இசை என்றால் என்ன...? (பகுதி-1)

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 11:24 pm
what-is-music-part-1

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகான ஒலி.  இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள் உண்டு. அனைத்து வகை உயிரினங்களையும் இசைய வைப்பதே இசை. இசையை சங்கீதம் என்றும் கூறலாம். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலி. 

படித்தவர் படிக்காதவர் என இசை எங்கு பரவி உள்ளது. பிறந்த குழந்தைக்கும் இசை. இறந்த உடலுக்கும் இசை.  இண்டர்நெட்டில் தினமும் பார்க்கப்படும் காணொளிகளில் சுமார் கால்பங்கு இசை சம்பந்தமான காணொளிகள் என்பதில் ஐயமில்லை.

இசையைப் பற்றி இனி தினமும் பார்க்கப்போகிறோம்... 

கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் சிந்துவெளி நாகரிகம் இருந்த காலத்திலிருந்து இருந்து வருகின்றன. 

இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று.  மிகப் பழமையானவையும், மிக அதிகளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் சீனாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவை கி.மு. 7000 – 6600ல் இருந்துள்ளன. 

இந்திய இசை, ஐரோப்பிய இசை, பாரசீக இசை, கிரேக்க இசை, எகிப்திய இசை, சீன இசை, அரபு இசை, என உலகில் பல்வேறு இசை முறைகள் உள்ளன.  இந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. 

கர்நாடக இசை, கவ்வாலி, கிராமிய இசை, இந்துஸ்தானி இசை, கசல், பழந்தமிழ் இசை போன்றவை இந்தியாவின் முக்கிய இசை மரபுகள் ஆகும். 

இந்திய இசை குறித்து நாளை பார்ப்போம்...

(தொடரும்...)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close