அண்ணாவின் அளப்பரிய சாதனைகள்!

  சாரா   | Last Modified : 03 Feb, 2020 03:46 pm
reforms-under-the-government-of-cn-annadurai

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் நிறுவனர் அறிஞர் அண்ணா, 1967ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தின் முதல்வராக பணிபுரிந்தார். அறிஞர் அண்ணாவின் தலைமையில், தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முக்கிய மாற்றங்களை பார்க்கலாம்...

இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த அறிஞர் அண்ணா, மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றும் சட்டத்தை நிறைவேற்றினர்.

நிதி நெருக்கடிக்கு இடையிலும், தனது தேர்தல் வாக்குறுதியான ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் கொண்டு வந்தார். இதனால், சுமார் 31 லட்சம் பேர் பயன்பெற்றனர்.

ஜமீன்தாரி முறை ஒழிப்பு திட்டத்தின் மூலம் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கபட்டன.

பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது உட்பட, போக்குவரத்தை முன்னிலைப்படுத்தி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தந்தை பெரியாரின் தலைமையில் ஊக்குவிக்கப்பட்ட சுயமரியாதை திருமணங்கள், சட்டபூர்வமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் துறைமுகத்தையும், சேலத்தில் இரும்பாலையையும் கொண்டு வர மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்.

புன்செய் நிலங்களில் மீதான நிலவரியை ரத்து செய்தார்.

ஏழைகளுக்கு இலவச பள்ளிக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார்.

மலேசியாவில் முதல் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது மாநாட்டை தமிழகத்தில் நடத்திக்காட்டினார்.

கல்வித்தரத்தை உயர்த்த பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புகளை தமிழகம் முழுவதும் உருவாக்க நடவடிக்கை எடுத்து, அதன்மூலம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வீட்டுமனைகள், சிறு தொழில் துவக்க வட்டியில்லா கடன், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, கலப்பு திருமணம் செய்வோருக்கு தங்க விருது வழங்கும் திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

விதவைத் திருமணம் செய்வோருக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் திட்டத்தை, அண்ணா தலைமையிலான தமிழக அரசு கொண்டு வந்தது.

பெண்கள் முன்னேற்றத்துக்காக, மகளிர் மன்றங்கள் மூலம் சிறு தொழில்கள், வேலைவாய்ப்பு, கல்வி உதவி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு பெரிதும் உதவுமாறு, தங்கும் விடுதிகளும் துவக்கப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close