அம்பிகாபதி- அமராவதி காதல் காவியம்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 04:16 pm
ambikapathy-amaravathy-love-story


நமது மண்ணிலேயே எண்ணற்ற காதல் காவியங்கள் இருக்கும் போது நாம் அன்னிய நாட்டின் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறையில் உருவெடுத்தது தான் அம்பிகாபதி, அமராவதி காதல். காதலில் வெற்றி பெற்று அமராவதியை மணக்க விதிக்கப்பட்ட நிபந்த‌னையில் வெற்றி பெற இருந்த சில நொடிகளில் காதலி உணர்ச்சிவசப்பட்டதால் காதலன் கொல்லப்பட்டான். அது போலவே இப்போதும் பல சம்பவங்கள் நடந்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே காதலர்கள் பொறுமையுடன் இறுதி வரை போராடி வெற்றி பெற வேண்டும் என்பதே இன்றைய தலைமுறை காதல் ஜோடிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். இப்போது அந்த காதல் காவியத்தை காண்போமாக....

ஒன்பதாம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்று கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும் என்று நம் அனைவராலும் புகழப்படும் கவி சக்கரவர்த்தி கம்பர். இவரின் மகன்தான் இன்று காதலுக்கு உதாரணமாக அனைவரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அம்பிகாபதி. இவர் வாழ்ந்த காலத்தில் ஆட்சியில் செல்வ செழிப்புடன் திகழ்ந்த மன்னன் குலோத்துங்கச் சோழனின் குடும்பத்து இளவரசிதான் இந்த அமராவதி. இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்பதை பார்க்கலாம்

அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக மன்னர் குலோத்துங்கச் சோழன், கம்பர் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பர் ஒர் அவசர வேலையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை என் மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணம்.

கம்பர் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கியிருக்கிறது. கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது இருவரும் மிகவும் காதலில் மூழ்கிப்போனது கம்பனுக்கு தெரிய வந்ததாம் .இவர்களின் காதல் விவகாரம் மன்னனின் காதுக்கு எட்டியதும் மிகுந்த கோபம் கொண்ட மன்னன் அம்பிகாவதியை சிறை பிடிக்க உத்திரவிட்டார்.

அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மற்றொரு கவிஞரான ஒட்டக்கூத்தர், கவிச்சக்ரவர்த்தியின் மகனான அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச் செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை.

முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோல்வியுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது. சபையோர் முன்னிலையில் 100 பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை. நூறு பாடல்களை அம்பிகாபதி இயற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் காமரசம் துளியும் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம்.

இந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஓர் மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்களை எண்ணிக்கொண்டே வந்தாள். அமராவதி பிழையாக ஒரு மலரைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறைவாகவே பாடி நிறுத்திவிட்டாராம்.

100 பாடலும் முடிந்துவிட்டது தன் காதலன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற எண்ணத்தில் அமராவதி அம்பிகாபதியை நோக்கி ஓடிவர அவளின் அழகில் மயங்கி சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந் துற்றே என காமரசம் ததும்பும் பாடலொன்றைக் பாடிவிட்டான். இந்த பாடலுடன் அவன் 100 பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல் பாடல் கடவுள் வாழ்த்து ஆதலால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டுமே. அமராவதி இதையறியாமல் அவசரப்பட்டுவிட்டாள். ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அம்பிகாபதிக்கு மரணதண்டனை என தீர்ப்பு விதிக்கப்பட்டது. அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் அந்த இடத்திலேயே மரித்துப் போனாள். இதுதான் அமரத்துவம் வாய்ந்த காதல்  என்று நாம் கூறவேண்டும். இலக்கை எய்தினான் அம்பிகாபதி.  அதற்கான தகுதியும் அவனுக்கு இருந்தது. காதலி அமராவதியின் அவசரத்தினால் கிடைத்த வாய்ப்பு பறிபோனது. இருவரும் கிட்டத்தட்ட இணைந்தே மரணத்தைத் தழுவினர். இங்கு அவர்களது காதல் தோற்கவில்லை. அமரத்துவம் அடைந்தது.வாழ்க அம்பிகாபதி அமராவதி காதல்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close