கப்பல் தேவாலயம் எங்கு இருக்கு தெரியுமா....?

  இளங்கோ   | Last Modified : 29 Jan, 2019 11:49 am
ship-church-at-tirunelveli-special-story

மிக முக்கிய தேவ ஸ்தலம்மாக விளங்கும் கப்பல் மாதா தேவாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் தான் உள்ளது.  இவை உவரி என்னும் கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. மிகச்சிறப்பு வாய்ந்த இந்த தேவாலயம் 1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் உருவாக்கப்பட்டு, பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 

ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தினர். இங்கு பாளையக்காரர்களுககு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத் தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்து செயல்பட்டனர்.  திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டது. இந்து சமய புண்ணிய தலங்கள் அதிகம் உள்ள பகுதியாக இருந்ததால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தன. 

காலப்போக்கில் இங்கு கப்பல் மாதா தேவாலயத்தினால் மக்கள் கூட்டம் மற்றும் பெண்களுக்கான சடங்குகளினால் மிகவும் பிரபலமானது.  கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். இத்தேவாலயம் கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளதால், கப்பல் மாதா தேவாலயம் என போற்றப்படுகிறது.  

முதல் முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக சிதிலமடைந்திருந்தது.  அதன் பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு கட்டபட்டது. இத்தேவாலயம் சிதிலமடைந்தது பற்றி பல கதைகள்  சொல்லப்படுகின்றன. இங்கு பாரம்பரியமாக பெண்களுக்கென்று தனியாக சடங்குகள் செய்யப்படுகின்றன. 

இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுவதும் தங்கிச் செல்வது அவற்றில் ஒரு சடங்காக அனுசரிக்கப்படுகிறது. முன்பொரு நாள் இரவில் இங்குள்ள செல்வமாதாவின் திருச்சிலை மீது ஒரு பிரகாசமான ஒளி தோன்றி ஒருமணி நேரம் பிரகாசித்ததாக கூறப்படுகிறது. வேறு விளக்கோ மெழுகுவர்த்தியோ எரியாதபோது இவ்விதமான அதிசய ஒளி தோன்றிய செப்டம்பர் 18 ஆம் நாளை ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். 

இத்தேவாலயமானது கோவா கிறித்தவ துறவிகளால் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. இத்தேவாலயத்திற்க்கென்று தனி வரலாறுகள் ஏதும் இல்லை. எல்லாம் அங்கு இருப்பவர்கள் சொல்வதை வைத்தே அறியப்படுகிறது. இதை பற்றிய முழுவிவரங்களை யாராலும் அறியமுடியவில்லை. ஆனால் இத்தேவாலயம் நீண்ட வரலாறு உடையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close