சூப்பர் ஸ்டார் ரஜினி:  நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா ?

  பாரதி பித்தன்   | Last Modified : 18 Jan, 2019 06:12 pm
airticle-on-rajini-politics

 


தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் யாரையும் தமிழர்கள், தலைவராக ஏற்க தவறியதில்லை. கேப்டன் விஜயகாந்த்தின் அரசியல் வெற்றி, இதற்கு ஒரு நல்ல உதாரணம். 

கடந்த, 1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, மக்கள், ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையில்  இருந்தனர். அப்போது, நடிகர் ரஜினி வாய்ஸ் கூடவே சேர்ந்து கொண்டதால், தி.மு.க., எளிதாக வெற்றி பெற்றது. 
அந்த தேர்தல் தான், ரஜினியின் அரசியல் வருகைக்கு காரணமாக அமைந்த திருப்பு முனை. 


அப்போது தொடங்கி இன்று வரை, அவரின் முழுமையான அரசியல் அறிவிப்பை எதிர்நோக்கி, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர். 


ஆன்மீக வாதி, தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். ஜெயலலிதா உச்சத்தில் இருந்த போதே, அவரை எதிர்த்தவர். விழா ஒன்றில் கலைஞரை வைத்துக் கொண்டே, நடிகர் அஜித்குமார், தன் மனக்குமுறலை கொட்டிய போது அதை ஆதரித்தவர்.

இப்படி பலவிதமான நிலைப்பாடுகளால், பொது மக்களும், ரஜினியை ஒரு நல்ல மனிதராக பார்க்கின்றனர். 

ஜெயலலிதா, கருணாநிதி இருவரையும் இழந்து, தமிழகம்,  நல்ல தலைவனை தேடிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு தேனாக பாய்ந்தது. இதையடுத்து, அவர் தலைவர் என்ற அந்தஸ்த்துக்கு உயர தயாரானார்.

 

 பல ஆண்டுகளாக பகுத்தறிவு கோஷத்தையும், அதில், தி.மு.க.,வின் நடிப்பையும் பார்த்து ரசித்த மக்களுக்கு ரஜினியின் ஆன்மீக அரசியல் நிலைப்பாடு நிம்மதியை தந்தது. 

எம்.ஜி.ஆர்., - அண்ணாயிசம் என்று அறிவித்ததும், அதன் பொருளை கேட்டு தமிழகத்தில் நீண்டகாலம் விவாதம் எழுந்தது போலவே, ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றிய விவாதமும் உருவானது. 

மக்களுக்கு ஆன்மீக அரசியல் புரியாவிட்டாலும், அது நல்லது என்ற உணர்வு ஏற்பட்டது. இதனால், மேடைகளில் தொடர்ந்து ரஜினி ஆன்மீக அரசியல் முழக்கம் எடுப்பட்டது. 

இப்படி, வாழ்க்கையில் ஆன்மீக அரசியல்வாதியாக வேஷம் கட்டும் ரஜினி, சினிமாவில் ஏனோ அதற்கு எதிரான நிலைப்பாட்டை, குறிப்பாக இந்து விரோத நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதே புரியாத புதிராக உள்ளது. 

 

 

தொடங்காத கட்சிக்கு ஆன்மீகம், வசூலை குவிக்க வேண்டும் என்பதற்கு இந்து விரோத கொள்கை என்று இருநிலைப்பாட்டை எடுப்பது, வரலாற்றில் நல்ல பெயர் கொடுக்காது. 

தமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திட்டமிட்டு உள் நுழைந்தார்கள். இதனால் தான், ரவுடிகள் ஹீரோவானார்கள், நம்மை சுற்றி வாழ்ந்தாலும், புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தவர்கள் பற்றிய சினிமாகள் வெளிவந்ததன. 

இவற்றின் வெற்றி, ரஜினியை திரும்ப பார்க்க வைத்தது. விளைவு காலா, கபாலி, பேட்ட போன்றவற்றில் அவர் வேடம் கட்டினார். இதில், வழக்கம் போல ஆன்மிக அரசியலை அடையாளம் காட்டினால் கல்லாபெட்டி நிரம்பாது என நினைத்த ரஜினி, இவற்றில் அதை உதறிவிட்டார். 

