ரஜினி சொல்வதை கேளுங்க ஸ்டாலின்..!

  பாரதி பித்தன்   | Last Modified : 31 Jan, 2019 11:50 pm
stalin-listen-what-rajini-says

ஊருக்கு எல்லாம் நல்லவராக இருப்பவர் பற்றி சொந்த அண்ணன் தம்பியிடம் கேட்டால் தெரியும், அவர் எந்த அளவிற்கு நல்லவர் என்பது. இதற்கு கருணாநிதியின் குடும்பம் விதி விலக்கு அல்ல. அந்த குடும்பத்தில் திட்டமிட்ட ரீதியில் ஸ்டாலின் நல்லவராகவும், அழகிரி மோசமானவராகவும் சித்தரித்தனர். அதன் பின்னரும் கூட கிளைச் செயலாளர், மாவட்ட செயலாளர் என்று தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களை நியமித்து படிப்படியாக கட்சியை கைப்பற்றினார் ஸ்டாலின். அதற்கப்புறமும், இவருக்கு அழகிரி மீது உள்ள பயம் அகலவில்லை என்பதை அவரை திமுக உள்ளேயே விடாதது காட்டுகிறது. 

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜி செய்யப் போகும் நன்மையை விடவா குறைவாக அழகிரி செய்யப்போகிறார். உங்களுக்காக கருணாநிதி கொலைப் பழி சுமத்தி வெளியேற்றிய வைகோவை நீங்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்கள், அவர் உங்களை முதல்வராக மாற்றிவிடுவார் என்று நம்புகிறீர்கள் (உங்களுக்கு ராசிகள் மீது நம்பிக்கை இல்லாத போது வைகோ ராசியை மட்டுமா நம்ப போகிறீர்கள்) அதை அழகிரி செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

இத்தனைக்கும் திமுகவில் ஸ்டாலினை நம்பி செயல்படும் தொண்டர்களை விட அழகிரியை நம்பி அவருக்காக எந்த எல்லை வரை செல்லவும் தயங்காதவர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் அவரின் உதவியால் தான் லோக்சபா தேர்தலில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற முடிந்தது. அதன் பின்னர் கூட இது தொடர்பாக எவ்விதமான சர்ச்சையும் எழவில்லை என்பது அழகிரியின் திருவிளையாடல் எந்த அளவிற்கு இருந்தது என தெரியும். 

சமீபத்தில் தந்தி டிவி வெளியிட்ட காலித் தொகுதிகள் குறித்த கருத்துக்கணிப்பில் திமுக 7 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. அதிமுக இரண்டாக உடைந்து, .ஜெயலலிதா இல்லாத நிலையில் 21 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால் கேள்வித்தாளை அவுட் செய்த பின்னரும் பெயில் மார்க் வாங்கும் மாணவருக்கு இணையாக 7 சீட் என்பது திமுகவின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று காட்டுகிறது. இந்த நிலையில் கூட நீங்கள் ஏன் அழகிரி பற்றி சிந்திக்க கூடாது. 

தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் ரஜினிகாந்த், அதனால் தான் அவரால் அழகிரியை சரியாக புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அழகிரிக்கு அவர் அரசியல் காலண்டரில் கடைசி நாள் என்பதே கிடையாது என்று வாழ்த்து சொன்னால் கூட அது ஸ்டாலினுக்கு விடப்படும் எச்சரிக்கை. தற்போது அழகிரி எந்த வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாத போதே திமுகவில் சேர்ப்பது உங்களுக்கு நல்லது. அப்படி இல்லாமல் இப்போதுள்ள நிலையில் திமுக வெற்றி பெறும் என்று நீங்கள் வழிநடத்த முற்படலாம். சட்டசபைத் தேர்தலில் ஆர்கே நகர் தேர்தல் அதிர்ச்சி போல சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கு எதிராத முடிவு ஏற்பட்டால் திமுகவில் உங்களுக்கு போட்டியே இருக்காது. நீங்கள் மட்டும் கட்சியில் இருக்கும் நிலையில் யார் போட்டியிடப் போகிறார். 

ஈகோ இல்லாமல் ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு ஆலோசனை கூறினீர்கள். முதலில் நீங்கள் ஈகோ பார்க்காமல் அழகிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் அது நாட்டிற்கு நல்லதோ இல்லையோ திமுகவிற்கு நல்லது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close