15,000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...!

  இளங்கோ   | Last Modified : 22 Jan, 2019 06:29 pm
vellore-golden-temple-special-story

வேலூர் மாவட்டத்தில் திருமலைக்கோடி என்னும் ஊரில் ஸ்ரீபுரம் என்ற பகுதியில் ஸ்ரீபுரம் பொற்கோவில் அமைந்திருக்கிறது. இந்த பொற்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். மலைக்கோடி என்ற இடத்தில் பொற்கோவில் அமையப்பெற்றுள்ளதால் அந்த இடத்திற்கு  ஸ்ரீபுரம் என்ற புதிய பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

சுமார் 15 ஆயிரம் கிலோ தங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கோவிலை சுற்றிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநாராயணி அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலை சுற்றியுள்ள நட்சத்திர வடிவத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டும். 1500 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் நிலத்தில் மொத்தமாக, நூறு ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவில் கோயில் அமைந்திருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கோவிலின் வெளிப்பிரகாரம் வானிலிருந்து பார்க்கும் போது பெருமாளின் சுதர்சன சக்கரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 

சுமார் 2 கிலோமீட்டர் அளவு கொண்ட இந்த பிரகாரத்தை பக்தர்கள் சுற்றிவந்து இக்கோவிலின் மைய மண்டபத்தில் நுழையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இப்படி வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு நினைத்த காரியம் நிரைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. இக்கோவிலின் விஷேஷ அம்சமாக கோவிலின் தெய்வமாக நாராயணி தேவி சுயம்புவாக இருப்பதாகும். இந்த கோவிலின் அனைத்து பகுதிகளுமே முழுக்க சுத்த தங்கத்தால் ஆன முலாம் பூசிய  தகடுகளால் செய்யப்பட்டதாகும்.  

இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபுரம் என்ற இந்த பகுதியில் சுயம்புவாக ஸ்ரீ நாராயணி தேவியின் சிலை தோன்றியதாகவும், அப்போது  நாராயணி சுற்றி ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் இத்தல வரலாறு கூறுகிறது.  கோயிலின் இரு பக்கங்களிலும் அடர்ந்து வளர்ந்த மரங்கள், தரையை போர்த்தியிருக்கும் பச்சை புல்வெளி, நீர் வீழ்ச்சி என்று சொர்க்கப்புரியாகவே ஸ்ரீபுரம் காட்சியளிக்கிறது.  வழி நெடுகிலும் ஸ்ரீநாராயணி அம்மனின் பக்தராகவும் பொற்கோவிலின் தர்மகர்த்தாகவும் இருக்கும் ஸ்ரீ சக்தி அம்மாவின் படங்கள் மாலைகளோடு காட்சியளிக்கும். பொற்கோவிலின் கொள்ளை அழகை ரசிக்கவே உலக முழுவதிலிருந்தும் சகல மதத்தினரும் வருகை தருகின்றனர். 

சக்தி அம்மா தொண்ணூறாம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில் மலைக்கோடியில் ஒரு பாம்பு புற்றின் அருகில் அமர்ந்து நாராயணி அம்மனின் சக்தியோடு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி வந்திருக்கிறார். அவரின் பெரும் முயற்சியால்தான் இந்தியாவுக்கு ஒரு தங்கக் கோயில் கிடைத்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்கள்,பார்வையாளர்களில் குறிப்பாக தமிழர்களைவிட வெளி மாநிலத்தவர்களே அதிகமாக வருகை தருகின்றனர். வேலூருக்கு பக்கத்தில் ஆந்திரா இருப்பதால் திருப்பதிக்கு மொட்டை போட வருபவர்கள்,அங்கு மொட்டை போட்டு முடிந்ததும் நேராக கோல்டன் டெம்பலுக்கு வந்துவிடுகின்றனர். 

கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளே நிலப்பரப்பில் நூற்றி ஐம்பது கட்டில்களோடு நூறு வைத்தியர்களைக் கொண்ட பெரிய வைத்தியசாலை ஒன்றும் இயங்குகிறது. இந்தியாவில் ஏற்கனவே இருந்த அமிர்தசரஸ் தங்கக் கோயிலை இப்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருக்கிறதாம் இந்த வேலூர் தங்கக் கோயில். சொர்க்கபுரியை நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால் வேலூருக்கு தான் வரவேண்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close