குற்றாலம்: வற்றாத அருவி எனப்படும் ஐந்தருவியின் சிறப்பு...

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 10:17 am
special-of-the-five-waterfalls

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அருவிதான் ஐந்தருவி. இது குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்தில் உருவாகி சிற்றாற்றின் வழியே ஒடும் இந்த தண்ணீர் ஐந்து கிளைகளாக பிரிந்து ஐந்தருவியாக விழுகிறது.

இந்த ஐந்தருவிகளில் பெண்கள் குளிப்பதற்கு தனி கிளைகளும், ஆண்கள் குளிப்பதற்கு தனி கிளைகளுமாக வனத்துறையினர் பிரித்து வைத்துள்ளனர். முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள படகு குழாமில் இயற்கையை பார்த்தவாரு சுற்றுலா பயணிகள் படகு சவாரி  செல்கின்றனர்.

ஐந்தருவியை சுற்றி கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை பார்த்து ரசிக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் குடும்பத்துடன் படையெடுக்கின்றனர். குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஐந்தருவி அருகே அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா கவர்ந்திழுக்கிறது. இங்கு நீரோடை பாலம், நீரூற்று, சிறுவர் விளையாட்டு திடல், தாமரை குளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

இதே போல கொன்றை மலர்கள், இட்லிப்பூக்கள் என பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பல மாதங்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் கூட குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் விழுந்துக்கொண்டிருக்கும். மெயின் அருவியின் நீரோடையில் தண்ணீர் விழுகிறதோ இல்லையோ,  ஐந்தருவியின் நீரோடையில் தண்ணீர் எப்போது வந்து கொண்டே இருக்கும்.

குற்றாலம் ஐந்தருவியி்ல் சுமார் 40 ஏக்கர் பரப்பரளவில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை உள்ளது. இங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பழத்தோட்டத்தில் மரக்கன்றுகள், பூச்செடிகள், மூலிகை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஐந்தருவியை ஓட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பழத்தோட்ட பண்ணைக்கு ஆண்டுதோறும்  சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். மேலும், கண்ணை கவரும் அழகு செடிகளை வாங்கி செல்கின்றனர்.  

தற்போது குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஊட்டி, கொடைக்கானல், போன்ற சுற்றுலா தலங்களில் அமைக்கப்பட்டுள்ள பூத்தோட்டங்கள் போன்று, இங்கும் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இயற்கை பூந் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியின் அருகில் சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close