ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவா? நெருப்போடு விளையாடாதீர் ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 07:04 pm
airticle-on-government-servent-strike

ஒரு நாட்டிற்கு சுந்திரம் கிடைத்ததும், அனைவரும் கடமைகள் குறித்து சிந்திக்க வேண்டும். ஆனால் வசதியான நாடுகளை பார்த்து சலுகைகளை அள்ளி வழங்கி விட்டோம். அதனால் ஒரு சில நாடுகளிலேயே திணறத் தொடங்கிவிட்டோம். 

பின்னர் அதனை சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, எதிர்ப்பு பலமாக இருக்கிறது.
ஜாக்டோ ஜியோவின் போராட்டதின் முக்கியமான காரணமான, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இது போன்றது தான்.

தொடக்கத்தில்  எந்த வித பங்களிப்புமே இல்லாமல், அரசு ஊழியர்களுக்குஓய்வூதியம் அறிவிக்கப்பட்டது. பணியாற்றுபவர்களை விட, ஓய்வூதியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போது, அரசுக்கு இதில் எந்த வித பிரச்னையும் இல்லை. 

பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் ஓய்வு பெற்றனர். இதனால் சம்பளத்திற்கு இணையாக ஓய்வூதியத்திற்கும் செலவு செய்ய வேண்டி இருந்தது. இதனால், நாடு விழித்துக் கொண்டது. பங்கேற்பு ஒய்வூதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. 2003ம் ஆண்டில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னரும் கூட, தமிழகத்தில் 25,362 கோடி செலவு செய்யப்பகிறது.

இது அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட கணக்கு. மாநில செலவுத் தொகையில், 15.37 சதவீதம். அரசு வேலை பார்க்கிறவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 52,171 கோடி.(31.63) சதவீதம். அதாவது வேலைபார்ப்பவர்கள் சம்பளத்தில் கிட்டதட்ட சரிபாதி வேலைபார்த்தவர்கள் வாங்கும் ஓய்வூதியம்.

இந்தநிலையில் தான் அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் போராட்டத்தை ராமதாஸ், வைகோ, இடதுசாரி தலைவர்கள், அவ்வளவு ஏன் கமல் கூட ஆதரவு தெரிவிக்கலாம். 

அதில் ஒரு நியாயம் உண்டு. அவர்கள் யாரும் இது வரையில் ஆட்சி பொறுப்பில் இருந்தது இல்லை. வரும் சட்டசபைத்தேர்தலில் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் அவர்கள் கோரிக்கையை ஸ்டாலின் ஆதரிப்பதில், நியாயத்தை விட சந்தர்ப்பவாதமே மேலோங்கி இருக்கிறது. 

அதிலும் முதல்வர் ஈகோ இல்லாமல் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாம்! ஸ்டாலின் சொல்கிறார். இது என்ன நியாயம்?

பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது, 2003ம் ஆண்டு. அதற்கு பிறகு 2006–2011ம் ஆண்டு வரை தி.மு.க.,தான் ஆட்சியில் இருந்தது. அதில் ஸ்டாலின் துணைமுதல்வராகவும் பதவி வகித்தார். ஒரே ஒரு கையேழுத்துப் போட்டிருந்தால், பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வந்திருக்கும்.  

ஈகோ பார்க்காமல் ஸ்டாலின் இந்த நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு போராட்டமே நடந்திருக்காது. ஆனால் அப்போது அவர் இதைப் பற்றி சிந்திக்க கூட இல்லை. ஆக... ஆட்சியில் இருந்த போது செய்யாமல் விட்டு விட்டு... அ.தி.மு.க., ஆட்சியை அவர் குறை சொல்கிறார். ஆக... அவர் செய்வது சந்தர்ப்பவாதம் என்று சொல்வதை விட வேறு எப்படி சொல்ல முடியும்.

இந்த சந்தர்ப்பவாதம் கூட, ஸ்டாலினுக்கு தீமையாகத்தான் முடியும். வரும் சட்டசபைத் தேர்தலின் போது, இப்போது உள்ள நிலையே தொடர்ந்தால், தி.மு.க., ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். அந்த சூழ்நிலையில், ஸ்டாலின் தான் முதல்வர் என்ற முள்கிரீடத்தை சுமக்க வேண்டியிருக்கும். 

 

அப்போதும், நம்ம அரசு ஊழியர்கள் மறக்காமல் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்துவார்கள். அவர்களுக்காக, இதனை ஸ்டாலின் அமல்படுதினால், மாநிலத்தின் தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

ஆக... அவர் அதை அமல்படுத்தாமல் வேறு பல காரணங்களை அடுக்க வேண்டியிருக்கும். அவை அனைத்தும் தற்போது அவர் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.
கடந்த காலத்தில் இணையத்தின் வளர்ச்சி இவ்வளாக இல்லை. மக்களின் உணர்ச்சியை ஊட்டியது பத்திரிக்கைகள், டி.வி.,கள் தான். அவற்றில் எவ்வளவு பரபரப்பு செய்தி வந்தால் கூட ஒரு சில நாட்கள், ஒரு சில வருடங்களில் மறந்து விடுவார்கள். 

இப்போதோ ஏதோ ஒரு விஷயத்தை கூகுளில் தேடினால், அள்ளிக் கொட்டி விடும். ஜெயலலிதா டெஸ்மா, எஸ்மா சட்டங்களை வீசி அரசு ஊழியர்கள் கழுத்தில் சுறுக்கு போட்டார். அதன் பின்னர் அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை ஒரு நாள் போராட்டமாக மாற்றிக் கொண்டன. 

இந்த சூழ்நிலையில் அரசு ஊழியர் சங்க நிர்வாகியிடம் இப்போது ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்ட போது, இப்போது இந்த அம்மாவிற்கு பயந்து போராட்டம் நடத்தாமல் விட்டு விட்டால், அடுத்து வரும் ஆட்சியில் அப்போ பேசாமல் தானே இருந்தீர்கள் என்று பேச்சு வரும். உண்மையில் பிரச்னை இருந்தால் கூட போராட முடியாது. அதற்காகத்தான் இப்போது போராடுகிறோம் என்றார்.

இப்போது நடக்கும் போராட்டத்திற்கும், இந்த இலக்கணம் பொருந்தும். ஆக... ஸ்டாலின் எடுத்தேன் கவிழ்தேன் என்று பேசினால் அவர் முள்கீரடத்தை சுமக்கும் போது, மிகவும் வேதனையாக இருக்கும். நெருப்போடு விளையாடுவதை உணர்ந்து கொள்ள வேண்டியது ஸ்டாலினின் கடமை.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close