இசைப்பயணம்-4... ஆர்மோனியம் வரலாறு !

  டேவிட்   | Last Modified : 11 Feb, 2019 08:21 pm
about-music-4-harmonium

ஆர்மோனியம் (ஆங்கிலத்தில் ஹார்மோனியம்) என்பது விசைப்பலகை வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் வாயிலாக காற்று செல்லும் போது ஒலி உருவாகிறது. துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் சென்று ஒலியை எழுப்புகிறது. இவை உறிஞ்சு துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன கருவிகளையே ஆர்மோனியம் என அழைக்கின்றனர். கால்களால் இயக்கப்பட்டு வந்த ஆர்மோனியம் தற்போது கைகளால் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. 

பிரெஞ்சு நாட்டின் அலெக்சாண்டர் தெபைன் என்பவர் 1840ஆம் ஆண்டில், முதன் முதலாக ஆர்மோனியத்தை உருவாக்கினார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், மேலை நாடுகளில் ஆர்மோனியத்தின் பயன்பாடு உச்ச நிலையில் இருந்து வந்தது. ஆர்மோனியம் வடிவில் சிறியதாகவும், எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும் இருந்தது. மேலும் இதன் விலையும் குறைவாக இருந்ததால், இதைக் கற்றுக் கொள்ளவும், வாங்கவும் பலரும் விரும்பினர். பெரும்பாலும் தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்டது. 

1930களில் மின்னணு ஆர்கன்களின் அறிமுகத்துடன் மேலை நாடுகளில் ஆர்மோனியத்துக்கான வரவேற்பு குறைய ஆரம்பித்தது. Hammond organ எனப்படும் மின் ஆர்கன், குழாய் ஆர்கன்களின் ஒலிப் பண்பைக் தரக்கூடியதாக இருந்தது. இதன் விலை, அளவு ஆகியவற்றில் ஆர்மோனியத்துடன் ஒப்பிடக் கூடியனவாகவும் இருந்தது. பெருமளவில் ஆர்மோனியத்தைத் தயாரித்து வந்த எசுட்டே கம்பனி தனது உற்பத்தியை 1950க்குப் பிறகு நிறுத்திக் கொண்டது. 

ஆர்மோனியத்தில் இருந்து பியானோ, கீபோர்டு என்று வந்துவிட்டாலும், இன்னும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் ஆர்மோனியம் பயன்பாட்டில் தான் உள்ளது. மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா போன்றோர் இன்னமும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆர்மோனியம் பயன்படுத்தி தான் வருகின்றனர். 

ஆர்மோனியத்தில், பல உறுப்புகள் உள்ளன. அவற்றின் மீது காற்று உரசிச் செல்லும்போது ஒலி எழுப்பும் உலோக நாக்குகள், காற்றைச் செலுத்தும் அமைப்பு, சுருதிக் கட்டைகள், விசைப்பலகை என்பன இவற்றுள் மிக முக்கியமானவை.  19ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பிரான்சில் உருவாக்கப்பட்ட, கையால் இயக்கிக் காற்றுச் செலுத்தக்கூடிய ஆர்மோனியங்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். இலகுவாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத்தக்கதாகவும், கற்றுக்கொள்வதற்கு சுலபமாகவும் இருந்ததனால் விரைவிலேயே இது மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு இசைக்கருவி ஆனது. இந்தியாவின் பல விதமான இசைகள் தொடர்பில், இன்றுவரை ஆர்மோனியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகமானாலும், இந்திய இசையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பலவிதமான மாற்றங்களை இந்திய ஆர்மோனியம் பெற்றுள்ளது.

இசைக்கு முதல் வாத்தியம் ஆர்மோனியம் என்றும், ஆர்மோனியம் இல்லாமல் சங்கீதம் சொல்லிக் கொடுக்கவும் முடியாது, கற்றுக் கொள்ளவும் முடியாது என கூறப்படுகிறது. 

(தொடரும்)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close