யார் உனது ஆசிரியர்..?

  பாரதி பித்தன்   | Last Modified : 20 Jan, 2019 05:50 pm
who-is-your-teacher

புதுவை மாவட்டம் விராலிமலையில் 1980களில்  துரைப்பிச்சை என்று ஒரு தமிழாசிரியர் இருந்தார். மாணவர்கள் தமிழை தவறாக எழுதினால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்று நீ எழுதிவிட்டு போய்விடுவாய், படிக்கிறவன் யாருடா உன் வாத்தி என்று என்னை திட்டுவான் என்று கத்துவார், 

அதே போல தமிழக அரசியலில் யாருடா உன் வாத்தி என்று கேள்வி கேட்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான நபர் தினகரன் மட்டுமே. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு துரைப்பிச்சை தமிழில் தவறாக எழுதியவனை பார்த்துக் கேட்பார். ஆனால் தினகரனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் என்ன நடந்தாலும் அசராமல் அரசியல் நடத்துவதை பார்த்து கேட்க தோன்றுகிறது. 

சமீபத்தில் ஆர்கே நகர் வெற்றி குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பினர். அதற்கு தினகரன், ஏங்க 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், 4 ஆயிரம் கொடுத்தவருக்கு ஓட்டு போடாமல் ரூ. 20 டோக்கனுக்கா ஓட்டு போடுவார் என்று பதில் அளிப்பார். ஆமாம் உண்மைதானே என்று தோன்றும். 

திருச்சியில் நடந்த கூட்டத்தில் தினகரன் பேச்சு தீவிர அரசியலில் புதிதாக புகுந்தவரிடம் எதிர்பார்க்க முடியாது. குறிப்புவைத்துக் கொண்டு பேசுவது போல கூடத் தெரியவில்லை. மனதில் இருப்பதை கொட்டுவதைப் போலவே உள்ளது. 

திருச்சி திருவானைக்காவலில் தினகரன் பேட்டியளித்தார். அப்போது அதிமுக பாஜவுடன் தான் கூட்டணி வைக்கும்( இந்த நிமிடம் வரை அதிமுக இல்லை என்றே மறுக்கிறது) அந்த கூட்டணி டெப்பாசிட் வாங்காது என்கிறார். திமுக கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது. அந்த கட்சி பாஜவுடன் கூட்டணி அமைக்க கூட தயங்காது என்று போட்டு உடைக்கிறார். அதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்துக் கொண்டே எதிர்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் திமுக கலந்து கொள்கிறது. திமுக உள்ளூரில் வியாபாரம் செய்ய முடியாமல் கொல்கத்தா சென்று வியாபாரம் நடத்துகிறது என்று நக்கலாக கூறினாலும் அதில் உண்மை இல்லை என்று மறுக்க முடியாது. 

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்று சாடுவது, அவர்கள் அப்படித்தானே டிடிவி தினகரன் சொன்னதுல என்ன தப்பு என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close