தமிழகத்தில் கட்டப்பட்ட கடைசி அணை...!

  இளங்கோ   | Last Modified : 09 Jan, 2019 11:39 pm

the-last-dam-in-tamilnadu-special-story

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வில்லூக்குறி என்ற பாலத்தின் அருகே உள்ள அணைதான் மாம்பழத்துறையாறு அணை. மாம்பழத்துறையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் இது. 

மாம்பழத்துறை ஆறானது மருத்தூர் மலையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 838 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி, பின்னர் கடல் மட்டத்தில் இருந்து 78 மீட்டர் உயரத்தில் உள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகளே கட்டப்படவில்லை என்ற கருத்து பரலாக உள்ளது. ஆனால் கடைசியாக 2011ம் ஆண்டு வரை அணை கட்டப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மை. ஆம், தமிழகத்தில் கடைசியாக கட்டப்பட்ட அணை மாம்பழத்துறையாறு அணை. இது 2010 -11 ஆண்டில் திறக்கப்பட்டது. காமராஜர் ஆட்சியில் தான் பெருமளவு அணைகள் கட்டப்பட்டது என்பது எவராலும் மறுப்பதற்கில்லை. ஆனால், காமராஜரின் ஆட்சிக்கு பிறகு 1963ல் இருந்து அணைகள், தடுப்பு அணைகள் என 70க்கும் மேற்பட்ட நீர் தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் ஆழியாறு அணை.   

மாம்பழத்துறையாற்றின் மூலம் குமரி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும், கல்குளம் தாலுகாவில் உள்ள 19 குளங்களும் நிரம்புவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரமும் சிறப்படையும் என்ற நோக்கில் கட்டப்பட்டது.  சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. மாம்பழத்துறையாறு அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும்.

இது வில்லுக்குறியிலிருந்து ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. 80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிப் பெறுகின்றன. 

தமிழக அரசால் 2007ம் ஆண்டு  20 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010-11 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இந்த ஆழியாறு அணையை காண ஏராளமாண சுற்றுலா பயணிகளும் வருகை புரிகின்றனர்.  மாம்பழத்துறையாறு அணைப் பகுதியை இயற்கை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் விருப்பமாக உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.