மக்கள் மத்தியில், ரஜினிக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தங்கள் கருத்துக்களை, ரஜினி முகமூடியுடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல துடிக்கும், ரஞ்ஜித் போன்ற  இயக்குனர்கள் அவரை, சரியாக பயன்படுத்திக் கொடுள்ளனர். 

காலா படத்தில், துாய்மை இந்தியா திட்ட எதிர்ப்பு;  போராட்டம் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்ற வகையில் முடிவு சொல்வது என அனைத்து விஷயங்களும், ரஜினி, பொதுமேடைகளில் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானது. 


என்றால் கூட காலா கல்லாபெட்டியை நிரப்பியதால், தற்போது வெளிவந்துள்ள பேட்டயிலும், காலாவிற்கு இணையான இந்து விரோத கருத்துக்கள் மட்டும் அல்லாமல், சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களும் கொட்டிக்கிடறது.  

திருமணவயதில் உள்ள பெண், தன் தாய்க்கு மறுமணம் செய்ய முயற்சிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை எந்த சமூகம் முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்?

வாங்க சார் இங்க வந்து பாருங்க என்று சில புரட்சிவாதிகள் துாக்கிபிடிக்கலாம். இந்த வழக்கத்தை பெரும்பான்மையாக்க வேண்டும் என்று இயக்குனர் நினைப்பதாகத்தான் தோன்றுகிறது. 

திருமணத்திற்கு  முன் உடலுறவு கொள்ளலாம் என்று சொன்ன குஷ்புவின் உருவ பொம்மையை எதிர்த்து போராடிய தமிழகத்தில், அதைவிட ஒரு படி மேலே சென்று, திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணை கருவுறச் செய்வது தவறு இல்லை என கூறிவிட்டு எப்படி எளிதில் கடந்து செல்ல முடிகிறது என்பது தெரியவில்லை. 

இந்த காட்சியை காணும் போது, ரஜினி மகளின் இரண்டாவது திருமணம் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. 

 

தன் குடும்பத்திலும் இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவரா ரஜினி? என்று நினைக்க தோன்றுகிறது. 
தந்தை பாசம் காட்டி, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை  ஏமாற்றும் இந்த கும்பல், சமூதாயத்திற்கு சொல்வரும் விஷயம் யாரையும் நம்பாதே என்று சொல்கிறதா, அல்லது குடும்ப உறவுகளுக்குள் குழப்பதை ஏற்படுத்துகிறதா என தெரியவி்ல்லை. 

அவர்களின் கருத்தை நியாப்படுத்தும் வகையில் ராமாயண உதாரணம் வேறு. யாரேனும் கேள்வி கேட்டால், உங்கள் ராமாயணத்திலேயே நம்ப வைத்து கழுத்தறுத்தது நியாயம் தான் என கூறியுள்ளனரே எனக் கூற வசதியாகவே, இப்படி ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

அதேபோல், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ஆதரிப்பதாக எண்ணி, இரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் - யுவதிகள் மனதில் தவறான எண்ணத்தை பதிய செய்யும் முயற்சியில் களம் இறங்கியுள்ளாரா, இந்த படத்தின் இயக்குனர் என்பதிலும் சந்தேகம் இருக்கவே செய்கிறது.

இப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்து, அதில் ரஜினி நடிப்பது, அவர் பாம்புக்கு தலையையும், மீனுக்கு தலையையை காட்டும் வாளை மீன் வாழ்க்கையில் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. நடிப்பில் கொடிகட்டி பறந்த சிவாஜியையே,தமிழர்கள் அரசியலில் தோல்வி அடைய செய்தனர் என்பதை உணர வேண்டும். 

அதைப்போலவே தான், வாழ்க்கை ஒன்று; நடிப்பு ஒன்று என வைத்துக் கொள்பவர்களையும், இந்த சமுதாயம் மதிக்காது. இதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close