திண்டுக்கல்லில் கீழே விழுந்த மலைதான் சிறுமலை...!

  இளங்கோ   | Last Modified : 12 Jan, 2019 05:47 pm

dindigul-sirumalai-special-story

தமிழகத்தில் மலைவாசஸ்தலங்களில் ஒன்று சிறுமலை. இவை   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இவை புராண காலத்தில் இருந்தே இந்த மலைக்கு என ஒரு தனி மகிமை உண்டு. 

ராமாயனத்தில் ராவனனுடன் நடந்த மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்கு மூலிகை தேவைப்பட்டது. அப்போது, அனுமன்  மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை இமயமலைக்கு தூக்கிச்சென்றபோது அதில் இருந்து ஒரு சிறு துண்டு திண்டுக்கல் பகுதியில் விழுந்ததாம். ஆகையால் இந்த மலைக்கு சிறுமலை என்று அழைக்கப்படுவதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. சிறுமலை நகரை ஒட்டி வரலாற்று சிறப்பு மிக்க பாண்டியன் குளம் அமைந்துள்ளது. இது பாண்டியர்கள் காலத்தில் குடிநீர் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. சிறு மலை ஆண்டு முழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்க கூடிய காட்டுப் பகுதி. 

சிறுமலையில் வளர்ந்தோங்கிய மரங்கள், சோலைகள் என பசுமையை உள்ளடக்கி ரம்மியாக காட்சியளிக்கிறன. இந்த சிறுமலையில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. சிறு மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு அரிய வகை மூலிகைகள், எலுமிச்சம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் அதிகமாக விளைகின்றன. ஆகியவை மலைப்பகுதியில் முக்கிய பயிர்களாக உள்ளது. இங்கு விளையும் பழவகைகள் தனி சுவை உடையது என ஆப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.  சிறுமலையில் விளையும் மலை வாழைக்கு என தனி சுவை  உண்டு. இங்கு விளையும் வாழைப்பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்தபட்ட்தாம்.

ஆனால் இப்போது வாழை போதிய விளைச்சல் இல்லாத்தால் பஞ்சாமிர்தம் செய்ய போதிய வாழை அனுப்பமுடியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. சிறுமலையில் முதன்முதலாக 1838 ல் காப்பி பயிரிடப்பட்டது. மலையில் பல வகையான தாவர வகைகள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளதால் இங்கு தூய்மையன காற்றை சுவாசிக்கின்றனர் இப்பகுதி மலைவாழ் மக்கள். திண்டுக்கல் மாவட்டம் வழியாக சந்தானவர்த்தினி ஆறு மற்றும் சாத்தையாறு ஓடுகின்றன. இந்த இரண்டு ஆறுகளும் சிறுமலையில் உருவாகுகின்றன. சந்தானவர்த்தினி ஆற்றில் நீராடுபவர்களுக்கு சந்ததிகள் (சந்தானம்) பெருகும் என்பது நம்பிக்கை. 

மலையில் இருந்து வரும் நீர் பல வகை மூலிகைகளை உள்ளடக்கியதால் நோய்களை தீர்க்கும் அறும்மருந்தாக உள்ளது என கூறப்படுகிறது. சிறுமலையை சுற்றி புதூர், பனையூர், சக்கிலிப்பட்டி, அரளக்காடு, தவிட்டுக்கடை, தாழைக்காடு, கடமான்குளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. சிறுமலையிலுள்ள மீன்முட்டிபாறை பகுதியில் உள்ள குகைகளில் ஆதிவாசிகளின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இங்கு இயற்ககையோடு கூடிய மக்கள் விரும்பும் பல இடங்கள் உள்ளன.  

அங்கிருந்து கீழே தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் அருமையான இடம். திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப் பகுதிகள் வரை கண்டுகளிக்கலாம். சிறுமலை சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டும் கூட அப்பகுதி மக்களுக்கு இதுவரை அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை. இனியாவது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுமலை மலை வாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.