பத்மஸ்ரீ விருது: தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் யாரெல்லாம் தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 28 Jan, 2019 05:41 pm
padmashri-awardees-2019-in-tn

தேசிய அளவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் விபரம் பின்வருமாறு:-

பங்காரு அடிகளார்: 

தென்னிந்தியாவின் ஆன்மீகவாதியாக இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவியவர். மேலும், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார். தென்னிந்தியாவில் இவர்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். 

சரத் கமல் : 

சென்னையைச் சேர்ந்த பிரபல டேபிள் டென்னில் விளையாட்டு வீரரான இவர், தேசிய அளவில் 8 முறை சாம்பியன் பட்டம் பெற்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

2004ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 16வது காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான தனிப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து 2006, 2010ம் ஆண்டு நடைபெற்ற மன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம், 2018 காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்றார். 

நர்த்தகி நடராஜ்: 

மதுரையைச் சேர்ந்த திருநங்கை நர்த்தகி நடராஜ், தனது 10வது வயதில் உடல் உறுப்பு மாற்றங்களை அறிந்தார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கவேண்டும் என்று கருதி, பரதநாட்டியம் மீது ஈர்ப்பு கொண்டு பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, கற்றுத்தேர்ந்தார். 

தற்போது பயிற்சி பள்ளி வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்களை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது.

மதுரை சின்னப்பிள்ளை:

கிராம மக்களிடையே மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கி, அவர்களிடையே சேமிப்புப்பழக்கத்தை ஊக்குவித்து மற்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்பவர். இவரது களஞ்சியம் எனும் அமைப்பு தற்போது 14 மாநிலங்களில் விரிவடைந்துள்ளது. 

வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது அவரிடம்  "ஸ்திரீ சக்தி" எனும் விருது பெற்றவர் தான் இந்த சின்னப்பிள்ளை எனும் மூதாட்டி. இவர் மதுரை மாவட்டம் கள்ளந்திரி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். 

ஆர்.வி.ரமணி: 

கோயம்புத்தூரை பிறப்பிடமாக கொண்ட கண் மருத்துவரான ரமணி,  சங்கரா கண் மருத்துவமனை மூலம் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது இந்தியா முழுவதும் 10 கிளைகளை கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

80% ஏழை மக்களுக்கு , 20% பணக்காரர்களுக்கு என்ற விகிதத்தில் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆனந்தன் சிவமணி:

தமிழகத்தைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கலைஞரான சிவமணி, தனது 10 வயது முதல் ட்ரம்ஸ் வாசித்து வருகிறார். இரண்டு வெவ்வேறு ஜெனெரேஷன் என்று சொல்லப்படும் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹுமானுடன் பணியாற்றிய உலகப்புகழ்பெற்ற கலைஞர் இவர். 

மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி: 

மக்களுக்கு இலவச மற்றும் மிகக்குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளித்து சேவை புரிந்து வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close