீங்கள் நினைக்கலாம். வாங்க பார்க்கலாம்…

நீர், மற்றும் மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண் 2 நாட்களுக்கு ஊரவைக்கபடுகின்றன. பின்னர் மறுபடியும் தேவையான அளவு மண்ணோடு குழப்பப்படுகின்றது. களிமண் அச்சில் கைகளால் வார்த்தெடுத்து தேவையான அளவிற்க்கு பானையை வடிவமைத்து வெயிளில் ஒருநாள் முழுவதும் காயவைக்க வேண்டும். மறுநாள் கிட்டதட்ட 500 பானைகளை  ஒரே அடுப்பில் வைத்து நெருப்பில் ஏறக்குறைய 5 மணி நேரம் 850 சென்டி கிரேட் சூட்டில் பானையை வேக வைக்க வேண்டும். 

இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.  அதிக அளவு சூடு ஆகாமலும் பாத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அதிக சூடானால் பானை வெடித்து விடும். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். பானையை வடிவமைக்கும் முறையை நுட்பமாக கையாளவேண்டும். சூடான பானையை எடுத்து காற்றோட்டமாக வைத்த பின் சாயம் மற்றும் வர்ண ஓவியங்கள் தீட்டி விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள், பானை, மண்சட்டி, அகல் விளக்கு,நெய் விளக்கு,மோட்ச விளக்கு, தூபக்கல், கல்யாண பானை, தண்ணீர் பானை, லிங்கம் போன்ற பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன.  பானை ஒரு இசை கருவியாகவும்  பயன்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே, தமிழகத்தில் ஆண்டுதோறும் மக்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் போது, மண்பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இத்தொழில் செய்யப்படுகிறது. 

பொங்கல் விற்பனைக்காக மண் பானைகள் தயாரிப்பில் மண்பாண்ட  தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். பொங்கல் திருநாளில் மண் பானையில் பொங்கல்  வைப்பதை இன்றவும் பலர் பின்பற்றி வருகின்றனர். குக்கர் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில்  பொங்கல் வைப்பதை தவிர்த்து மக்கள் மண் பானைகளில் பொங்கல் வைத்தால் பொங்கல் சுவையாக ருசியாக இருக்கும் என்றும், தங்களின் வாழ்க்கையில் ஆண்டுதோறும் தை பிறந்தாலும் வழி பிறக்காமல் கடந்த 40 ஆண்டு காலமாக இந்தவித மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரணம் கிடைக்காமல் பிழைப்பு செய்துவருவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

மண் பானைகள் செய்ய களிமண் தட்டுப்பாட்டு ஏற்படுவதால், மட்பாண்டங்கள் செய்வதற்குப் பயன்படும் களிமண்ணோடு தேவைகளுக்கு ஏற்ப  களி மண்ணுடன் வேறுசில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு என்கின்றனர். தங்கள் தொழிலுக்கு தேவையான களிமண் கிடைக்க காவல்துறையினர் கெடுபிடி இருப்பதாலும், வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியுடன் ஏரிகளில் களிமண் எடுக்க அரசு உதவி கேட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர் மண்பாண்ட தொழிளாலர்கள். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.