திமுகவிற்கு தேவை கூவத்துார் விடுதி...!

  பாரதி பித்தன்   | Last Modified : 08 Feb, 2019 09:36 pm
dmk-needs-koovathur-guest-house

சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவது சட்டசபை எம்எல்ஏகளின் இடைத்தேர்தல் தான். தேர்தல் காசை உடனே எடுத்து விடலாம். அப்புறம்  அடுத்த 5 ஆண்டுகள் கிடைப்பதெல்லாம் டீ செலவுக்கு ஆகும். இதற்கு எந்த மாநில, மத்தியில் ஆளும் கட்சிக்கும் விதி விலக்கு அல்ல. வாஜ்பாய் தோற்றது, கதறி கதறி அழுத பின்னரும் விபி சிங் வெற்றி பெற முடியாதது, தேவேகவுடா கடைசி நிமிடத்தில் பிரதமரை மாற்றியது போன்ற சில சம்பவங்கள்  லென்ஸ் வைத்து தேடினால் கிடைக்கலாம். 

பொதுவான நடை முறை வேறுதான்.  திருப்பூரில் பனியன் கம்பெனிகளில் ஜாப் டெலிவரி ஆக வேண்டிய நாள் நெருங்க நெருங்க பரபரப்பு ஏற்படும். தொழிலாளர்கள் கூலி உயரும். இந்த தகவல்களை டீக்கடையில் தனது பக்கத்து கம்பெனிகளில்வேலை செய்பவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். கூலி கூட இருந்தால் அவர் அந்த டீ கிளாசை வைத்து விட்டு தகவல் சொன்ன நண்பரின் கம்பெனியில் நேராக சென்று வேலையில் சேர்ந்து விடுவார். இது தான் எம்பி, எம்எல்ஏகள் நிலை. இதனால் அவர்கள் சிந்தாமல் சிதறாமல் ஓட்டுப் போட வைக்க கூவத்துார் பங்களாக்கள் தேவைப்படுகின்றன.
 
இப்போது லோக்சபா தேர்தல் சீசன். அணியை விட்டு வெளியேற எம்பி, எல்எல்ஏவினர் முயலமாட்டார்கள். அதற்கு பதிலாக கட்சிகள் வெளியேறும். அப்போது வெற்றிவாய்ப்புக்கு சங்குதான்.  இதனால் இப்போது கூவத்துார் விடுதிக்கு கூட்டி செல்ல வேண்டியவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் தான். 

இந்த லோக்சபா தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் நிலையில் திமுக தான் இருந்தது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிய உடன் திமுகவின் வெற்றி வாய்ப்பு படிப்படியாக இறங்கிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் ஸ்டாலின், 3-பால், 6-ரன் என்று ஒரு நாள் கிரிக்கெட்டில் கூறுவது போல தேர்தல் களத்தில் உள்ளார். 

இந்த சூழ்நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான்.  அதனால் துரைமுருகன் போன்றவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை கூட்டணியில் தக்க வைக்க முடியும்.
 
கடந்த காலத்தில் கலைஞர் இதயத்தில் இடம் இருக்கு என்று சொன்னால் கூட கட்டுப்பட்ட கட்சிகள் இத்தனை சீட்டு வேண்டும், அதுவும் இந்த  இந்த சீட்டு .வேண்டும் என்று கேட்கும் நிலை உள்ளது. 

இதனால் அதிமுக கூவத்துாருக்கு கூட்டி சென்றது போல ஸ்டாலின் கூவத்துார் விடுதியை தேடுவது நல்லது. இந்த கூவத்துார் விடுதி என்பது போராட்டங்கள் தான். கருணாநிதி சிலை திறப்பு, விடுதலை சிறுத்தைகளின் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு போன்றவற்றை அடிக்கடி நடத்த வேண்டும். இதில் அனைத்து கூட்டணிக் கட்சியினரையும் கலந்து கொள்ள செய்யலாம். அப்படி நடக்கும் போது நம்ம கூட்டணியில் இருக்கிறார்கள் என்று திமுகவிற்கு, அவர்களுக்கு கழட்டி விடமாட்டார்கள் என்று பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்தும்.  மேலும் கூட்டணி, தோழமை கட்சிகளை மற்றவர்கள்  அவ்வளவு லேசில் வலை வீசி பிடிக்க முடியாது. 

அதே போல கடைசி நேரத்தில் சால்வை அணிவித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளையும் ஆங்காங்கே நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள செய்வதன் மூலம் அவர்களையும் ஏதோ ஒருவித்தில் கவர்ந்து இழுக்கலாம். 

வாய்ப்பு இருந்தால் ஊராட்சி சபைக் கூட்டத்தில் அனைவரும் சேரந்து கலந்து கொள்ளலாம். கட்டப்பஞ்சாயத்தில் பத்து பேர் இருப்பது இல்லையா. அதே போல ஸ்டாலின், அழகிரி (காங்கிரஸ் தலைவர், நீங்க யாரையாவது நினைத்து கொள்ளலாதீர்கள்) பாலகிருஷ்ணன், திருமாவளன், முத்தரசன் என்று அனைவரையும் ஒரே ஊராட்சி சபை கூட்டத்தில் இருப்பதை நினைத்து பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது.
 
திமுக குறிப்பிடத்தக்க வெற்றி பெற வேண்டும். ஆர்கே நகர் போல ஏமாந்துவிடக் கூடாது என்று நமக்கு தெரிந்த யோசனைகளை சொல்லிவிட்டோம். கேட்பதும் கேட்காததும் அவர்கள் பாடு. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close