யூக்கலிப்டஸ் மரத்தின் சிறப்புகள்...!

  இளங்கோ   | Last Modified : 30 Jan, 2019 05:59 pm
eucalyptus-tree-special-story

தைல மரம் (யூகலிப்டஸ் மரம்) என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும். பெரும்பாலும் நீலகிரி மலையில் தலைமரங்கள் பயிரடப்படுகின்றன. 

வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை. இம்மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரைதானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது.

யூக்கலிப்டஸ் விரைவாகவும், 20 முதல் 50 மீ  உயரம் வரையும் வளரக்கூடியது. மேலும் 2 மீட்டர் சுற்றளவு கொண்ட இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இதன் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்பையும் உடையவை. இம்மரமானது ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் பூக்கும் பருவத்திற்கு வரும்.

யூக்கலிப்டஸ்  தைல மரம் வறட்சிதாங்கும் தன்மையுடையதாக அறியப்பட்டாலும் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ஆண்டு மழையளவு குறைந்த பட்சம் 800 மி.மீ. தேவை. இவை வண்டல், சரளை, சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக்கூடியது. மண்ணின் ஆழம் ஒரு மீட்டருக்குக் குறைவாக இருக்கக்கூடாது. அதிக உவர் மற்றும் களர் நிலங்களிலும் வளராது. அதே போல் மண்ணின் அமிலகாரத்தன்மை 6 லிருந்து 8 வரை இருக்க வேண்டும். அதிக மண் அரிப்பு மற்றும் நீர் தேக்க நிலங்கள் கூடாது.

யூக்கலிப்டஸ் மர இலைகளில் இருந்து பல்வேறு வகையான தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை வலிநிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு சுட வைத்து குளித்தால் உடம்பில் உள்ள வலி நீங்கும் என்றும் கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close