சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்...!

  இளங்கோ   | Last Modified : 28 Jan, 2019 04:19 pm
sathyamangalam-tiger-forest-special-story

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்காவில் உள்ளது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம். இவை  மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் புலிகள் காப்பகமாக உள்ளது. 

இவை கடந்த 2008 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டு இந்த சரணாலயம் 2011 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.  அதிக பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் தமிழ்நாட்டின் மிகபெரிய வனவிலங்கு சரணாலயம் ஆகும். இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு உய்வகமாக திகழ்கிறது. இது 2013ல் தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் நான்காவதாக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் காப்பகம் ஆகும். சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அமைந்துள்ளது.

சத்தியமங்கலம் காடு 5 வகைகளை கொண்டதாக அமைந்துள்ளது.இதில் வெப்ப மண்டல பசுமையான, அரை பசுமையான,கலப்பு இலையுதிர்,முள் காடுகள் மற்றும் உலர்ந்த இலையுதிர் காடுகள் என்று 5 வகையான வெப்பமண்டல வனப்பகுதியாக உள்ளது. இங்கு புதர் காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரிக் கரையோர நீர்மத்தி நிறைந்த ஆற்றோரக்காடு போன்ற காட்டுவகைகளைக் கொண்டது.  இந்த காடுகளில் சந்தன மரம் அதிகமாக இருக்கிறது. சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் சந்தன கடத்தல் வீரப்பன் இருக்கும் வரை வீரப்பன் காடு என்று பெயர் பெற்றிருந்த சந்தியமங்கலம், பின்னர் அவர் கொல்லப்பட்ட பிறகு சத்தியமங்கல புலிகள் வனபகுதி என்றானதாக கூறப்படுகிறது. இந்த காட்டில் அதிகம் புலிகள் இருப்பதாக நிரூபனம் ஆன பிறகு புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டகாக கூறப்பகுறது.

இங்கு நரை அணில், யானை, சிறுத்தை, ஆற்று நீர் நாய், செம்புல்லிப் பூனை, அலுங்கு, கள்ள மான், கடமான், காட்டெருமை, செந்நாய், கரடி உள்ளிட்ட 35 வகை பாலூட்டிகளும், மேலும், 40க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.  மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடிக் கழுகு போன்ற 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை, போன்ற ஊர்வன இனங்களும் இங்கு காணப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு இந்த உய்விடத்தில் வனத்துறையினரால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இங்கு 241 வகைப் பறவைகள் 150 வகை வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வனப்பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் ஜீப்பு மூலம் செல்கின்றனர். இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள்,முதியோர் என அனைத்து தரப்பினரும் இயற்க்கையை கண்டுரசிக்கின்றனர். அடர்ந்த வனக்குட்டை, தடுப்பனைகள் மற்றும் சிறுத்தை நடமாடும் பகுதி ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். சிறுத்தை நடமாடும் பகுதி மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகள் செல்லவேண்டும் என்பதே வனத்துறையினரின் வேண்டுகோள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close