குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற சித்தன்னவாசல்..!

  இளங்கோ   | Last Modified : 16 Jan, 2019 03:36 pm
sithannavasal-special-story

புதுக்கோடை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது தான் "சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்".  இந்த கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. 

சித்தன்னவாசலுக்கு தென்னிந்தியாவின் “அஜந்தா குகை“ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.  சித்தன்னவாசல் என்ற சொல்  சித்தானம் வாசஹ் என்னும் வடமொழி சொற்களிலிருந்து வந்திருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு `துறவிகள் இருப்பிடம்' எனப் பொருள் கூறப்படுகிறது.  பல்லவர் காலத்துக்கு முன்னர் கோயில்கள் செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டு வந்தன. குகைக் கோயில்களையும் குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் முதன்முதலில் கட்டியவர் மகேந்திரவர்மன். இவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியவர். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்கு உள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன. 

சமணர் காலத்து ஓவியங்கள் என்பதால்  கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதபடுகிறது. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு சமணர்கள் வரைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 முதல் 1200 ஆண்டு பழமையானவை. சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது.

இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இங்கு சமண கோயில்களும் உள்ளன. சித்தன்னவாசலில் உள்ள கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. முதலில் இக்குகை ஓவியங்கள், முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது என்று கருதபடுகிறது.  ஆனால் இங்கு உள்ள கல்வெட்டுகளில் மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர்செய்தான் என கூறப்பட்டுள்ளது. இந்த குகை ஓவியங்கள் ஆசீவக துறவிகளுடையது என்றும் சைனசமயத்தினருடையது  என்றும் இருவேறுபட்ட கருத்துகளும் உள்ளன. 

இந்த ஓவியங்கள் மட்டுமல்லாமல் சமண மத தலைவர்கள் இருவரின் சிற்பங்களும் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்து இதை ஒரு கோவிலாக வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும்,  தற்போது பயன்படுத்தும் அளவிற்கு வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன. தமிழா்களின் கலை பண்பாட்டினை பறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன. 

சுண்ணாம்பு பூசிய சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள், குளத்தில் நிறைய தாமரைகள் மலர்வது போலவும், கொக்குகளும், மீன்களும், முதலையும் யானையும் அங்கு இருப்பது போலவும், முனிவர் ஒருவர் குளத்தில் பூ பறிப்பது போலவும், அத்தனையும் தத்ரூபமாக இருக்கின்றன. ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும், எருமைகள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும், அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக அமையப்பெற்றுள்ளது. இவை அனைத்தும் மேல் சுவரில் வரையப்பட்டிருக்கும் 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள் ஆகும்.
தொல்லியல் துறை மூலமாக சித்தன்னவாசல் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வராச்சிகளின் படி இந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட பானைகளும் அவற்றில் மனித எலும்புகூடுகளும் காணப்பட்டுள்ளது. பழங்காலங்களில் இங்கு வசித்து வரும் சித்தா்கள் மறைவிற்கு பிறகு தாழிகளில் அடைத்து இங்கு புதைக்கப்பட்டார்கள் என கருதப்படுகிறது.  சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவா் பூங்காவும் இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த கலை மற்றும் இலக்கியச் செய்திகள் அடங்கிய சிற்பங்களின் பூங்காவும் இது அமைந்துள்ளது. குகை ஓவியங்கள் மற்றும் சமணா்ப்படுக்களும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் காண ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது சித்தன்னவாசலில் உள்ள  சிற்பக்கலை மற்றும் ஒவியக்கலை நம்மை நிச்சயம் பிரம்மிப்புள்ளாகும் தலமாக அமைந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close