ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை... பவானிசாகர் !

  டேவிட்   | Last Modified : 21 Jan, 2019 12:04 pm
bhavani-sagar-dam-special-story

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அடுத்த கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் கட்டப்பட்டது.  இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீத்தேக்கம் என்று பெயர்வந்தது.

நாடு விடுதலை அடைந்த பிறகு உருவான இத்திட்டம் 1956 ல் நிறைவடைந்தது. இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய், விவசாயிகளுக்கு பெரும் பங்களிக்கிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை பவானிசாகர் அணைக்கட்டு ஆகும். ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான்.  

தாமிரபரணி பாசனத்தில் தலையானது பாபநாசம் அணைக்கட்டு. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி  ஆகும். பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942-ல் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்படும் முன்பு பாணதீர்த்த அருவி, கவுதலையாறு, பாம்பாறு, மயிலாறு போன்ற ஆறுகளில் இருந்து வந்த தண்ணீர் ஒன்றிணைந்து தாமிரபரணியாக ஓடிக்கொண்டிருந்தது. 

பாபநாசம் அணை மேலணை, கீழணை என்று இரு பிரிவாக கட்டப் பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது மேலணை. இதில் 120 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம். 1944-ம் ஆண்டிலிருந்து மேலணையிலிருந்தும், கீழணை யிலிருந்தும் 4 யூனிட்கள் மூலம் மொத்தம் 28 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பாபநாசம் அணையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  

இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. டணாய்க்கன்  கோட்டை என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது.  ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்தக் கோட்டை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close