‛தை’க்கு முன்னவளாம் மார்கழியின் மாண்பும், சிறப்பும்

  விசேஷா   | Last Modified : 14 Jan, 2019 10:39 am

special-article-about-bhogi

தமிழர் திருநாளாம் தை திருநாள், தமிழக கிராமங்களிலும் சற்றே மக்கள் தொகை அதிகம் உள்ள சிறிய நகரங்களில் கொண்டாடப்படும் அழகே தனி. தை பிறப்பதற்கு ஒரு மாதம் முன்னதாகே, மார்கழி உற்சவம் என்ற பெயரில், திருவிழா கொண்டாட்டம் கோலாகலமாக துவங்கிவிடும். 

மார்கழி மாதம் முழுவதும், அதிகாலை பிரம்ப முகூர்த்தம் எனப்படும், 4:30 மணிக்கெல்லாம், பெண்கள், சிறுமியர், வீட்டு வாசலில் பசுஞ்சாணமிட்டு, அதில் வண்ண வண்ண கோலமிடுவர். கோலத்தின் நடுவே, பூசணிப் பூ வைக்கப்படும்.
இவை அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான காரணங்களும் உண்டு.

மார்கழி மாதத்தில், பூமியை சுற்றி தடுப்பு வேலி போல் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் வாயுக்கள் கீழறங்கி வருவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் அதிகாலை எழுந்தால், வழக்கத்திற்கு மாறாக அதிக ஆக்சிஜனை பெற முடியும். 

இந்த பிராண வாயு, உடல் இயக்கத்திற்கும், மன அமைதிக்கும் துணை நிற்கும். இதை நேரடியாக சொன்னால் எத்தனை பேர் பின்பற்றுவர். அதற்காகத்தான், அழகிய கோலமிட்டு, வாசலை அலங்கரித்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என கூறி வைத்துள்ளனர் நம் முன்னாேர்கள்.

இந்த மாதத்தில் அதிகாலை எழும் பெண்களுக்கு, அதிக பிராண வாயு எளிதில் கிடைக்கிறது. அதே போல் பஜனை குழுக்களாக செல்லும் ஆண்களும், அதிகாலையில், கோவிலுக்கு செல்வோரும் இயற்கை அளிக்கும் பலனை பெறலாம்.

வாசலில் பசுஞ்சாணமிடுவதால், குளிர் காலத்தில் பரவும் தொற்று நோய் கிருமிகள், வீட்டிற்குள் வராமல் தடுக்கப்படும். கோலமிடுவதில் அதிக கவனம் செலுத்துவதால், பொறுமையும், சிந்தனை திறனும் அதிகரிக்கும். 

இத்தனை சிறப்புகள் பெற்ற மார்கழியின் இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், பழையன கழிதழும், புதிய புகுதலுமாய் இருக்க வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பழைய பொருட்கள் மட்டுமின்றி, நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள், பழைய பகை, வருத்தங்கள், கோபங்களையும் துாக்கி வீசிவிட்டு, புதிய மனிதனாய்,  புதிய உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்பதே, போகி கொண்டாடுவதன் நோக்கம். 

இந்த பண்டிகை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பல வகையாக கொண்டாடப்படுகிறது. யார் எப்படி கொண்டாடினாலும்,  பழைய சோகத்தை தீயிட்டு கொளுத்தி, தங்க மங்கையாம் தை மங்கையை வரவேற்போம்.

newstm.in

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.