கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி? - பகுதி 2

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 15 May, 2019 08:45 pm
kamal-hassan-a-hindu-terrorist

சினிமா வசனத்தின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை, உங்களையும் என்னையும்விட பற்பல மடங்குகள் நன்கறிந்தவர் கமல்.

ஒரு நடிகன்! ஒரு பிரபலம்! ஒரு பேச்சாளர்! ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் பேச்சு சென்றடைவதை விட, பல நூறு மடங்காக ஒரு சினிமா வசனம் பட்டிதொட்டி, மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துவிடும் என்று தெரியாதவரா இந்த மகா கலைஞன்?

அப்படி இருக்கும் பொழுது, தன் சிந்தனையை வளர்த்த, ஈ.வெ.ராமசாமியின் தத்துவங்களை ஏன் தன் படங்களின் மூலம் மக்களுக்குச் சென்று சேர்ப்பிக்காமல் இருந்தார்? 

முழுநீள நகைச்சுவைப் படங்கள் தவிர்த்து, 1990க்கு பின் தயாரித்த எல்லா படங்களிலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு இறை துதிப்பாடலைத் தவறாமல் வைத்திருப்பதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். 

சினிமாவைச் சினிமாவாகப் பாருங்கள். அவரது சமூகப் பார்வையைத் தான் மேடைதோறும், சமூகவலைதள பதிவுகள் தோறும், அழுத்தமாகச் சொல்கிறாரே அது போதாதா? என்று நீங்கள் கேட்கலாம். 

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த வசனகர்த்தாவான கமல்ஹாசனால், அனைத்து தமிழ் மக்களுக்கும் புரியும் வண்ணம், ஒரு ட்வீட், ஒரேயொரு ட்வீட் கூட எழுதிப் போட முடியாதா? 

எத்தனை பெரிய வசனமாக இருந்தாலும், ஒரே டேக்கில் பிழையில்லாமல் தெளிவாகப் பேசத் தெரிந்த கமல்ஹாசன் அவர்களுக்கு, ஒரு மேடையில் கூட, ஒருமுறை கூட தெளிவாக, எளிமையாக தன் கருத்தினை பதிவு செய்ய முடியவில்லையா? அவசரமில்லை! நிதானமாக அசைபோட்டுப் பாருங்கள்.

ஆங்ங்ங்… முற்றிலும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. தான் வசனம் எழுதி நடித்த "தசாவதாரம்" படத்தில்,ஈ.வெ.ராமசாமியின் பெயரை உச்சரித்திருப்பார். எப்படி என்று நினைவிருக்கிறதா? 

அசின் : பெருமாளைத் தொடாதீங்கோ.. என்ன ஜாதியோ என்ன எழவோ…? உங்கப்பா பேரு என்ன?

கமல் : அதெதுக்கு இப்போ? ….ஓகே….ராமசாமி.

அசின் : ஓ... ஓ.கே.ராமசாமியா? 

கமல் : ஓ.கே. எல்லாம் இல்லீங்க. ராமசாமி நாயக்கர்.

அசின் : ஆஆஆ,,,ஐயய்யோ… அந்த ^$&*^$&&)(^$@*)!@$^ (எடுபட்ட பயலோ, எச்சக்கல பொறுக்கியோ என்பதாக வாயசைவு இருக்கும்) கிட்ட வராதேள் தள்ளிப் போங்கோ...

கமல் : (கொஞ்சம் அறுவறுப்பாக) ஐயய்யோ, எங்கப்பா பெரியார் எல்லாம் இல்லிங்க. ரொம்ப சிறியார். ஆனால் பெரிய கலைஞர்.

அசின் : (மீண்டும் ஷாக்காகி), கலைஞரா?

கமல் : (சலிப்புடன் பரிதாபமாக) இசைக் கலைஞர்ங்க…

தன் வழிகாட்டியான ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு கமல் காட்டிய திரை மரியாதை இதுதான்.

கமல்ஹாசன், தன் செயல்பாடுகளில் மிகவும் தெளிவாக இருந்து வந்திருக்கிறார். இறை சிந்தனை / தேசிய சிந்தனையை விதைக்கும் போதெல்லாம் எளிமையாகவும், தெளிவாகவும் மக்களிடம் சென்றடையும் உத்தியுடன் வசனம்/காட்சி படுத்தியிருப்பார்.

சமூகத்திற்கு உதவாத பெரியாரிய சிந்தனைகள் / கம்யூனிச சிந்தனைகளை விதைக்கும் போதெல்லாம்,எளிய மக்களைச் சென்று சேர்ந்துவிடாமல் கவனமாகக் குழப்பும் உத்தியையும் கையாண்டிருக்கிறார். (அவர் ட்விட்டர் மற்றும் மேடைப் பேச்சுகளைக் கவனிக்கவும்)

இதனை இரண்டு விதமாகக் கவனிக்கலாம். 

ஒன்று, பிறர் இயக்குநராக இருக்கும்,தன் சொந்தத் தயாரிப்புப் படங்களில் அல்லது தன் பினாமி டைரக்டர்களை வைத்து இயக்கும் படங்களில் முடிந்தளவு அதிகமாக இறை/தேசிய சிந்தனைகளைப் புகுத்தியிருப்பார்.

இரண்டு, தன் சொந்த இயக்கத்தில் எடுத்த திரைப்படங்களில், தன் பார்வையை முழுமையாகவும், மிகவும் அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியிருப்பார். 

கவனிக்கவும்..இப்படியான படங்களில் ஒருசிலவற்றைத் தவிர மற்ற எல்லா படங்களிலும் இவரே கதை வசனகர்த்தாவாக இருப்பார்.

இதெல்லாம் தேவர்மகனில் தொடங்கி, மகாநதி, ஹேராம், விருமாண்டி, அன்பேசிவம், தசாவதாரம் ஊடாக விஸ்வரூபம் வரை மிகவும் தீவிரமாக நிகழ்ந்தது. 

ஏனெனில், கமல்ஹாசன் என்ற கலைஞன் ஒரு தீவிர ஹிந்துத்துவர். வெளியே அறிவித்துக் கொள்ளாத தீவிர ஹிந்துத்துவர். 
என்னய்யா திரைப்படத்தில் சாமி பாட்டும் வசனமும் வைத்தால் ஹிந்துத்துவ தீவிரவாதியா? அப்ப மறைந்த டைரக்டர் ராமநாராயணன் என்ன பஜ்ரங்தள் ஆசாமியா என்று கேட்பவர்கள்,  அடுத்த கட்டுரையிலிருந்து வாயடைத்துப் போவீர்கள்.

ஏனென்றால், திரு.கமல்ஹாசன் அளவிற்கு முஸ்லீம் பயங்கரவாதத்தால் ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டதை தமிழ் சினிமாவில் வேறு யாரும் விவரித்ததில்லை…

காத்திருங்கள்….

இந்த தொடரில் இடம் பெறும், அனைத்து கருத்துக்களும், கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

 

newtm.in


   
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close