இஸ்லாமிய சகோதரர்களே... தயவு செய்து இதையும் செய்வீர்களா...? 

  பாரதி பித்தன்   | Last Modified : 10 Feb, 2019 07:30 pm
airticle-about-hndu-muslim-relationship

‛என் மார்க்கம் எனக்கு, உன் மார்க்கம் உனக்கு’ என்று நபிகள் நாயகம் கூறி உள்ளார். இதை, இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டால் மதமாற்றம் என்பதே இருக்காது. வேறு சில வசனங்களை கூறி, அவர்களில் சிலர் மதமாற்றத்தை தங்கள் கடமையாக மாற்றிக் கொண்டு உள்ளனர். 

இதை தடுக்கும் போது தான், பிரச்னைகள் எழுகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் தான், திருபுவனத்தில் கடந்த, 5ம் தேதி நடந்தது. தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சில இஸ்லாமியர்கள், ஆதிதிராவிடர் பகுதியில் சென்று, இஸ்லாமிய மார்க்கம் இனிய மார்க்கம் என்று பிரச்சாரம் செய்தனர்.

இதை, அந்த பகுதியை கடந்து சென்ற ராமலிங்கம், அங்கு நடந்த மதமாற்ற பிரசாரத்தை தட்டிக் கேட்கிறார்.
அன்று இரவே, அவர் வெட்டிக் கொல்லப்படுகிறார். 

சிறு குழந்தைகள் கூட  மதமாற்றத்தை தடுத்ததால் தான் கொல்லப்பட்டார் என்று கூறிவிடும்.  சில இஸ்லாமிய அமைப்புகள், ‛உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். ராமலிங்கம் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன. அதன் காரணமாகக் கூட கொலை செய்து இருக்கலாம்’ என்று கூறுகின்றனர்.

 அவர் மீது எத்தனையோ வழக்குகள் நிலுவையில் இருந்தாலும்,  மதபிரச்சாரத்தை தட்டி கேட்கும் அதே நாளில், அன்று இரவே அவர் கொல்லப்படுகிறார். வேறு நாட்களை ஏன் குற்றவாளிகள் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வியே, இதற்கான பதில் அளிக்கும்.
 
ராமலிங்கம் கொலைக்கு மட்டும் அல்லாமல், தமிழகத்தில் நடந்த இந்து இயக்கத்தலைவர்கள் கொலை, கோவை குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்த போது,  இந்துக்கள் அனைவரும் அமைதியாகத் தான் இருந்து வருகின்றனர். அதுவே அவர்களின் பொறுமைக்கும், மத சகிப்பு தன்மைக்கும் சான்று. 

சரி, இஸ்லாத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாதா என்று பார்த்தாலே எப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள் என்று தெரியும். 

கடந்த சில நுாற்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் இஸ்லாமிய தலைவர்கள் குறைவாக, இந்துக்கள் அதிகமாக இருந்தனர். அப்போது, இஸ்லாமியர்கள் இலகுவாக மாற்று மதத்துடன் கலந்து விடுவார்கள்.  

அவர்களை தடுத்து,   தங்கள் மார்க்கத்திலேயே நடமாட செய்ய வேண்டும் என்பதற்காக, இஸ்லாமி பெரியவர்கள், ஞானிகள் ஒன்றிணைந்து   தப்லீக் ஜமா அத் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 

அவர்கள மாதத்திற்கு 3 நாள், ஆண்டிற்கு 40 நாள் என்று கணக்கு வைத்துக் கொண்டு, பள்ளிவாசலுக்கு வராத இஸ்லாமியர்களை சந்தித்து. அவர்களை தங்கள் மார்க்கத்தை நோக்கி திருப்பும் வேலையை தான் இவர்கள் செய்கிறார்கள். 

 

ஆனால் மார்க்க அடிப்படையில் இவர்கள் வேறு பட்டு நிற்பதால், தமிழகத்தில் உள்ள அதனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அவர்களை எதிர்க்கிறார்கள். தப்லீக் ஜமா அத் போகாதீங்க அவர்கள் மார்க்கத்தை திசை திருப்புகிறார்கள். உண்மையான இஸ்லாமியர்களே அல்ல என்று கூச்சல் இடுகிறார்கள். 

அதற்கு ஏற்ப, ஹதீஸ் குரான் வசனங்களை எடுத்து ஓதுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி, காயல்பட்டணத்தில் தப்லீ்க் ஜமாத் அமைப்பினர் இஸ்லாத்தை பரப்ப சென்ற போது, ராமலிங்கத்திற்கு இணையாக ஒரு பெரியவர் வெளுத்துவாங்குகிறார்கள். 

அவர் எந்த அமைப்பையும் சேராதவர்கள் போல தெரிகிறது. ஆனால் அவர் விமர்சனம் செய்வது, ராமலிங்கத்திற்கு இணையாகதான் இருக்கிறது. அங்கு, பெண்களுக்கு என தனிப்பாதை இருக்கிறதாம். அதன் வழியாக தப்லீத் ஜமாத்தார்கள் சென்றது குறித்து கடுமையாக கண்டிக்கிறார்கள். 

ஆனால் இவர்கள் தான் இந்துக்கள் வீதிகளில் சர்வ சுந்திரமாக அலைகிறார்கள். அதை, இந்துக்கள் தடுத்தால் கொலை செய்கிறார்கள். இவர்களுக்குள் பேதம் என்றால் வாக்குவாதத்துடன் விட்டு விடுபவர்கள், ராமலிங்கம் போன்றவர்களை வெட்டிக் கொல்வது என்ன நியாயம். 

இது போன்ற சம்பவங்கள் நடக்க நாம் அவர்களை பாய், பாய் ( பாய் என்றால் சகோதரன்) என்று நெருங்குவதும், அவர்களின் ஓட்டுக்கள் ஒட்டு மொத்தமாக கிடைக்கும் என்ற நப்பாசையில், இது போன்றவை நடக்கும் போது அனைத்து கட்சிகளும் கண்டிக்காததும் தான் காரணம். 


இதே நிலை நீட்டித்தால், தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் கூறியதைப் போல, மதமாற்றத்தை தடுப்பவன் மட்டும் அல்லாமல், மறுப்பவன் கூட கொல்லப்படும் காலம் வரும். 

காவல்துறை இது போன்றவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்தால் தான் அல்லா கூறியதைப் போல, உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு என்ற கொள்ளை தமிழகத்தில் நடைமுறைக்கு வரும். 

அதே போல உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறும் இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக உள்ளூர் ஜமாத்கள் இந்த காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

எப்படி தப்லிக் ஜமா அத்திற்கு சென்றால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள், குடும்பத்தை பார்க்க மாட்டார்கள் என்று பொங்கி எழுகிறீர்களோ ,அப்படியே இது போன்ற சட்ட விரோத செயல்கள் செய்பவர்களை, ஜமாத் கண்டித்து, தேவைப்பட்டால் விலக்கி வைக்க முன்வர வேண்டும். 

அப்படி அவர்கள் செய்தால், அது உண்மையில், இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.

newstm.in

இந்த கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளின் சொந்த கருத்துக்களே.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close